எனது படம்
“எல்லாம் அவன் செயல்” என்பவர்கள் ஆறறிவின் வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பவர்கள். இவர்களின் எண்ணிக்கை பெருகப் பெருக மூடநம்பிக்கைகளின் அளவும் அதிகரிக்கிறது. நாட்டை ஆள்வதற்கான தகுதியே இல்லாத சுயநலவாதிகள் இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறார்கள். மூடத்தனங்களிலிருந்து மக்கள் முற்றிலுமாய் விடுபடும்போதுதான் நாடு உண்மையில் சுதந்திரம் பெற்றதாக ஆகிறது.

சனி, 7 பிப்ரவரி, 2026

இன்னொரு ‘சவக்குழி’ தேவையில்லை பிரதமரே!!!

 காங்கிரஸ் கட்சியால் தனக்குச் ‘சவக்குழி’ தோண்ட முடியாது என்கிறார் நம் மதிப்பிற்குரிய பிரதமர் மோடி.

அது முடியுமோ முடியாதோ, தோண்டும் வேலையைக் காங்கிரஸ் செய்யத் தேவையில்லை என்பதே நம் எண்ணம்.

அடிக்கடிப் பொய் சொல்லுதல்[ராகுல் காந்தி குற்றச்சாட்டு], வாயால் வடை சுடுதல், பிரச்சினைகள் பெரிய அளவில் தலைதூக்கும்போது ஓடிப்போய்ப் பதுங்குதல், பெரும்பாலான நாட்களில் பெரிய பெரிய நாடுகள் மட்டுமல்லாமல், குட்டிக் குட்டி நாடுகளுக்கெல்லாம் சுற்றுலாச் செல்லுதல் என்று மக்களால் வெறுக்கத்தக்கன செய்து, தனக்குத்தானே அவர் மிகப் பெரியதொரு குழியை ஏற்கனவே தோண்டி வைத்துவிட்டார் என்பதால், புதிதாக ஒரு குழியைக் காங்கிரஸ் தோண்டுவது தேவையற்ற வெட்டி வேலையாகும்.

பிரதமரின் மனதில் சவக்குழி குறித்த எண்ணமே இனி எழுதல் கூடாது என்பது நம் விருப்பம்.

வாழ்க நம் பிரதமர்! நீடூழி வாழ்க நரேந்திர மோடி!!