தங்களைச் சனாதனிகள் என்று சொல்லிக்கொண்டு மூடத்தனங்களை வளர்க்கும் ‘பாஜக’ கூட்டத்துச் சங்கி[உச்ச நீதிமன்ற வழக்குரைஞன்] ஒருவன், பகுத்தறிவாளரும் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியுமான பி.ஆர்.கவாய் அவர்கள் மீது காலணியை வீச முயன்றிருக்கிறான்[காவல்துறை விசாரணைக்குப் பிறகு, நீதிமன்றப் பதிவாளரின் பரிந்துரையின் பேரில் விடுவிக்கப்பட்டுள்ளான்].
இவனைப் போன்றவர்களுக்கு ஆதரவாக இருப்பவர்கள் யாரெல்லாம் என்பதைச் சிந்திக்கத் தெரிந்த மக்கள் அறிவார்கள்.
அந்த ‘அவர்கள்’ இவனைக் கண்டிப்பதோ, உரிய முறையில் தண்டிப்பதோ ஒருபோதும் நடைபெறாது; மறைமுகமாக ஊக்கப்படுத்தவே செய்வார்கள்.
எனவே, முதலில் தண்டிக்கப்படுதற்கு உரியவர்கள் ‘அவர்கள்’தான். தண்டிக்கும் முறை, அடுத்தடுத்து வரும் தேர்தல்களில் வாக்குச் சீட்டு என்னும் ஆயுதத்தை உரிய முறையில் பயன்படுத்துவதுதான்.
செருப்பு வீசும் இவனைப் போன்றவர்களுக்குச் செருப்பு மாலை அணிவித்து, நடுத்தெருவில் நிறுத்திச் செருப்பால் அடிப்பது அப்புறம்!
