எனது படம்
“எல்லாம் அவன் செயல்” என்பவர்கள் ஆறறிவின் வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பவர்கள். இவர்களின் எண்ணிக்கை பெருகப் பெருக மூடநம்பிக்கைகளின் அளவும் அதிகரிக்கிறது. நாட்டை ஆள்வதற்கான தகுதியே இல்லாத சுயநலவாதிகள் இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறார்கள். மூடத்தனங்களிலிருந்து மக்கள் முற்றிலுமாய் விடுபடும்போதுதான் நாடு உண்மையில் சுதந்திரம் பெற்றதாக ஆகிறது.

வெள்ளி, 6 செப்டம்பர், 2024

‘இந்துமதம் வாழ... வளர...’ -சங்கிகளுக்குக் கொஞ்சம் புத்திமதிகள்!!!

மூடத்தனத்தின் உச்சமான பிள்ளையார் வழிபாடு, மாடுகள் வதைக்கப்படுவதாகச் சொல்லிச் சங்கிகள் நிகழ்த்தும் வன்முறைகள் போன்றவை நீடிக்கும்வரை இந்துமதம் வளரவே வளராது; ஒரு காலக்கட்டத்தில் அழிந்தேதீரும்

பிள்ளையார் பிறப்பு, சிவலிங்கத் தோற்றம், ஐயப்பன் அவதாரம் போன்ற படு அசிங்கக் கதைகளைக் கற்பிக்கும் ஆபாசப் புராணங்களை தீயிட்டு எரித்துச் சாம்பலாக்குவது போன்ற உடனடி நடவடிக்கைள் தேவை.

கோயில்களில் உள்ள கூடா ஒழுக்கங்களைக் கற்பிக்கிற சிலைகளையும், விதானங்களில் வரையப்பட்டுள்ள சில காணச் சகிக்காத ஓவியங்களையும் முற்றிலுமாய் அகற்றுதல் அவசியம்[உடலுறவுக் கலையைக் கற்பிப்பது வேறு விசயம்].

‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’[திருமூலர்] என்பதுதான் இந்துமதத்தின் உயிர்நாடிக் கடவுள் கொள்கை என்று அறிவிப்பதோடு, அதை உலகறியச் செய்வதற்கான தீவிர முயற்சிகளையும் மேற்கொள்ளுதல் வேண்டும்.

கோயில்களில் இப்போதுள்ள சிலைகளை அகற்றுவதோடு, கோயிலின் எந்தவொரு இடத்திலும் அமர்ந்து[கட்டுப்பாடுகள் தேவையில்லை] கண்மூடி, அனைத்திற்கும் மேலான ஏதோவொரு சக்தியை நினைத்து தியானிக்கப் பக்தர்களை அனுமதிக்கலாம்.

அறிஞர் குழு அமைத்து அவ்வறிஞர்களின் பரிந்துரைப்படி கோயில்களில் தேவைப்படும் மாற்றங்களைச் செய்யலாம். 

இவை போன்ற அறிவுபூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டால்.....

பிற மதத்தவரும் பெரும் எண்ணிக்கையில் இந்துமதத்தைத் தழுவும் அதிசம் நிகழும்; விரைவில் உலகின் முதன்மை[நம்பர் 1] மதமாக இந்துமதம் மாறும்; மேலும் மேலும் வளரும் என்று நம்பலாம்.