‘தீபாவளி என்பது, 100% கற்பனையான ஒரு புராணக் கதையிலிருந்து[அப்போது இருந்திராத நரகாசுரனை எப்போதும் இல்லாத கிருஷ்ணப் பரமாத்மா வதம் செய்தது] உருவாக்கப்பட்ட ஒரு கொண்டாட்ட நாள்[பண்டிகை] ஆகும்.தீமையை எதிர்த்துப் போராடி வெல்வதற்கான ‘தில்’ இல்லாமல், கதைகளில் அது நிகழ்த்தப்படுவதை வரவேற்றுக் குதூளிகளிக்கும் நம் மக்கள் இதைக் கொண்டாடுவது வியக்கத்தக்கதல்ல.
அரசியல் தலைவர்கள் இந்தக் கூத்துக்கு வாழ்த்துத் தெரிவிப்பதும் வழக்கமாகிப்போன ஒன்று.
கீழ்க்காண்பது* மூடநம்பிக்கை வளர்ப்பில் அடுக்கடுக்காய்ச் சாதனைகள் நிகழ்த்திய நம் பிரதமர் மோடி தெரிவித்துள்ள தீபாவளி வாழ்த்து.
வாழ்த்தின் பிற்பகுதியில், /‘ஒளி தீபங்களை[அறிவொளி?] மலரச் செய்து உணர்வு எனும் விளக்குகளை ஏற்றுவோம்’/ என்று அவர் கூறியிருப்பதே போதுமானதாகும்.
/‘ராமர் அநீதியை எதிர்த்துப் போராடும் பலத்தைத் தருகிறார்’/ என்று முற்பகுதியில் கூறியிருப்பதுதான் நகைப்புக்கிடமானதும்[தன் இறுதி மூச்சுவரை இவரே இந்தியாவின் பிரதமராக நீடிக்க ராமன் அருள் புரிவானாக] தன்னம்பிக்கையைச் சிதைப்பதுமான செயலாகும்.
மோடியின் வாழ்த்துச் செய்தி:
//“அயோத்தியில் ராமர் கோவில் கட்டி எழுப்பிய பிறகு வரும் 2ஆவது தீபாவளி. ராமர் அநீதியை எதிர்த்துப் போராடும் பலத்தைத் தருகிறார். ஆபரேஷன் சிந்தூர் இதற்குத் தலைசிறந்த உதாரணம். நாடு முழுவதும் ஒளி தீபங்களை மலரச் செய்து உணர்வு எனும் விளக்குகளை ஏற்றுவோம்” என அவர் பெயரில் வெளியான வாழ்த்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது// -ஊடகச் செய்தி.
* * * * *
