எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

சனி, 25 அக்டோபர், 2025

100% துறவியாக வாழ விழைவோருக்கு.....

சுகபோக வாழ்க்கைக்கான வசதிகள் நாளும் பெருகிக்கொண்டிருக்கும் இக்காலத்தில், ஆசை, பாசம், அந்தரங்கச் சுகங்கள் என்று அனைத்துப் பற்றுகளையும் துறந்து வாழ்பவர்கள் இல்லை என்றே சொல்லலாம்.

ஏற்புடைய வாழ்விடம் அமைந்தால், தமக்கிருக்கும் கொஞ்சமே கொஞ்சம் பற்றுகளுடன் வாழ்பவர்களால், அவற்றிலிருந்து முற்றிலுமாய் விடுபடுவது சாத்தியம் ஆகுமா என்னும் கேள்வி என்னுள் எழுந்தது.

இக்கேள்வியைக் கூகிள் தேடுபொறியில் பதிவு செய்ததில் அதன் செயற்கை நுண்ணறிவு[AI] அளித்த பதில் கீழே[முற்றும் துறந்து வாழ்வதற்கான இடங்கள்]:

*இமயமலையில், மடாலயங்கள், தியானக் குகைகள், லடாக்கில் உள்ள ‘தங்க்யுட் கோம்பா’, ஆங்காங்கே சிதறிக் கிடக்கும் குகைகள் என்று பனி சூழ்ந்த இடங்களில் துறவிகள் தங்கியிருக்கிறார்கள்.

*மலைகள் நிறைந்த திபெத், பூட்டான், லடாக், நேபாளம் ஆகியவற்றின் சில பகுதிகளிலும் துறவிகள் வாழ்கிறார்கள்.

*குளிர்காலத்துக்கு ஏற்ற இமயமலையின் தொலைதூரக் கிராமங்களிலும் துறவிகளுக்கான வாழ்விடங்கள் இடம்பெற்றுள்ளன. அவற்றுள் கோமிக் கிராமம் குறிப்பிடத்தக்கது[‘கோமிக்’இமயமலையில், ஸ்பிதி பள்ளத்தாக்கில் அமைந்துள்ள ஒரு கிராமமாகும்இது வாகனம் செல்லக்கூடிய உலகின் மிக உயரமான கிராமங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது, கடல் மட்டத்திலிருந்து சுமார் 15,050 அடி(4,587 மீட்டர்) உயரத்தில் உள்ளது. இங்குதான் பண்டைய ‘டாங்யுட் மடாலயம்’ இருக்கிறது. மலைக் காட்சிகள் காண்போரைப் பிரமிக்கச் செய்யும்].
*   *   *   *   *

***இங்குள்ள பொல்லாத மனிதர்களையும், மனம் பதறச் செய்யும் கொடூர நிகழ்வுகளையும் கண்டு கண்டு நொந்து நூலாகிப்போனவர்கள், விரும்பினால் மேற்கண்ட இடங்களில் ஒன்றிலோ பலவற்றிலுமோ ஒரு துறவியாகத் தங்கியிருந்து, மன நிம்மதியுடன் வாழ்நாளைக் கழிக்கலாம்.

செல்பவர்கள் மறவாமல் மானசீகமாக அடியேனுக்கு நன்றி சொல்லுங்கள். ஹி... ஹி... ஹி!!!