எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

திங்கள், 6 அக்டோபர், 2025

காலணி வீசி உ.நீ.மன்றத் தலைமை நீதிபதியை அவமதித்த சங்கிக் கசடன்!!!

ங்களைச் சனாதனிகள் என்று சொல்லிக்கொண்டு மூடத்தனங்களை வளர்க்கும் ‘பாஜக’ கூட்டத்துச் சங்கி[உச்ச நீதிமன்ற வழக்குரைஞன்] ஒருவன், பகுத்தறிவாளரும் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியுமான பி.ஆர்.கவாய் அவர்கள் மீது காலணியை வீச முயன்றிருக்கிறான்[காவல்துறை விசாரணைக்குப் பிறகு, நீதிமன்றப் பதிவாளரின் பரிந்துரையின் பேரில் விடுவிக்கப்பட்டுள்ளான்].

இவனைப் போன்றவர்களுக்கு ஆதரவாக இருப்பவர்கள் யாரெல்லாம் என்பதைச் சிந்திக்கத் தெரிந்த மக்கள் அறிவார்கள்.

அந்த ‘அவர்கள்’ இவனைக் கண்டிப்பதோ, உரிய முறையில் தண்டிப்பதோ ஒருபோதும் நடைபெறாது; மறைமுகமாக ஊக்கப்படுத்தவே செய்வார்கள்.

எனவே, முதலில் தண்டிக்கப்படுதற்கு உரியவர்கள் ‘அவர்கள்’தான். தண்டிக்கும் முறை, அடுத்தடுத்து வரும் தேர்தல்களில் வாக்குச் சீட்டு என்னும் ஆயுதத்தை உரிய முறையில் பயன்படுத்துவதுதான்.

செருப்பு வீசும் இவனைப் போன்றவர்களுக்குச் செருப்பு மாலை அணிவித்து, நடுத்தெருவில் நிறுத்திச் செருப்பால் அடிப்பது அப்புறம்!

தூங்கும் நடிகையை அம்பிகை[தெய்வம்] தொட்டெழுப்பும் அதிசயம்!!!

//“நான் அவளை(அம்பிகை)த் தேடிப் போகவில்லை. அவள்தான் என்னை கூட்டிச்செல்கிறாள். அவள் சொல்கிறாள், நான் செய்கிறேன். “வாழ்க்கையில் நீ எல்லாவற்றையும் பார்த்துவிட்டாய். இனிமேல் எனக்குச் சேவை செய்யத்தான் நீ” என்று கூறினாராம் அம்பிகை. அதிலிருந்து கடவுளுக்குச் சேவை செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளாராம் நளினி[நடிகை].

நளினி அதிகாலையில் கண்விழித்துவிடுவாராம். அப்படியே தூங்கினாலும் “நான் இருட்டில் இருக்கிறேன், வந்து விளக்கேற்று” என்று அம்மன்[அம்பிகை] எழுப்பிவிடுவாளாம். நளினி எழுந்து விளக்கேற்றிவிட்டு, 10 நிமிடம் பிரபஞ்சத்திடம் பேசுவாராம்// - இது ‘ராணி’ வார இதழில் வெளியான அபூர்வச் செய்தி*

இப்படியொரு அதிசயப் பிறவியை இந்நாள்வரை இந்த உலகம் கண்டதில்லை.

“இனி எனக்குச் சேவை செய்யத்தான் நீ” என்றாராம் அம்பிகை. அவள் நளினியின் கண் எதிரே தோன்றியா, அசரீரியாகவா எப்படிப் பேசினார் என்பதையும், என்ன மொழியில் பேசினார் என்பதையும் நம்மால் அறிந்துகொள்ள இயலவில்லை. இது ஒரு பொருட்டல்ல.

ஒரு பெண் கடவுள் ஒரு பெண்ணிடம் நேரிடையாக வேண்டுகோள் வைத்தது இதுவரை நிகழாததொரு பேரதிசயம் ஆகும்.

அருள்மிகு அம்மன், நளினியைத் தன் பூங்கரத்தால் தொட்டு எழுப்புவதை நினைவுகூரும்போதெல்லாம் நம் ஒட்டுமொத்த மேனியும் சிலிர்க்கிறது.

இவை எல்லாவற்றிற்கும் மேலாக, ‘நளினி அன்னை’ 10 நிமிடம் பிரபஞ்சத்துடன் பேசுவதாகத் திருவாய் மலர்ந்திருப்பது நம்மைப் மீள இயலாத பிரமிப்பில் ஆழ்த்துகிறது.

பிரமிப்பிலிருந்து அரைகுறையாய் விடுபட்ட நிலையில், தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களிடம் மிகப் பணிவுடன் நாம் முன்வைக்கும் கோரிக்கை:

முதல்வர் அவர்களே,

உடனடியாக, தெய்வத்திரு நளினித் தாயை நம் பிரதமர் மோடியிடம் அழைத்துச் சென்று அறிமுகப்படுத்துங்கள்.

மண்ணுலக உயிர்களுக்கு அயராது தொண்டு செய்வதற்கென்றே கடவுளால் அனுப்பிவைக்கப்பட்ட அவர், தலைநகரிலேயே அன்னை நளினிக்குக் கோயில் எழுப்பி, அவரை அங்கே எழுந்தருளச் செய்து[அயோத்தியில் பாலராமரை எழுந்தருளச் செய்தது போல], உலகறிய ஒரு பெரும் விழா நடத்திச் சிறப்பிப்பார் என்பது உறுதி.

போற்றி போற்றி! நளினி அன்னை போற்றி!! வளர்க பக்தி!!!

                                    *   *   *   *   *


*https://www.ranionline.com/top-stories/this-is-the-reason-i-am-alive-actress-nalini-7377