எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

ஞாயிறு, 30 மார்ச், 2025

கடவுளால் அனுப்பப்பட்ட மோடியை அந்தக் கடவுளாலும் திருத்த இயலாது!!!

#மியான்மருக்கு நிவாரணப் பொருட்களை இந்திய அரசு அனுப்பி வைத்துள்ளது. இதன் கீழ், மனிதநேய உதவிக்காகச் சிறப்பு மருத்துவக் குழுவினர் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர்[ராணுவ அதிகாரி ஜெக்னீத் கில் தலைமையிலான 118 பேர் கொண்ட சத்ருஜீத் பிரிகேட் குழுவினர், மருத்துவ உபகரணங்கள் மற்றும் கருவிகளுடன் மியான்மர் கிளம்பிச் சென்றனர். பேரிடர் பாதித்த பகுதிகளில் மேம்பட்ட மருத்துவ மற்றும் அறுவைச் சிகிச்சை வழங்க இக்குழு தயாராக உள்ளதாக இந்திய ராணுவம் கூறியுள்ளது#[ஊடகச் செய்தி]

பாராட்டத்தக்க இந்த நல்ல செயலுக்கு  'ஆபரேஷன் பிரம்மா' என்று பெயரிடப்பட்டுள்ளதாம். புராணங்கள் புளுகிவைத்த 100% கற்பனைக் கதை மாந்தனான[கதாபாத்திரம்] பிரம்மாவின் பெயர் எதற்கு?

ஆப்ரேசன் இந்தியா’ என்று பெயர் சூட்டியிருந்தால் போதாதா?

10000[?]க்கும் மேற்பட்ட உயிரிழப்புடன் ஏராளமானோர் காயமடைந்து, அளப்பரிய வேதனையில் சிக்கித் தவிக்கும் மக்களின்[பெரும்பாலோர் புத்த மதத்தவர்] மனங்களில் இந்து மதத் திணிப்பா?

கடவுளால் அனுப்பப்பட்ட மோடி மீண்டும் கடவுளின் திருவடி சேரும்வரை திருந்தமாட்டார்!

அந்தக் கடவுளாலும் இவரைத் திருத்த இயலாது!!

                                          *   *   *   *   *

https://www.dinamalar.com/news/india-tamil-news/india-launches-operation-brahma-to-help-myanmar/3891336

பேடிகளே, அரசியல் பேச ‘அவன்’ இங்கே வரட்டும். நீங்க ஏண்டா ஓடுறீங்க?!

சில நாட்கள் முன்பு ‘அவன்’ கூப்பிட்டான்னு உங்களில் ஐந்தாறு பேர், வேறு எதுக்கோ ‘அங்கே’ போவதாகப் பொய் சொல்லிட்டு, மூன்று நான்கு கார்களில் மாற்றி மாற்றிப் பயணம் பண்ணித்  திருட்டுத்தனமா அந்த ஆளைச் சந்திச்சீங்க.

அவன் சொன்னதுக்கெல்லாம் தலையாட்டிட்டுத் தமிழ்நாடு திரும்புனீங்க.

உங்களைப் பார்த்து இந்த நாடே சிரிச்சுது.

உங்களோடு பிணங்கிகிட்டு ஒதுங்கி ஒதுங்கிப் போய்ட்டிருக்கிற அந்த ஐயனும் அழைக்கப்பட்டு, ‘உலோக மனிதன்’ என்று உங்களால் வர்ணிக்கப்படுகிற அவனைச் சந்திச்சி ரகசியப் ‘பேச்சுவார்த்தை’ நடத்தினார்.

உங்களில் எவனுக்குமே தமிழன் என்பதில் பெருமிதமோ, எவனுக்கும் அடிபணியாத தன்மானமோ இல்லையா?

நீங்களெல்லாம் பதவியில் இருந்தபோது குறுக்கு வழியில் கோடி கோடியாகச் சம்பாதித்த பணத்தை, அமலாக்கத் துறை மூலம் குறி வெச்சுத்தான் அவன் உங்களை மிரட்டி அடிபணிய வைக்க முயல்கிறான் என்பது உங்களுக்குத் தெரியும்; தமிழ் மக்களும் அறிவார்கள்.

சம்பாதிச்சதை இழக்காமலிருக்க, ஊழல் குற்றச் சட்டத்தில் உள்ள ஓட்டை உடைசல்கள் மூலம் எப்படியும் தப்பிக்கலாம் என்பதை இன்னுமா தெரிஞ்சிக்காம அந்த ‘அவன்’ ஆட்டுவிக்கிறபடியெல்லாம் ஆடுறீங்க?

போறதெல்லாம் போகட்டும், மிச்சமுள்ளதை வைத்துப் பிழைத்துக்கொள்ள முடியும் என்பதை நீங்கள் மறந்தது ஏன்?

பதவி ஆசையைத் துறக்க முடியலேன்னா, உங்களுக்குள்ளே உள்ள வேற்றுமைகளை மறந்து, ஒருங்கிணைந்து திட்டங்கள் தீட்டி, உங்களை மதிப்பவர்களுடன் கூட்டணி அமைத்து 2026இல் ஆட்சியைக் கைப்பற்ற முயற்சி செய்யுங்க.

வெற்றியோ தோல்வியோ முடிவு எதுவாயினும் அதை ஏற்பதற்கு மனதைப் பக்குவப்படுத்துங்க.

எவ்வகையிலும், நம்மை அடிமைகளாக்கி ஆளத்துடிக்கும் அந்த ஆதிக்க வெறியன்[கள்] செய்யும் சூழ்ச்சிகளுக்குப் பலியாகிவிடாதீர்கள் என்பது நாம் உங்களிடம் வைக்கும் கோரிக்கை!