கோள்கள், நட்சத்திரங்கள், பஞ்சபூதங்கள்[மூலங்கள்] என்று உருமாற்றம் பெறும் அனைத்துமே அழியக்கூடியவதான்[ஆயுள் மாறுபடலாம்] என்கிறது அறிவியல்.
பிறவற்றைப்[+உயிரினங்கள்] போல மனிதனும் அழிவைச் சந்திப்பவன்தான்.
ஆறறிவு வாய்த்ததன் காரணமாக, உடம்பு அழிந்த பிறகும் நிரந்தரமாக வாழ ஆசைப்பட்டான்.
அதன் விளைவு.....
தன் உடம்புக்குள்ளே ‘ஆன்மா’[ஆவியோ உயிரோ ஏதோ அழியாத ஒன்று] இருப்பதாகக் கற்பனை செய்தான்[குறிப்பாக மதவாதிகள்].அது நீரில் கரையாது; நெருப்பில் அழியாது என்றெல்லாம் சொல்லிக்கொண்டான்.
அதில் மனநிறைவு பெறாமல், அழிவே இல்லாததும் அனைத்திற்கும் மேலானதுமான கடவுளின் ஒரு கூறு என்று கதைத்தான்.
சில பிரகஸ்பதிகள்[மேதைகள்], அது தனித்து இயங்குவது; கடவுளைப் போலவே அழிவில்லாதது என்றார்கள்.
“ஆன்மாவின் இருப்புக்கு அறிவுபூர்வமாக ஆதாரம் தர இயலுமா?” என்று கொஞ்சம் சிந்திக்கத் தெரிந்தவர்கள் கேட்டபோது, “தருவது மனித அறிவால் இயலாது. கருணை வடிவான கடவுள் மட்டுமே அது குறித்து அறிவார்” என்று மழுப்பினார்கள்.
“இதற்கு ஆதாரம் தர இயலாது என்றால், இந்த மனித அறிவைக்கொண்டு ஆன்மா உண்டு என்றும், அது அழியாதது என்றும் சொன்னது/சொல்வது எப்படி?” என்று கேட்கப்பட்டபோதெல்லாம் பதிலே இல்லை.
பாவம் மனிதன்! தன்னை நிரந்தரம் ஆக்கிக்கொள்ள அவன் படாதபாடெல்லாம் படுகிறான்!!
* * * * *
***இணையத்தில் ஆன்மா குறித்து ஏராள வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றுள்ளன. இது குறித்துச் சிந்திக்கத் தூண்டுவதே இப்பதிவின் நோக்கம்.
