எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

வெள்ளி, 6 செப்டம்பர், 2024

‘மகா விஷ்ணு’ என்னும் பெயரில் ஒரு புதிய ஆன்மிகப் புளுகன்!!!

#மாணவிகள் அழகாக இல்லாததற்குக் கடந்த பிறவிகளில் செய்த பாவம்தான் காரணம்; மாற்றுத்திறனாளிகளாகப் பிறக்கவும் அதுவே காரணம். பாவம், புண்ணியம், பிரபஞ்சச் சக்தி போன்றவை பூமியில் இறங்கும்# என்றெல்லாம் மனம்போன போக்கில் நஞ்சு கக்கியிருக்கிறான் ‘மஹா விஷ்ணு’ என்று ‘புனை பெயர்’ சூட்டிக்கொண்டு மக்களை ஏமாற்றிவந்த ஓர் ஆன்மிகப் பொறுக்கி; நிறையவே சம்பாதித்திருக்கிறான்.

டாக்டர் ராமதாஸ் உட்பட இணையவாசிகள் பலரும் இவன் பேச்சை மிகக் கடுமையாகக் கண்டித்திருக்கிறார்கள்.

தமிழ்நாடு அரசு இவனைக் கைது செய்து நடவடிக்கை எடுப்பதில் முனைப்புக் காட்டுவது அறிந்து இவன் ஆஸ்திரிலேயாவுக்குத் தப்பி ஓடியிருக்கிறான் என்பது ஊடகச் செய்தி.

கந்தன், முருகன், பெருமாள், ஐயப்பன், ஆறுமுகம், பரமசிவம் என்பன போன்ற கடவுள்களின் பெயர்களைப் பிள்ளைகளுக்கு வைப்பது வழக்கத்தில் உள்ளது. ஆனால், ‘மஹா விஷ்ணு’ என்னும் பெயர் எப்போதும் வைக்கப்படவில்லை என்றே சொல்லலாம்.

எனவே, ‘மஹா விஷ்ணு’ என்பது இவனின் புனை பெயராக இருக்க வாய்ப்புள்ளது. தான் கடவுளின் அவதாரம்[சத்குரு> பரம்பொருளின் குரு என்பது போல]மக்களை நம்பச் செய்வதற்கு இப்பெயர் பயன்படும் என்பது இவனின் நம்பிக்கை.

கண்ட கண்ட கழிசடைகள் எல்லாம் அவதாரம் என்றும், மகான் என்றும் தம்மைத்தாமே அழைத்துக்கொள்வதற்குத் தடை விதித்து, மீறுவோர் மீது மிகக் கடும் நடவடிக்கைகளை அரசு[கள்] எடுத்திருந்தால் இம்மாதிரி, கடவுள் பெயரில் காலிப் பயல்கள் உருவாகியிருக்க வாய்ப்பே இல்லை!

இனியேனும், இவன் போன்றோர் விசயத்தில் ஆளுவோர் எச்சரிக்கையுடன் செயல்படுதல் வேண்டும் என்பது நம் வேண்டுகோள்.

https://www.vikatan.com/trending/viral/expert-warns-psychological-issues-in-mahavishnus-speech-in-chennai-govt-school


‘இந்துமதம் வாழ... வளர...’ -சங்கிகளுக்குக் கொஞ்சம் புத்திமதிகள்!!!

மூடத்தனத்தின் உச்சமான பிள்ளையார் வழிபாடு, மாடுகள் வதைக்கப்படுவதாகச் சொல்லிச் சங்கிகள் நிகழ்த்தும் வன்முறைகள் போன்றவை நீடிக்கும்வரை இந்துமதம் வளரவே வளராது; ஒரு காலக்கட்டத்தில் அழிந்தேதீரும்

பிள்ளையார் பிறப்பு, சிவலிங்கத் தோற்றம், ஐயப்பன் அவதாரம் போன்ற படு அசிங்கக் கதைகளைக் கற்பிக்கும் ஆபாசப் புராணங்களை தீயிட்டு எரித்துச் சாம்பலாக்குவது போன்ற உடனடி நடவடிக்கைள் தேவை.

கோயில்களில் உள்ள கூடா ஒழுக்கங்களைக் கற்பிக்கிற சிலைகளையும், விதானங்களில் வரையப்பட்டுள்ள சில காணச் சகிக்காத ஓவியங்களையும் முற்றிலுமாய் அகற்றுதல் அவசியம்[உடலுறவுக் கலையைக் கற்பிப்பது வேறு விசயம்].

‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’[திருமூலர்] என்பதுதான் இந்துமதத்தின் உயிர்நாடிக் கடவுள் கொள்கை என்று அறிவிப்பதோடு, அதை உலகறியச் செய்வதற்கான தீவிர முயற்சிகளையும் மேற்கொள்ளுதல் வேண்டும்.

கோயில்களில் இப்போதுள்ள சிலைகளை அகற்றுவதோடு, கோயிலின் எந்தவொரு இடத்திலும் அமர்ந்து[கட்டுப்பாடுகள் தேவையில்லை] கண்மூடி, அனைத்திற்கும் மேலான ஏதோவொரு சக்தியை நினைத்து தியானிக்கப் பக்தர்களை அனுமதிக்கலாம்.

அறிஞர் குழு அமைத்து அவ்வறிஞர்களின் பரிந்துரைப்படி கோயில்களில் தேவைப்படும் மாற்றங்களைச் செய்யலாம். 

இவை போன்ற அறிவுபூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டால்.....

பிற மதத்தவரும் பெரும் எண்ணிக்கையில் இந்துமதத்தைத் தழுவும் அதிசம் நிகழும்; விரைவில் உலகின் முதன்மை[நம்பர் 1] மதமாக இந்துமதம் மாறும்; மேலும் மேலும் வளரும் என்று நம்பலாம்.