முட்டையில் கொழுப்பு அதிகம் இருப்பதாக அஞ்சி அதை உண்பதைப் பெரும்பாலோர் தவிர்க்கிறார்கள்.
உண்மையில் புரதம், ஆரோக்கியமான கொழுப்புகள், கோலின், செலினியம், ஃபோலேட், இரும்பு போன்ற தாதுக்களும், பயோட்டின், பி12, ஏ, டி, ஈ கே போன்ற வைட்டமின்களும், தசைகள் & இணைப்புத் திசுக்களுக்கு அத்தியாவசியமான அமினோ அமிலங்களும் நிறைந்தது முட்டை. இதில் லுடீன், ஜீயாக்சாண்டின் எனப்படும் ஆக்ஸிஜனேற்றிகளும் உள்ளன.
முட்டையில் நிறைவுற்ற கொழுப்புகள் குறைவாகவே உள்ளன. எனவே, பெரும்பாலும் முட்டையால் கொழுப்பு அதிகரிக்காது; இது கண்புரை உருவாவதைத் தடுக்கிறது; மூளையின் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது; தசைகளை வலுப்படுத்துகிறது; ஹார்மோன்களைச் சமநிலைப்படுத்துகிறது. இதனால் HDL[நல்ல கொழுப்பு] அளவு கூடுகிறது.
வெள்ளை, பழுப்பு என்னும் இரு நிறங்கள் கொண்ட முட்டைகளும் உடம்புக்கு நன்மை பயப்பனவே.
ஆக, தினமும் முட்டை உண்பதால் பல நன்மைகள் உண்டே தவிர, தீமைகள் இல்லை என்பது அறியத்தக்கது.
* * * * *

