“ஒரு தனிநபரின் தவறுக்காக ஒட்டுமொத்த அமலாக்கத் துறையையும் குறைகூறக் கூடாது என்று அண்ணாமலை[பாஜக] கூறியுள்ளார்.” [https://www.hindutamil.in/news/tamilnadu/1162229-can-t-paint-entire-ed-in-ankit-tiwari-row-tn-bjp-chief-annamalai.html].
பக்கங்கள்https://kadavulinkadavul.blogspot.com/p/blog-page_1.html
- 'பசி'பரமசிவம்
- அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.
ஞாயிறு, 3 டிசம்பர், 2023
ஊழலில் திளைப்பது ‘ஒட்டுமொத்த’ அமலாக்கத் துறையினரும் அல்ல, 99% பேர் மட்டுமே!!!
நஞ்சு நீக்கும் இஞ்சி! தினமும் தின்றால் தீரும் பல நோய்கள்!!
தினமும் உணவில் இஞ்சியைச் சேர்ப்பதால் பல நன்மைகள் விளைகின்றன. https://www.tips-and-tricks.co/health/happens-body-eat-ginger/2/
*உடலில் ஏற்படும் வீக்கம் வேகமாகக் குறையும். இதற்கு, இஞ்சியின் ‘அழற்சி எதிர்ப்பு விளைவு’ காரணமாகும்.
*தினமும் உணவுடன் இஞ்சி சேர்த்தால் குமட்டல் பிரச்சினை தீரும். குறிப்பாக, கர்ப்பிணிப் பெண்களும் கீமோதெரபிக்கு உட்பட்டவர்களும் இதன் மூலம் குணம் பெறலாம்.
*இஞ்சி சேர்ப்பதால் உடல் வலி படிப்படியாக அகலும்.
*இது குடல் இயக்கத்திற்கு மிகவும் நல்லது. தொடர் மலச்சிக்கலைப் போக்கும்.
*இஞ்சி சேர்ப்பது மசாலா வலி மருந்துகளை எடுத்துக்கொள்வதைப் போன்றது என்பதால் கடுமையான வயிற்று வலியைப் போக்க இது உதவும்.
*ஒரு மாதத்திற்குத் தினமும் உணவில் இஞ்சி சேர்ப்பது உடலில் உள்ள ‘கெட்ட’ கொழுப்பைக் குறைக்க உதவும்.
*இரத்தத்தில் உள்ள ட்ரைகிளிசரைடுகளின்[தேவைக்கு அதிகமான கொழுப்பால் உருவாவது] அளவு இஞ்சியில் உள்ள பொருட்களால் குறைக்கப்படுகிறது.
*இஞ்சியில் உள்ள ‘அழற்சி எதிர்ப்புப் பண்புகள்’ நோயெதிர்ப்பு மண்டலத்தைப் பலப்படுத்துகின்றன.
*சளி அல்லது வைரஸால் ஏற்படும் பாதிப்புகளை இஞ்சி நீக்குகிறது.
ஆகவே, இஞ்சியை உணவோடு சேர்த்து உண்பதில் கொஞ்சமும் தயக்கம் காட்டாதீர்!
குறிப்பு:
கட்டுரையின் ‘வழவழா’ தொடர்கள் நம் மொழி மரபுக்கேற்ப மாற்றியமைக்கப்பட்டு, சுருங்கிய வடிவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
