எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

வெள்ளி, 14 நவம்பர், 2025

நக்கும் நாயும் நயினார் நாகேந்திரனும்[பாஜக]!!!

//எவ்விதக் குறுக்கு வழியையும் பயன்படுத்தாமல் மக்கள் சேவையில் மட்டுமே தங்களை முன்னிறுத்தி, மக்களின் பேராதரவுடன் வெற்றிப் பாதையில்[பீகார் தேர்தல் வெற்றி] வீறு நடைபோடும் பாஜக எனும் பெரும் சக்தியின் அடுத்த பயணம் தமிழகத்தை நோக்கியே! -நயினார் நாகேந்திரன்// [தந்திச் செய்தி].

“பயணம் முடிந்து ‘பாஜக’ தமிழ்நாட்டில் ஆட்சியைக் கைப்பற்றும்; முதல்வர் அரியணையில் அமரப்போவது நான்” என்றும் நயினார் சொல்லியிருக்கலாம். தன்னடக்கம் தடுத்துவிட்டது போலும்!

முதல்வராக மட்டுமல்ல, மோடியை வீழ்த்தி, ஒரு தமிழனாக இந்தியாவின் பிரதமர் ஆவதாகவும் நயினார்[தமிழ்நாட்டுப் ‘பாஜக’வினருக்கு நயினா இவர்] கனவு காணலாம். அதற்கான முழு உரிமையும் இவருக்கு உள்ளது.

எது எப்படியோ, ‘பாஜக’வின் பீகார் வெற்றியை மகத்தானது என்று பாராட்டிய இவர், பாஜக’வின் வெற்றிக்கு அயராது பாடுபடும் இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு ‘நன்னடத்தைச் சான்றிதழ்’ வழங்கும் வகையில்.....

“தேர்தல் ஆணையம் நடத்திய தேர்தலின் மூலம் கிடைத்த எம்பி மற்றும் எம்எல்ஏ உள்ளிட்ட பதவிகளில் அமர்ந்துகொண்டு, அதே தேர்தல் ஆணையத்தின் மீது சந்தேகக் கற்களை வீசும் ஆட்கள் செக்கிற்கும் சிவலிங்கத்திற்கும் வித்தியாசம் தெரியாத ஜந்துக்கள்” என்று பேசியிருப்பது எத்தனை இழிகுணம் படைத்த ஜந்து இவர் என்பதை அடையாளப்படுத்தியுள்ளது.

செக்கிற்கும் சிவலிங்கத்திற்கும் வித்தியாசம் தெரியாத ஜந்து என்கிறாரே அந்த ஜந்து எது என்பது யாவரும் அறிந்ததே. அது.....

நாய்.

இந்த ஐந்தறிவுள்ள நாய், எண்ணெய் பிழியப் பயன்படும் செக்கை நக்கிவிட்டு, புனிதமானது என்று போற்றப்படும் எண்ணெய் பூசிய சிவலிங்கத்தையும் நக்கும்[செக்கும் சிவலிங்கமும் அருகருகே இருந்தால்]. இது அதற்குள்ள இயற்கையான குணம்.

இந்த ஒப்பீட்டின் மூலம், தேர்தல் ஆணையத்தைக் குற்றம் சாட்டுபவர்கள் நாய் போன்றவர்கள் என்கிறார் நயினார் பெருமகனார்.

நாய் ஐந்தறிவுள்ள பிராணியாக இருந்தாலும்,    செக்கிற்கும் சிவலிங்கத்திற்கு எந்தவித வேறுபாடும் இல்லை[இரண்டுமே வெறும் கற்கள்தான்-மரச் செக்குகளும் உண்டு] என்பதை அறிந்திருக்கிறது அது[அறியும் அறிவு நயினா போன்ற மனிதர்களுக்கு இல்லை] என்பது நயினாருக்குத் தெரியாமல்போனது ஏன்?!                                     

                               https://www.dailythanthi.com/news/tamilnadu/another-jewel-in-the-crown-of-the-national-democratic-alliance-nayinar-nagendran-1190154