பக்கங்கள்

அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

ஞாயிறு, 3 டிசம்பர், 2023

ஊழலில் திளைப்பது ‘ஒட்டுமொத்த’ அமலாக்கத் துறையினரும் அல்ல, 99% பேர் மட்டுமே!!!

ஒரு தனிநபரின் தவறுக்காக ஒட்டுமொத்த அமலாக்கத் துறையையும் குறைகூறக் கூடாது என்று அண்ணாமலை[பாஜக] கூறியுள்ளார்.” [https://www.hindutamil.in/news/tamilnadu/1162229-can-t-paint-entire-ed-in-ankit-tiwari-row-tn-bjp-chief-annamalai.html].

தூத்துக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை, “லஞ்சம் வாங்கியதாக அமலாக்கத் துறை அதிகாரி ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். இது முதல் கிடையாது, கடைசியாகவும் இருக்கப் போவதில்லை. ராஜஸ்தான், மேற்கு வங்கம், டெல்லி என்று பல மாநிலங்களில் இதுபோல் கைது நடவடிக்கைகள் நிகழ்ந்துள்ளன. ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் அவரைப் பொறிவைத்துப் பிடித்துள்ளனர். இவ்வாறாகப் பிடிக்கும் அதிகாரம் அத்துறைக்கு உள்ளது. சிக்கிய பின்னர் அவர்கள் சம்பந்தப்பட்ட துறைக்குச் சொல்லிக்கொள்ளலாம். அதனால் இந்தக் கைதோ, ஊழல் தடுப்புத் துறையின் நடவடிக்கையோ நியாயமானதே. இதை மறுப்பதற்கு இல்லை” என்றும் கூறியிருக்கிறார்.

அண்ணாமலையின் நேர்மை பாராட்டுக்குரியது. ஆனால்.....

ஒரு தனிநபரின் தவறுக்காக ஒட்டுமொத்த அமலாக்கத் துறையையும் குறைகூறக் கூடாது” என்று ஒட்டுமொத்த அமலாகத் துறைக்கு அவர் வக்காலத்து வாங்கியிருப்பதுதான் அடிமனதை நெருடுகிறது.

‘அங்கித் திவாரி’யையும் இன்னும் சிலரையும் முன்னுதாரணமாக்கி, நம் மக்கள் ஒட்டுமொத்த[100%] அமலாக்கத் துறை அதிகாரிகளையும் சந்தேகிக்கமாட்டார்கள் என்றாலும், அவர்களில் மிகப் பலரை, அல்லது, 99% நபர்களைச் சந்தேகிக்கலாம்தானே?

ராஜஸ்தான், மேற்கு வங்கம், டெல்லி என்று பல மாநிலங்களில் லஞ்சம் வாங்கியவர்கள் பிடிபட்டது போல, ஏனைய மாநிலங்களிலும் ஊழல் பெருச்சாளிகள் பிடிபட்டால், 99% அதிகாரிகளையும் சந்தேகிக்க வாய்ப்பிருக்கிறது[ஆட்சியாளர்களின் ஒத்தாசை இருந்தால், ஒட்டுமொத்தத் துறையும் ஊழல் மயமாகும்].

அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டம், 1999(FEMA) மற்றும் பணமோசடித் தடுப்புச் சட்டம், 2002(PMLA) ஆகிய இரண்டு நிதிச் சட்டங்களின் விதிகளைச் செயல்படுத்த இந்தப் பிரிவிற்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

மக்களில் சிலரோ பலரோ செய்யும் மோசடிக் குற்றங்களைத் தடுக்க வேண்டிய அமலாக்கத் துறை அதிகாரிகளே மோசடியில் ஈடுபடுவதை அறியும் பொதுமக்கள், “இன்னும் இப்படிப் பலரும், அல்லது அத்தனைப் பேரும் ஊழல் பெருச்சாலிகள்தானா?” என்று சந்தேகிக்கவே செய்வார்கள், ‘புற்றிலிருந்து ஒரு பாம்பு வெளிப்பட்டால், அதனுள்ளே இன்னும் பல நச்சுப் பாம்புகள் இருக்கக்கூடும்’ என்பது போல.

ஆகவே, தலைவர் அண்ணாமலை அவர்களே, ஊழல் செய்த திவாரி கடுமையாகத் தண்டிக்கப்படுதல் வேண்டும் என்று சொன்ன நீங்கள், ஒட்டுமொத்த அமலாக்கத் துறை அதிகாரிகளும் பரிசுத்தமானவர்கள் என்பது போல் பேசியிருப்பது, ஊழல் செய்து மாட்டிக்கொள்ளாமல் பதுங்கியிருக்கும் படு கில்லாடிப் பேர்வழிகளுக்கு ‘யோக்கியர்’ சான்றிதழ் வழங்கியதற்கு ஒப்பாகும்.

 “இனியேனும், இம்மாதிரியான அறிக்கைகளை[பேட்டி] வெளியிடுவதற்குமுன் கொஞ்சமேனும் யோசியுங்கள்” என்பது எம் வேண்டுகோள்!