எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

ஞாயிறு, 20 அக்டோபர், 2024

மோடி நாட்டின் பிரதமரா, காஞ்சி மடாதிபதியின் அடிமையா?!

'வாரணாசி சென்ற பிரதமர் மோடி, ஆர்.ஜே.சங்கரா கண் மருத்துவமனையைத் திறந்துவைத்தார்' என்பது சில மணி நேரங்களுக்கு முன்னர் வெளியான செய்தி.

மோடி ஆகச் சிறந்த பக்தர் என்பது யாவரும் அறிந்ததே.

ஒரு நாளில் எத்தனை முறையும் எப்படியும் கடவுளை வழிபடட்டும். இது அவர் விருப்பம்; உரிமையும்கூட.

ஆனால், சில நேரங்களில் தான் ஒரு நாட்டின் பிரதமர் என்பதை ஏனோ மறந்துவிடுகிறார்; பதவிக்கான கௌரவத்தையும் காப்பாற்றத் தவறிவிடுகிறார்.

சில ஆண்டுகளுக்கு முன்பு ஈஷா மையத்தில் ஆதியோகி சிலைத் திறப்பு விழாவில் கலந்துகொண்டபோது, போலிச் சாமியார் ஜக்கி வாசுதேவனின் முன் கைகட்டி அமர்ந்து அந்த ஆளிடம் உபதேசம் பெற்றதன் மூலம் பதவிக்குரிய மாண்பைச் சீர்குலைத்தார்.

நேற்று[?] வாரணாசியில் சங்கரா கண் மருத்துவமனைத் திறப்பு விழாவில் கலந்துகொண்ட அவர், காஞ்சி காமகோடி மடாதிபதியை மிக்கப் பணிவுடன் தலை குனிந்து வணங்கியதன் மூலம்[அவர் அமர்ந்திருக்கிறார்] மீண்டும் பிரதமர் பதவிக்குரிய கௌரவத்தைச் சிதைத்துள்ளார்.

இந்த மடாதிபதி மக்களின் நன்மதிப்பைப் பெற்றவர்தானா என்பது பற்றி மோடி கொஞ்சமும் சிந்திக்காமல் செயல்பட்டது இந்த நாட்டையும் நாட்டு மக்களையும் அவமானப்படுத்தும் செயலாகும்.

இனியேனும் பிரதமர் பதவிக்குரிய மாண்பைக் காப்பாற்றுவாராக! .Image 1334950

தீபாராதனைத் தட்டேந்திப் பிச்சை எடுக்கும் தில்லைத் தீட்சிதன்களுக்கு நீதிபதியின் சவுக்கடி!!!

அதிகாரவர்க்கத்தின் பேராதரவுடன் கொட்டமடிக்கிறார்கள் தில்லை நடராசன் பெயரால் தீபாராதனைத் தட்டேந்திப் பிச்சை எடுத்து வயிறு வளர்க்கும் சிதம்பரம் தீட்சிதன்கள்.

தர்ஷன் என்னும் நல்ல உள்ளம் கொண்ட ஒரு தீட்சிதரைப் பணி செய்யவிடாமல் பிற தீட்சிதன்கள் தடுத்தது தொடர்பான வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற நீதியரசர் தண்டபாணி அவர்கள் அவன்களின் அடாவடித்தனம் குறித்து வெளியிட்ட கருத்துகள்:

நடராஜர் கோவில் தீட்சிதர்களால் எனக்கும் பிரச்னை ஏற்பட்டிருக்கிறது. மனக் கஷ்டங்களைப் போக்க வரும் மக்கள் அவமானப்படுத்தப்படுகின்றனர். தீட்சிதர்கள் ஆணவத்துடன் நடந்து கொள்வது நல்லதல்ல.

தீட்சிதர்கள் கடவுளுக்கு மேலானவர்களா? உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு, கோயில் தங்களுக்குச் சொந்தமானது என தீட்சிதர்கள் நினைக்கின்றனர்.

பக்தர்கள் வரும்வரைதான் அது கோயில். இல்லாவிட்டால் கோயில் பாழாகி விடும்.

கோவிலுக்கு வருபவர்கள் அனைவரும், சண்டைக்கு வருவதைப் போலவே தீட்சிதர்கள் நினைக்கின்றனர். காசு கொடுத்தால்தான் அங்கு பூ கிடைக்கும். இல்லையென்றால் விபூதி கூடக் கிடைக்காது.”

நீதிபதியின் இந்த அறிவுரையால் தீட்சிதன்கள் திருந்தப்போவதில்லை.

ஏற்கனவே அவன்களுக்குச் சாதகமாகத் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றத்திற்கும், நாட்டை ஆளும் அதிகாரவர்க்கத்தினருக்கும் அவன்கள் செல்லப்பிள்ளைகள் என்பது முக்கியக் காரணம் ஆகும்.

எனவே, நீதிபதி தண்டபாணி அவர்கள் வார்த்தைகளால் கொடுத்த அடி போதாது. இவன்களைத் திருத்த வேறு எதுவெல்லாம் தேவை என்பதைப் பொதுமக்கள்தான் தீர்மானிக்க வேண்டும்.

* * * * *

***தர்ஷனை[பெண் பக்தையை கனகசபை மீது அழைத்துச் சென்றதற்காக தர்ஷன் (எ) நடராஜர் தீட்சிதரையும், அவரது அப்பா கணேசன் தீட்சிதரையும், கோயிலில் பணி செய்யக் கூடாது என்று தீட்சிதர்கள் குழுவால் தடை விதிக்கப்பட்டவர்]. பணியில் சேர்த்துக் கொள்ளும்படி 2023-ம் ஆண்டு இந்து அறநிலையத்துறை அனுப்பிய உத்தரவை, ரத்து செய்ய வேண்டும் என்றும், இந்து அறநிலையத்துறை தங்களை கட்டுப்படுத்த முடியாது என்றும், கடந்த 16-ம் தேதி தீட்சிதர் தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

அந்த மனு இன்று நீதிபதி தண்டபாணி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது பேசிய நீதிபதி, நடராஜர் கோவில் தீட்சிதர்களால் எனக்கும் பிரச்னை ஏற்பட்டிருக்கிறது. மனக் கஷ்டங்களை போக்க வரும் மக்கள் அவமானப்படுத்தப்படுகின்றனர். தீட்சிதர்கள் ஆணவத்துடன் நடந்து கொள்வது நல்லதல்ல.

தீட்சிதர்கள் கடவுளுக்கு மேலானவர்களா ? உச்ச நீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகு, கோயில் தங்களுக்கு சொந்தமானது என தீட்சிதர்கள் நினைக்கின்றனர்.

பக்தர்கள் வரும் வரைதான் அது கோயில். இல்லாவிட்டால் கோயில் பாழாகி விடும்.

கோவிலுக்கு வருபவர்கள் அனைவரும், சண்டைக்கு வருவதைப் போலவே தீட்சிதர்கள் நினைக்கின்றனர். காசு கொடுத்தால்தான் அங்கு பூ கிடைக்கும். இல்லையென்றால் விபூதி கூட கிடைக்காது.”

https://patrikai.com/madras-high-court-has-condemned-chidambaram-dikshitars-arrogant-behavior/