எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

ஞாயிறு, 21 செப்டம்பர், 2025

உறங்குவதற்கு முன்னரான மூச்சுப்பயிற்சி உறக்கநிலை இறப்பைத் தடுக்கும்!!!

பெரும் எண்ணிக்கையில் மக்களின் உயிர் பறிக்கும் நோய்களில் குறிப்பிடத்தக்கது ‘மாரடைப்பு’[நோய்].

பகல் நேரங்களில் இதற்கான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவமனை சென்று சிகிச்சை பெற்றுக் குணமடைய நிறையவே வாய்ப்புள்ளது.

இந்நோய் அறிகுறியே இல்லாமல் தாக்குவதும் உண்டு. அதை ‘அறிகுறியற்ற மாரடைப்பு’[silent heart attack A silent heart attack doesn’t have typical symptoms of a heart attack. Symptoms normally unrelated to a heart attack(or no symptoms at all) can make it hard to identify a silent heart attack. But it still causes damage like any other heart attack. People often don’t know they’ve had a silent heart attack until weeks or months later> https://my.clevelandclinic.org/health/diseases/21630-silent-heart-attack] என்கிறார்கள்[இது பலரும் அறிந்ததே].

இதன் தாக்குதலுக்கு உள்ளாகிறவர்கள் பெரும்பாலும் சர்க்கரை நோயாளிகளே. பகல் நேரமாயின் ஓரளவுக்கேனும் இதன் தாக்குதலை உணர்ந்து மருத்துவரை அணுகலாம். இரவில் உறங்கிக்கொண்டிருந்தால், தாக்குதலை அறியும் வாய்ப்பில்லாமல உயிரிழக்க நேரிடலாம்.

தாகுதலை உணர்ந்தாலும்கூட அந்த நேரத்தில் அவசரக்காலச் சிகிச்சை பெறுவதற்கான வாய்ப்பு மிக மிகக் குறைவு.

இதைத் தடுப்பதற்கு, செலவே இல்லாத எளியதொரு வழி உண்டு என்கிறார்கள் மருத்துவர்கள்.*

அந்த வழி, இரவில் உறங்குவதற்கு முன் ஆழ்ந்த மூச்சுப் பயிற்சியை மேற்கொள்வதுதான்.

உறக்கம் வரும்வரை மூச்சுப் பயிற்சியைத் தொடரலாம். இதுவே ஆழ்ந்த உறக்கத்திற்கும் வழிவகுப்பதுண்டு.

அன்றாடச் சுவாசப் பயிற்சி ரத்தக் குழாய்களில்[கரோனரி தமனி] அடைப்போ சிதைவோ உருவாவதைத் தடுக்கிறது[இப்பயிற்சியால் மன அழுத்தம் குறைதல், நினைவாற்றல் மேம்படுதல், நுரையீரல் வலுவடைதல், இரத்த ஓட்டம் சீரடைதல், உடலின் கழிவுகள் வெளியேறுதல் என்றிப்படிப் பல நன்மைகளைப் பெறலாம்.

ஒருவர் இருதய நோயாளி அல்ல என்றாலும், நாள்தோறும் இந்தச் சிகிச்சையை மேற்கொள்வதால் வேறு பல நன்மைகளும் உள்ளன என்பது நினைவில் கொள்ளத்தக்கது.

                                  *   *   *   *   *

*https://www.msn.com/en-in/health/health-news/myth-vs-fact-deep-breathing-exercises-before-bed-can-help-prevent-a-heart-attack/ar-AA1zF1yh?ocid=msedgdhp&pc=NMTS&cvid=68ce9c2dbc5142059305470fc3861435&ei=64

எங்கெங்கு காணினும் லஞ்சமடா! தேவையடா அவசரச் சட்டம்!!

//ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டைப் பகுதியில், பட்டா பெயர் மாற்றம் செய்ய ரூ37000[அடேங்ங்ங்கப்பா!] லஞ்சம் வாங்கிய, பெண் நில அளவையாளரும்[பெயர் வேண்டாம்> பாவம் தாய்க்குலம்] உதவியாளரும் கைது// -இது சற்று முன்னர்[காலை 07.25] ’நியூஸ் தமிழ்’இல் வெளியான செய்தி.

இது ஒன்றும் அரிதான நிகழ்வல்ல[தேடுபொறியில் ‘நிலப்பட்டா... லஞ்சம்’ என்று தட்டச்சிட்டால் நீளும் பட்டியலை ஒரு நாளில் படித்துமுடிப்பது சாத்தியமே இல்லை].

வருவாய்த் துறை என்றில்லை, வணிகவரித் துறை, வருமானவரித் துறை, போக்குவரத்துத் துறை[RTO], பத்திரப்பதிவுத் துறை என்று ஏறத்தாழ அனைத்துத் துறைகளிலும்  கட்டணம் செலுத்துவதோடு லஞ்சம் கொடுப்பதும் வழக்கம் ஆகிவிட்டது/ஆக்கப்பட்டுவிட்டது.

எந்தவொரு நடவடிக்கையாலும் இதை ஒழிக்க இயலாது என்பதைச் சந்தேகமறப் புரிந்துகொண்டதாலோ என்னவோ ஒன்றிய & மாநில அரசுகள் இது தொடர்பாக நடவடிக்கையே எடுப்பதில்லை.

மேற்கண்டது போல, எப்போதாவது கைது செய்யப்படுபவர்களும் தண்டனை பெற்றதாக வரலாறு[வெகு அரிதான விதிவிலக்குகள் இருக்கக்கூடும்] இல்லை.

ஆதலினால், ஒன்றிய & மாநில அரசுகளுக்கு நாம் முன்வைக்கும் கோரிக்கை:

இது இதற்கு இவ்வளவுதான் லஞ்சம் பெறுதல் வேண்டும்[குறைந்தபட்சம்+அதிகப்பட்சம்] என்று சட்டம் இயற்றுதலும், ஆணை பிறப்பித்தலும் அவசியம்.

ஆயினும், இந்த ஆணையால் பயன் ஏதும் விளையாது என்பதும் அறியத்தக்கது. அப்புறம் எதற்கு இந்த ஆணை?

தேர்தல் காலங்களில் அரசுகள் தத்தம் சாதனைப் பட்டியல்களில் இதையும் இணைப்பதன் மூலம், அதிக அளவில் வக்காளர்களின் வாக்குகளைப் பெறலாம்[ஓட்டுக்குக் கொடுக்கும் லஞ்சத்தை வரன்முறைப்படுத்தவும் ஆணை பிறப்பித்துப் பட்டியலில் சேர்க்கலாம். ஹி... ஹி... ஹி!!!].