ஞாயிறு, 20 அக்டோபர், 2024

தீபாராதனைத் தட்டேந்திப் பிச்சை எடுக்கும் தில்லைத் தீட்சிதன்களுக்கு நீதிபதியின் சவுக்கடி!!!

அதிகாரவர்க்கத்தின் பேராதரவுடன் கொட்டமடிக்கிறார்கள் தில்லை நடராசன் பெயரால் தீபாராதனைத் தட்டேந்திப் பிச்சை எடுத்து வயிறு வளர்க்கும் சிதம்பரம் தீட்சிதன்கள்.

தர்ஷன் என்னும் நல்ல உள்ளம் கொண்ட ஒரு தீட்சிதரைப் பணி செய்யவிடாமல் பிற தீட்சிதன்கள் தடுத்தது தொடர்பான வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற நீதியரசர் தண்டபாணி அவர்கள் அவன்களின் அடாவடித்தனம் குறித்து வெளியிட்ட கருத்துகள்:

நடராஜர் கோவில் தீட்சிதர்களால் எனக்கும் பிரச்னை ஏற்பட்டிருக்கிறது. மனக் கஷ்டங்களைப் போக்க வரும் மக்கள் அவமானப்படுத்தப்படுகின்றனர். தீட்சிதர்கள் ஆணவத்துடன் நடந்து கொள்வது நல்லதல்ல.

தீட்சிதர்கள் கடவுளுக்கு மேலானவர்களா? உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு, கோயில் தங்களுக்குச் சொந்தமானது என தீட்சிதர்கள் நினைக்கின்றனர்.

பக்தர்கள் வரும்வரைதான் அது கோயில். இல்லாவிட்டால் கோயில் பாழாகி விடும்.

கோவிலுக்கு வருபவர்கள் அனைவரும், சண்டைக்கு வருவதைப் போலவே தீட்சிதர்கள் நினைக்கின்றனர். காசு கொடுத்தால்தான் அங்கு பூ கிடைக்கும். இல்லையென்றால் விபூதி கூடக் கிடைக்காது.”

நீதிபதியின் இந்த அறிவுரையால் தீட்சிதன்கள் திருந்தப்போவதில்லை.

ஏற்கனவே அவன்களுக்குச் சாதகமாகத் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றத்திற்கும், நாட்டை ஆளும் அதிகாரவர்க்கத்தினருக்கும் அவன்கள் செல்லப்பிள்ளைகள் என்பது முக்கியக் காரணம் ஆகும்.

எனவே, நீதிபதி தண்டபாணி அவர்கள் வார்த்தைகளால் கொடுத்த அடி போதாது. இவன்களைத் திருத்த வேறு எதுவெல்லாம் தேவை என்பதைப் பொதுமக்கள்தான் தீர்மானிக்க வேண்டும்.

* * * * *

***தர்ஷனை[பெண் பக்தையை கனகசபை மீது அழைத்துச் சென்றதற்காக தர்ஷன் (எ) நடராஜர் தீட்சிதரையும், அவரது அப்பா கணேசன் தீட்சிதரையும், கோயிலில் பணி செய்யக் கூடாது என்று தீட்சிதர்கள் குழுவால் தடை விதிக்கப்பட்டவர்]. பணியில் சேர்த்துக் கொள்ளும்படி 2023-ம் ஆண்டு இந்து அறநிலையத்துறை அனுப்பிய உத்தரவை, ரத்து செய்ய வேண்டும் என்றும், இந்து அறநிலையத்துறை தங்களை கட்டுப்படுத்த முடியாது என்றும், கடந்த 16-ம் தேதி தீட்சிதர் தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

அந்த மனு இன்று நீதிபதி தண்டபாணி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது பேசிய நீதிபதி, நடராஜர் கோவில் தீட்சிதர்களால் எனக்கும் பிரச்னை ஏற்பட்டிருக்கிறது. மனக் கஷ்டங்களை போக்க வரும் மக்கள் அவமானப்படுத்தப்படுகின்றனர். தீட்சிதர்கள் ஆணவத்துடன் நடந்து கொள்வது நல்லதல்ல.

தீட்சிதர்கள் கடவுளுக்கு மேலானவர்களா ? உச்ச நீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகு, கோயில் தங்களுக்கு சொந்தமானது என தீட்சிதர்கள் நினைக்கின்றனர்.

பக்தர்கள் வரும் வரைதான் அது கோயில். இல்லாவிட்டால் கோயில் பாழாகி விடும்.

கோவிலுக்கு வருபவர்கள் அனைவரும், சண்டைக்கு வருவதைப் போலவே தீட்சிதர்கள் நினைக்கின்றனர். காசு கொடுத்தால்தான் அங்கு பூ கிடைக்கும். இல்லையென்றால் விபூதி கூட கிடைக்காது.”

https://patrikai.com/madras-high-court-has-condemned-chidambaram-dikshitars-arrogant-behavior/