எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

திங்கள், 25 ஆகஸ்ட், 2025

அகிலம் இகழ் கிறுக்கன் ‘அனுராக் தாக்கூர்’இன் பதவி[எம்.பி.] பறித்திடுக!

//இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள ‘பி.எம்.ஸ்ரீ’ பள்ளியில் தேசிய விண்வெளித் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் பா.ஜ.க. எம்.பி. அனுராக் தாக்கூர் கலந்துகொண்டார்//* என்பது செய்தி.

“முதன் முதலாக விண்வெளிப் பயணம் மேற்கொண்ட வீரர் யார்?” என்று இந்த ஆள் கேட்டபோது, “நீல் ஆம்ஸ்ட்ராங்”[இவர் சந்திரனுக்கு முதலில் சென்றவர்; விண்வெளிக்கு முதலில் சென்ற வீரர் யூரி காகரின்> சோவியத்]ன்று அறிவியல் ரீதியான பதிலை மாணவர்கள் சொல்லியிருக்கிறார்கள்.

இந்தச் சங்கியோ[அனுராக் தாக்கூர்], "எனக்குத் தெரிந்து உலகின் முதல் விண்வெளி வீரர் அனுமன்தான்[வால்மீகியால் மனிதரைப்போல் கற்பனை செய்யப்பட்ட ஒரு குரங்கு] என்று சொல்லி, மாணவர்களின் பகுத்தறிவைச் சிதைத்து, அவர்களின் மனங்களில் நஞ்சு தூவியிருப்பது மன்னிக்கத் தகாத கடும் குற்றம்.

இதற்கு முன்பும், இந்த முழுமூடம் மாணவர்கள் மட்டுமல்லாமல் பொதுமக்களிடத்தும், அனுமன் குரங்கு கடல் தாண்டிய கற்பனைக் கதையைப் பரப்புரை செய்திருக்க நிறையவே வாய்ப்புள்ளது.

இந்த நபர் பொதுக்கூட்டங்களில் கலந்துகொள்வதற்குத் தடை விதிப்பது மட்டுமல்ல, வாக்காளரிடையே மூடத்தனம் பரப்பிப் பெற்றிருக்கும் ‘எம்.பி.’ பதவியையும் பறித்தல் வேண்டும்.

ஆனால், சங்கிகளின் பிடியிலிருந்து இந்த நாடு விடுவிக்கப்பட்டால் மட்டுமே இது சாத்தியமாகும்.

சாத்தியமாவது எப்போது?

* * * * *

*https://www.maalaimalar.com/news/national/think-hanuman-ji-was-1st-space-traveller-bjp-mp-anurag-thakur-to-students-785726?utm_source=newsshowcase&utm_medium=gnews&utm_campaign=CDAqEAgAKgcICjDtzp8LMPrYtwMw2Z-8BA&utm_content=rundown


வேங்கடவன் என்னும் வெங்கடாசலபதி சாமி ரொம்பவே அப்பாவி!!!

ஒரு பக்தர்[பெயர் சொல்ல விரும்பாதவர்] பல ஆண்டுகளுக்கு முன்பு, அமெரிக்கா சென்று, அங்குத் தொடங்கவுள்ள தன்னுடைய IT நிறுவனம் லாபகரமாக நடந்திடத்  திருப்பதி வெங்கடாசலபதியை வேண்டிக்கொண்டார். 

அமெரிக்காவில் ஒரு IT நிறுவனத்தைத் தொடங்கி நடத்தி, அதில் 60 சதவீதப் பங்குகளை விற்று ரூ.6,000 கோடிக்கு மேல் வருமானம் பெற்றுள்ளார் அவர்; இந்த வெற்றிக்குத் அந்தக் கடவுளின் அருள்தான் காரணம் என நம்பினார்.

அவர் தன் வேண்டுதலை நிறைவேற்றியதற்காக, அந்த வெங்கடாசலபதிக் கடவுளுக்கு ரூ.140 கோடி மதிப்பிலான 121 கிலோகிராம் தங்கத்தைக் காணிக்கையாக வழங்கியுள்ளார்[இந்தத் தகவலை ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்தாராம்].

தொழில் செய்பவர்கள், தங்களின் காரியம் நிறைவேற அதிகாரிகளுக்குக் கொடுப்பது லஞ்சம். கடவுளுக்குக் கொடுத்தால் அது காணிக்கை.

காணிக்கை என்னும் பெயரில் தம் காரியம் கைகூட, அந்த லஞ்சத்தை[காணிக்கை] முன்னதாகவே கோயில் உண்டியலில் போடுகிறவர்கள் உள்ளனர். அவர்கள் தாம் வணங்கும் சாமியை முழுமையாக நம்புகிறவர்கள். நம்பாத ‘உஷார் பேர்வழிகள்[பக்தர்கள்]’ காரியம் நிறைவேறினால் மட்டுமே காணிக்கை செலுத்துவார்கள். அவர்களில் வெறும் தலைமுடியைத் தந்து ஏமாற்றுகிறவர்களும் உளர்.

வெங்கடாசலபதிக் கடவுளின் அருளால் ரூ6,000 கோடியை லாபமாகப் பெற்ற மேற்கண்ட நபர், உஷார் பேர்வழி ஆவார். அந்தத் தொகை தனக்குக் கிடைத்த பிறகே ரூ140 கோடியைக் காணிக்கை என்னும் பெயரில் திருவேங்கடமலை அதிபதிக்குக் கொடுத்திருக்கிறார்.

மனிதர்களில் எவரும், 100% நேர்மையாகத் தொழில் செய்து கோடி கோடியாய்ச் சம்பாதிப்பது சாத்தியமே இல்லை. அப்படிச் சம்பாதிப்பவர்கள், மேற்பார்வையிடுகிற அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் தருகிறார்கள்.

எத்தனை விழுக்காடு என்பதை முன்கூட்டியே முடிவு செய்கிறார்கள் அவர்கள். அது 10 சதவீதத்திற்கு மேலாகவும், 50 சதவீதத்திற்கு[பாதிக்குப் பாதி]க் குறையாமலும் இருக்க வாய்ப்புள்ளது.

மேற்கண்ட கோடீசுவரர், வெங்கடாசலபதிக்குக் கொடுத்த லஞ்சம், ரூ6,000 கோடிக்கு வெறும் ரூ149 கோடி மட்டுமே. 03 சதவீதத்திற்கும் குறைவு. ஏழு மலைகளுக்கு அதிபதியான ஏழுமலையானுக்கே அல்வா கொடுத்திருக்கிறார் அந்தக் கில்லாடித் தொழில் அதிபர்!

“இத்தனை அப்பாவியா ஏழுமலையான் என்னும் வெங்கடாசலபதிக் கடவுள்?” என்று கவலையுடன் கேட்கத் தோன்றுகிறது!

                                                   *   *   *   *   *

https://news.lankasri.com/article/nri-donates-121kg-goதெரிவித்திருக்கிறார்ld-to-tirupati-temple-1755673224