எனது படம்
“எல்லாம் அவன் செயல்” என்பவர்கள் ஆறறிவின் வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பவர்கள். இவர்களின் எண்ணிக்கை பெருகப் பெருக மூடநம்பிக்கைகளின் அளவும் அதிகரிக்கிறது. நாட்டை ஆள்வதற்கான தகுதியே இல்லாத சுயநலவாதிகள் இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறார்கள். மூடத்தனங்களிலிருந்து மக்கள் முற்றிலுமாய் விடுபடும்போதுதான் நாடு உண்மையில் சுதந்திரம் பெற்றதாக ஆகிறது.

புதன், 28 பிப்ரவரி, 2024

தற்கொலை கோழைத்தனம் அல்ல! ஆனால்.....

“வாழ்க்கை வாழ்வதற்கே” என்றார்கள்.

வாய்க்கு ருசியாய் உணவுண்டு மகிழ்வதும், ஆசைப்பட்டபடியெல்லாம் சுகபோகங்களை அனுபவிப்பதும் வாய்க்கும் என்றால் வாழ்க்கை வாழ்வதற்குத்தான்.

வறுமையில் சிக்கி  வாடி வதங்குவதும்,  கட்டுப்படுத்த இயலாத கெட்ட உணர்ச்சிகளாலும், தீராத நோய்களாலும் பிறவற்றாலும் வதைபடுவதும்  தொடருமேயானால், பிறந்தது வாழ்வதற்கல்ல, சாவதற்கே என்று எண்ணத் தோன்றும்.

அது தவறு.

தற்கொலை கோழைத்தனம் என்பதல்ல காரணம். 

மீண்டும் பிறப்பது நிச்சயமில்லை[மிக மிக மிக அரிய நிகழ்வு இது] என்பதால், இயன்றவரை மனதைத் திடப்படுத்திக்கொண்டு, நாட்டு நடப்பை வேடிக்கை பார்த்துக்கொண்டேனும் வாழ்ந்துமுடிப்பதே ஏற்கத்தக்கதாகும்.

                                   *   *   *   *   *