சனி, 30 செப்டம்பர், 2023

பிள்ளையார் சிலைக் கரைப்பும் வரவேற்கத்தக்க மரணங்களும்!!!

மகாராஷ்ட்ராவில் விநாயகர் சதுர்த்தியின் 10ஆவது நாளில் ‘ஆனந்த சதுர்த்தி’ கொண்டாடினார்களாம்[9 நாள் சதுர்த்தியில் ஆனந்தம் இல்லையா?].

*டெம்போ வேனில் பிள்ளையாரை எடுத்துச் சென்றபோது, வேனின் ‘பிரேக்’ லூஸானதால்[பிடிக்காததால்] 2 லூஸுகள் செத்தார்கள்.

*விநாயகர் விசர்ஜனத்தின்போது, விசனப்படாமல் பரவசத்துடன் 4 பைத்தியங்கள் நீரில் மூழ்கி, மூச்சுத் திணறிப் பிள்ளையார் திருவடி சேர்ந்தார்கள்.

*மேலும், நாசிக்கில் மூன்று மூடர்கள், பஞ்சவடியில் 3 கிறுக்கர்கள் என்று 6 பேர் பரலோகம் சேர்ந்தார்கள்.

ஆக, 10ஆவது சதுர்த்தி நாளில் மட்டும் அழுக்குப் பிள்ளையாருக்காகத் தங்களின் உயிர்களைப் பலி கொடுத்தவர்கள்[மகாராஷ்டிராவில்] 13 பித்தர்கள்.

கடந்த பல நாட்களில், கணபதி பெயர் சொல்லி, கடலிலும் ஆறுகளிலும் களிமண் உருவங்களைக் கரைத்து நீரில் கரைந்துபோன மற்ற மாநிலத்தவரையும் சேர்த்துக் கணக்கிட்டால், பலியானவர்களின் எண்ணிக்கை பல நூறுகளைத் தாண்டக்கூடும்.

இவர்களின் சாவுக்காக எவரும் அனுதாபப்படத் தேவையில்லை. அஞ்சலி செலுத்துவதும் அவசியமற்றது.

காரணம், இவர்கள் இல்லாமல்போவதால் இவர்களால் உலகில் இருப்பவர்களுக்கு நேரும் பல தொல்லைகள் இல்லாமல்போகும் என்பதே.

ஆறறிவு மனிதர்களுக்கு மட்டுமல்ல, பிற உயிரினங்களுக்கும்தான்!

எனவே, ஆண்டுக்கு ஒரு முறை அல்ல, ஒரு நூறு முறை வேண்டுமானாலும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடலாம். அது எஞ்சியிருக்கும் இவர்களையொத்த முட்டாள்களின் எண்ணிக்கையை வெகு வேகமாகக் குறைக்கும் என்பது உறுதி!

வெள்ளி, 29 செப்டம்பர், 2023

காசு[பணம்] கொடுத்தால் காவிரி நீர் கிடைக்குமா?

காவிரி நீரைப் பகிர்வது என்பது தமிழ்நாட்டுக்கும் கர்னாடகத்துக்குமான நீண்ட நெடுங்காலப் பிரச்சினை.

“எங்கள் நிலப்பகுதியில் உற்பத்தியாகும் காவிரி ஆற்று நீரை எத்தனை அணைகள் கட்டியும் தேக்குவோம்; எங்களின் தேவைக்குப் பயன்படுத்துவோம். மிஞ்சுவதைத்தான் தமிழ்நாட்டுக்குத் தருவோம்” என்று வாதிடுவது கர்னாடகத்தின் வழக்கமாக உள்ளது.

“இந்தியாவில் உள்ள ஆறுகள் அனைத்தும் நாட்டின் பொதுச் சொத்து. உரிய முறையில், தத்தம் தேவைக்கேற்ப இருப்பில் உள்ள நீரை மாநிலங்கள் பகிரலாம் என்பது அரசியல் சாசனத்தில் இடம்பெற்றுள்ள விதிகளில் ஒன்று. எனவே, காவிரி மேலாண்மை ஆணையத்தின் ஆணைப்படி, தமிழ்நாட்டிற்குரிய நீரைத் தருதல் கர்னாடகாவின் கடமை” என்று சொல்லி, தண்ணீருக்காகத் தமிழர்கள் எத்தனைக் கண்ணீர் மழை பொழிந்தாலும் கர்னாடகா செவி சாய்க்காது.

ஒருவேளை, கர்னாடக அரசு சிறிதே கருணை காட்டினாலும், காவிரி நீர் வழங்குவதை எதிர்த்து அங்குள்ள அரசியல்வாதிகளும் விவசாயிகளும் பெரும் போராட்டம் நடத்துவார்கள்[நடத்துகிறார்கள்].

நீரைப் பகிர்வதற்கென்று அமைக்கப்பட்டுள்ள ஆணையமோ, மேல் ஆணையமோ, மேல் மேல் ஆணையங்களோ உத்தரவிட்டாலும் அவர்கள் அதை அலட்சியப்படுத்துவார்கள்.

அண்டை மாநிலங்களுக்கிடையே பிரச்சினை என்றால், அதைத் தீர்த்து வைக்கும்[பேச்சுவார்த்தை, அல்லது சட்ட நடவடிக்கைகள் மூலம்] பொறுப்பும் அதிகாரமும் ஒன்றிய அரசுக்கு இருப்பதால், அது தலையிட்டு, தமிழ்நாட்டுக்குரிய பங்கைச் செலுத்த வைக்கலாம்.

ஆனால்.....

நடுவணரசுக்கு, இந்தியாவை ராமராஜ்ஜியம் ஆக்குவது, இந்தியைத் தேசிய மொழி ஆக்குவது, மாநிலங்களுக்கு உள்ள சிறு சிறு அதிகாரங்களைச் சிறுகச் சிறுகப் பறிப்பது என்றிப்படி ஏராளக் கடமைகள் இருப்பதாலும், ஆணையம் பிறப்பித்துள்ள ஆணைகளைத் தன் அதிகாரத்தின் மூலம் நிறைவேற்றினால், தேர்தல்களில் கன்னடர்களின் வாக்குகளை இழக்க நேரிடும் என்பதாலும், இது விசயத்தில் அது தொடர்ந்து மௌனம் சாதிக்கும் என்பதில் எந்தவிதச் சந்தேகமும் இல்லை.

ஆக, கர்னாடகாவிடமிருந்து காவிரி நீரைப் பெறுவது சாத்தியமே இல்லை என்னும் நிலையில், அதைப் பெறுவதற்கான மாற்று வழிகள் பற்றிச் சிந்திப்பதே அறிவுடைமை ஆகும்.

மாற்று வழிகளில் சில:

*பண்டமாற்று: கர்னாடகத்தில் பற்றாக்குறையாக உள்ள ஏதேனும் ஒரு பொருளை[எ-டு: அரிசி, அல்லது மின்சாரம்]க் கொடுத்து[பண்டமாற்று] அவர்கள் பரிதாபப்பட்டுக் கொடுக்கும் நீரைப் பெறலாம்.

*“உங்களுடைய பண்டம் எங்களுக்குத் தேவை இல்லை. தேவைகள் அனைத்திலும் தன்னிறைவு பெற்றது எங்கள் மாநிலம்” என்று அவர்கள் சொன்னால், “எங்களின் கண்ணீரைக் காணிக்கை ஆக்குவதோடு, கட்டுக்கட்டாகப் பணமும் கொடுக்கிறோம். மனம் இரங்கி எங்களுக்குக் காவிரி ஆற்றுத் தண்ணீர் கொடுங்கள்” என்று வேண்டுகோள் வைக்கலாம்.

*அதற்கும் அவர்கள் மசியவில்லை என்றால், மேற்கண்ட கோரிக்கைகளை அவர்கள் முன்[நடுவணரசிடம் அல்ல] வைத்து ஊர்தோறும் நம் விவசாயிகள் உண்ணாவிரதம் மேற்கொள்ளலாம்.

*அதுவும் பலனளிக்காது என்றால், எல்லாம் வல்ல திருப்பதி ஏழுமலையான், ஐயப்பசாமி, பிள்ளையார், புவனேஷ்வரி&முகாம்பிகை[கன்னடரின் வழிபடு கடவுள்கள்] போன்ற சாமிகளிடம் மழை வேண்டி நேர்ந்துகொள்வது பயனளிப்பதாக அமையக்கூடும்.

*இவற்றைவிடவும் ஆகச் சிறந்த வழிகள் இருப்பின் பதிவர்கள் நம் அரசுக்குப் பரிந்துரைப்பது வரவேற்கத்தக்கது.

நன்றி!

வியாழன், 28 செப்டம்பர், 2023

“இந்தி எங்கே? எங்கே இந்தி?”... சினந்து சீறிய ‘இந்தி’யன் நிதீஷ்குமார்[பீகார் முதலமைச்சர்]!!!

பீகார் மாநிலத்தில் உள்ள பாங்கா பகுதியில் ஒரு டிஜிட்டல் நூலகத்தைத் திறந்து வைத்த பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், அதன் பெயர்ப் பலகையில் இடம்பெற்றிருந்த வாசகத்தைக் கண்ணுற்றதும், கடும் சினத்துக்கு உள்ளானார்.

காரணம்.....

வாசகம் ஆங்கிலத்தில் மட்டுமே எழுதப்பட்டிருந்ததுதான்.


இந்திக்குப் பதிலாக ஆங்கிலத்தில் எழுதி இந்தி மொழியின் முக்கியத்துவத்தை அழிக்க பார்க்கீறீர்களா? நாம் அனைவரும் இந்தியில் படித்தவர்கள். அதோடு இங்கு நடப்பது பிரிட்டிஷ் ஆட்சி அல்ல'' என்றெல்லாம் அவர் சம்பந்தப்பட்ட அதிகாரியை அழைத்துச் சாடினார் என்பது செய்தி.


உடனடியாக அந்த ஆங்கிலத்திலான நூலகப் பெயர்ப் பலகை அகற்றப்பட்டதுடன், வாசகம் இந்தியில் எழுதப்பட்ட பலகை அங்கே வைக்கப்பட்டது[பிகாரி மொழிகள்(Bihari languages) என்பது இந்தியாவிலுள்ள பீகாரில் பேசப்படும் மொழிகளை குறிக்கும். இம்மொழிகள் இந்தோ ஐரோப்பிய மொழிகளின் கீழ்வரும் இந்தோ ஆரிய மொழிக்குடும்பத்தைச் சேர்ந்தவை. இம்மொழிகள் முக்கியமாக இந்திய மாநிலங்களான பீகார், ஜார்கண்ட், மேற்கு வங்காளம், உத்தரப் பிரதேசம், நேபாளம் ஆகிய மாநிலங்களில் பேசப்பட்டவை. அவை எல்லாவற்றையும் இந்தி விழுங்கி ஏப்பம்போட்டுவிட்டது].


இங்கே தவறாமல் கவனிக்கத்தக்கது என்னவென்றால்.....


ஆங்கில எழுத்துப் பலகை அகற்றப்பட்டதுதான். 


அதை அகற்றாமலே இந்தியிலும் பலகை வைத்திருக்கலாம்தானே?


நிதிஷ் அதை அனுமதிக்கவில்லை என்பது மட்டுமல்ல,  “இங்கு நடப்பது பிரிட்டிஷ் ஆட்சியல்ல” என்று சினம் கொண்டு சீறியிருப்பதுதான்.


“ஆங்கிலத்தால் நாம் பெற்ற பயன்கள் ஏராளம். அதன் அவசியம் இன்றளவும் தவிர்க்க இயலாதது. அதை ஒரு பயன்பாட்டு மொழியாகவோ, தொடர்பு மொழியாகவோ ஏற்பதால், மீண்டும் ஒரு முறை நாம் ஆங்கிலேயரின் அடிமைகளாக ஆகிவிடமாட்டோம்” என்பதைச் சிந்தித்து அறிகிற குறைந்தபட்ச அறிவுகூட இல்லாத இந்த நிதிஷ் குமார் ஒரு மாநிலத்தின் முதல்வராக இருப்பது நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது.


நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில், ‘இந்தியா’ கூட்டணி வெற்றி பெற்றால், அமையவுள்ள ஆட்சியில், இவரும்[அல்லது, இவரின் ஆட்கள்] முக்கியத்துவம் பெறுவார் என்பது உறுதி.


இது நிகழ்ந்தால், இவரை ஒத்த இந்தி வெறியர்கள், ஆங்கிலப் பயன்பாட்டை முற்றிலுமாய்த் தகர்த்து, இந்தியை இந்தியாவின் ஒரே ஆட்சிமொழியாக்குவதில் முனைப்புக் காட்டுவார்கள் என்பது உறுதி.


இந்தித் திணிப்பை எதிர்த்து நாம் தொடர்ந்து போராடும் நிலை நீடிக்கும்.


மேலும்.....


நிதிஷ் போன்றவர்களுக்கு ஆங்கிலம் அயலவர் மொழி என்றால், நம்மைப் பொருத்தவரை இந்தி அயலவர் மொழிதான்.


அதை ஏற்றால், அவர்களுக்கு நாம் அடிமையாவோம் என்பதால், தொடர்ந்து இந்தியை எதிர்த்துப் போராடுவது தவிர்க்க இயலாதது.


தமிழ்நாட்டில் இந்தி எழுத்துகள் இடம்பெற்றுள்ள, நடுவணரசு நிறுவனங்களுக்கான அத்தனைப் பெயர்ப் பலகைகளும் உடனடியாக அகற்றப்பட்டு, தமிழில் எழுதப்பட்ட[ஆங்கிலத்திற்கும் தென்னிந்திய மொழிகளுக்கும் உரிய இடம் தருவது நம் விருப்பம்] பலகைகளை அங்கெல்லாம் இடம்பெறச் செய்தல் உடனடித் தேவை ஆகும்.


தமிழ்நாடு அரசுடன் தமிழ் மக்களும் இணைந்து போராடினால் மட்டுமே இது சாத்தியம் ஆகும்.


https://tamil.oneindia.com/news/india/bihar-cm-nitish-kumar-angry-because-name-board-in-english-instead-of-hindi-in-digital-library-at-ba-542887.html?ref_medium=Desktop&ref_source=OI-TA&ref_campaign=Sticky_Bottom&story=2

புதன், 27 செப்டம்பர், 2023

சிறுமியர் கடத்தல்! பாதுகாப்புப் பணியில் நடிகர்>ரசிகர் சங்கங்களின் பங்கு!!

இன்று[27 Sep, 2023 03:37 PM]இந்து தமிழ்’ இதழில்[https://www.hindutamil.in/] வெளியான ஒரு செய்தியின் இறுதிப் பத்தியின் கடைசி வரி அடுத்து இடம்பெற்றுள்ளது.

//பாலியல் வன்கொடுமைக்குள்ளான 12 வயதுச் சிறுமி ஒருவர் உதவி கோரி, தெருத்தெருவாகத் திரிந்து, கடைசியில் சாலையில் மயங்கி விழுந்த சம்பவம் மனிதகுலத்துக்கே அவமானம்.//

அவ்வப்போது நிகழும் இம்மாதிரியான கொடூரங்களைச் செய்தியாக்கி வெளியிடுவதன் மூலம், ஊடகங்கள் தங்களுக்கான கடமைகளைச் செய்கின்றன.

அரசியல் கட்சிகள் பலவும் கண்டனங்களைப் பதிவு செய்வதை வழக்கமாக்கியுள்ளன.

குற்றவாளிகளைத் தேடிக் கண்டுபிடித்துத் தண்டனைக்குள்ளாக்கும் முயற்சியில் காவல்துறை வழக்கம்போல் தீவிரம் காட்டுகிறது.

எவரும் உதவிட முன்வராத அவல நிலையில், காவல்துறையால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுச் சிகிச்சை பெறும் மேற்கண்ட சிறுமிக்கு 1 கோடி உதவித்தொகை வழங்குதல் வேண்டும் என்று அரசியல் கட்சித் தலைவர் ஒருவர் தம்முடைய x இல் பதிவிட்டுள்ளார்.

சிறுமிகள்[வயசுப் பெண்கள் என்றால் சற்றேனும் தற்காத்துக்கொள்ள முயன்றிருப்பார்கள்] மனித உருவில் நடமாடும் மிருகங்களால் கடத்தப்பட்டு வன்புணர்வுக்கு உள்ளாகும்போதெல்லாம்[படும் வேதனையை வார்த்தைகளால் விவரிக்க இயலாது] வழக்கமாக நடைபெறும் சடங்குகளே இவையெல்லாம்.

குற்றவாளிகளைக் கவல்துறை தேடிப் பிடித்தாலும், சாட்சிகளைச் சேகரித்து வழக்குத் தொடுப்பதும், நீதிமன்றத்தால் அவர்கள் தண்டிக்கப்படுதல் என்பதும் வெகு அரிது என்றே சொல்லலாம்.

இந்த அவல நிலை மாற வேண்டுமானால்.....

சிறுமிகள் கடத்தப்படுவதைக் காண நேர்ந்தால், காணும் பொதுமக்கள், தங்களுக்குள் எத்தனை வேறுபாடுகள் இருப்பினும் அத்தனையையும் புறக்கணித்து, ஒருங்கிணைந்து செயல்பட்டுச் சிறுமிகளைக் கடத்தும் கயவர்களைத் தண்டிக்க வேண்டும்.

சட்டதிட்டங்களைப் பற்றிக் கவலைப்படாமல் அவர்களை அடித்துக் கொல்வதும் வரவேற்கத்தக்கதே[காவல்துறை என்கவுண்டர் போல] .

நடுவணரசு இதற்குத் தேவையான சட்டங்களை உருவாக்குவதோ, திருத்துவதோ மிக மிக அவசியம்.

மேலும், இக்குற்றங்களைத் தடுப்பதில் தங்களுக்கு முக்கியப் பங்குண்டு என்பதை மக்கள் உணர்ந்து செயல்படுவது மிக மிக மிக முக்கியம்.

கட்சி அமைப்புகளும், நடிகர்களுக்கான ரசிகர் மன்றங்களும் இல்லாத ஊர்களே இல்லை. இவற்றால் கட்சித் தலைவர்களும், நடிகர்களும் மட்டுமே பயனடைகிறார்கள்.

தொண்டர்களின் நேரமும் பொருளும் பெருமளவில் விரையம் ஆகிறது. அவற்றைப் பயனுள்ள வகையில் செலவழிப்பது பாராட்டுக்குரியதாகும்.

இவர்கள் நினைத்தால், ‘சிறுமியர் வன்கொடுமைத் தடுப்புச் சங்கம்’ என்பது போன்ற பெயர்களில் அமைப்புகளை உருவாக்கி, சிறுமி[+இளம்பெண்கள்]களுக்கான பாதுகாப்பு அரணாகச் செயல்படலாம்.

சிந்திப்பார்களா?!

விரிவான செய்திக்கு..... https://www.hindutamil.in/news/india/1129507-cctv-shows-bleeding-12-year-old-rape-victim-in-ujjain-seeking-help-being-shooed-away.html

செவ்வாய், 26 செப்டம்பர், 2023

அமேசான் கிண்டிலில் என் புதிய[48ஆவது] நூல்!

'சிற்றின்பமும் சிறு சிறு இன்பங்களும்’ ஏற்கனவே இந்தத் தளத்தில் வெளியான ‘வாழ்வியல்’கட்டுரை.

இதனுடன், இங்கு அவ்வப்போது வெளியான 8 கட்டுரைகளை இணைத்து, மேற்கண்ட தலைப்பில் 48ஆவது நூலாக அமேசான் கிண்டிலில் இணைத்துள்ளேன்.













தாங்கள் கிண்டிலில் சந்தாதாரர் எனின்.....

9 கட்டுரைகளில், சிலவற்றையோ, பலவற்றையோ வாசிக்காமல் இருந்தால் அவற்றை அதில் வாசிக்கலாம்.

வாசித்து, கட்டுரைகளுக்கான விமர்சனங்களைப் பதிவு செய்யுமாறு[கிண்டிலில்] வேண்டுகிறேன்.

நூலுக்கான அறிமுக உரை:

//நூலில் இடம்பெற்றுள்ள 9 கட்டுரைகளும் வாழ்வியல் குறித்த அதி தீவிரச் சிந்தனையின் வெளிப்பாடாகும்.

அத்தனையும் தரத்தில் ஒன்றையொன்று மிஞ்சுபவை.

நூலுக்கான தலைப்புக்குச் சிறந்த ஒன்றைத் தேர்வு செய்வதில் நிறைய நேரம் விரயமானது.

இன்ப உணர்வுக்கு ஈர்ப்புச் சக்தி அதிகம் என்பதால், ‘சிற்றின்பமும் சிறு சிறு இன்பங்களும்!’ நூலின் தலைப்பானது.


வாசியுங்கள்.

எவ்வகையிலேனும் என் எழுத்து தங்களுக்குப் பயன் நல்கும் என்பது என் நம்பிக்கை.

நன்றி!//

திங்கள், 25 செப்டம்பர், 2023

அழுக்கில் பிறந்த பிள்ளையாரும் பொருள்கள் அழுகி நாறும் நீர்நிலைகளும்!!!

“நாம் உணவு உண்பது ஏன்?” -“உயிர் வாழ்வதற்கு” என்பது சரியான பதில்.

“உறங்குவது ஏன்?” பதில்: “உடம்பு புத்துணர்ச்சி பெறுவதற்கு.”

“கடவுளை வணங்குவது ஏன்?”

“துன்பங்கள் தீர்வதற்கு, ஆசைகள் நிறைவேறுவதற்கு என்றிப்படிப் பல காரணங்களுக்காக” என்கிறார்கள் பக்திமான்கள்.

“ஆறு காலப் பூஜைகள், அபிஷேகங்கள், கும்பாபிஷேகங்கள், சாமி ஊர்வலங்கள், திருவிழாக்கள்னு கொண்டாடுகிறீர்களே, அதெல்லாம் எதற்கு?”

“கும்பிடுற சாமிகளைக் குஷிப்படுத்த.”

“நடராசன், கண்ணபிரான், கந்தவேள், நொந்தவேள், காளி, மூளின்னு ஏராள சாமிகளைக் கும்பிடுறீங்க. அது கணபதியோ, விநாயகனோ, விக்னேஷ்வரனோ, பிள்ளயாரோ... தும்பிக்கையோடு ஒரு சாமியைக் கும்பிடுறீங்களே அது எதுக்கு?”

“மத்த சாமிகளை எதுக்குக் கும்பிடுறோமோ அதே காரணம்தான் இதுக்கும். துன்பங்கள் நீங்கி இன்பமாக வாழ்வதற்குத்தான்.”

“ரொம்பச் சந்தோசம். கும்பிடுங்க; கும்பிடாதவங்களுக்குத் தொல்லை தராம விழாக்கள் எடுத்துச் சாமிகளைக் குஷிப்படுத்துங்க. தடுப்பாரில்லை; உங்களுக்குத் தொல்லை கொடுப்பாரும் இல்லை. டைசியாக ஒரு கேள்வி.”

“மத்த சாமிகளையெல்லாம் கும்பிட மட்டும் செய்யுறீங்க. ‘மனுசன் பாதி. மிருகம் பாதி’யாகக் காட்சிதரும் இந்தப் பிள்ளையார்ங்கிற சாமியைக் கும்பிடுறதோடு, மண்ணில் சிலைகள் செய்து, ஆடை அணிவித்து, பூ மாலை போட்டு,  அலங்காரம் பண்ணி, ஆற்று நீரிலோ கடல் நீரிலோ கரைக்கிறீங்களே, ஏன்?”

காரணம்?

இந்தக் கேள்விக்கு ஓரளவேனும் பொருந்துகிற வகையில் காரணம் சொன்னவர் எவரும் இல்லை; சொல்லப்படும் அத்தனைக் காரணங்களும் படு சொத்தை.

‘நீரில் கரையும் விநாயகர் அவர் தாய் தந்தை பார்வதி சிவனிடம் சென்று சேர்கிறார்’ என்பது ஒரு காரணம்.

நமக்குள் எழும் ஐயம்.....

நீரில் சிலையைக் கரைப்பதற்கு முன்பு இந்தப் பிள்ளையார் எங்கே இருந்தார்? அம்மையும் அப்பனும் கைலாயத்தில் என்றால், இவர் எந்த லாயத்தில் இருந்தார்?

களிமண்ணில் சிலை செய்து நீரில் கரைக்காமல், மரத்தால் சிலை செய்து நெருப்பில் போட்டு எரித்தாலோ, பஞ்சில் சிலை சமைத்துக் காற்றில் பறக்கவிட்டாலோ பெற்றவர்களிடம் சென்றடையமாட்டாரா?

‘சிலைகள் வடிக்கப்படுவதும் பின் கரைக்க படுவதும் பிறப்பதும் இறப்பதுமான நிலையாமைத் தத்துவத்தை உணர்த்துகிறது’ -இது இன்னொரு காரணம்[தத்துப்பித்துவம்].

தோன்றிய அனைத்துப் பொருள்களும் உயிர்களும் அழிந்துகொண்டே இருப்பது நிலையாமைத் தத்துவத்தை உணர்த்தவில்லையா? இருக்கிற கொஞ்சம் அறிவைக் கரைப்பதற்காகவா இந்தத் தத்துவக்கதை?

ஒரு சமயம், பார்வதிதேவி கங்கையில் நீராடியபோது, தன் அழுக்கைத் திரட்டி பொம்மையாக்க, அது யானைத்தலையும் மனித உருவமும் உடையதாக அமைந்தது[விரிவாகச் சொல்லப்பட வேண்டிய கதை]. அதை அன்னை, கங்கையில் எறிய, பெரிய உருவத்துடன் விநாயகர் வெளிப்பட்டார்.

அப்போது, பார்வதிதேவியும் கங்கையும் அவரைப் பிள்ளையாக ஏந்திக் கொண்டனர். இக்காரணத்தால் பார்வதி, கங்கை இருவருமே அவருக்கு அன்னை ஆனார்கள். இதனாலேயே சதுர்த்தி முடிந்ததும், பிள்ளையாரைக் கங்கையில் கரைக்கும் வழக்கம் ஏற்பட்டது’ -இது இன்னுமொரு கதை.

அழுகிய பிணங்கள் சுமந்து, முடை நாற்றம் வீசும் கங்கை ஒரு பெண் தெய்வமா? சிலையாக்கிக் கரைத்தால்தான் தன் பிள்ளையை[பிள்ளையார்] அவரால் கொஞ்ச முடியுமா?

ஆடிப்பெருக்கில் வெள்ளம் ஏற்படும். அப்போது ஆற்றில் உள்ள மணலை வெள்ளப்பெருக்கு அரித்துச் சென்றுவிடும். இதனால் அந்த இடங்களில் நிலத்தடி நீர்மட்டம் குறையும். 

மணல் அடித்துச் செல்லப்படாமல் இருப்பதற்கு, களிமண்ணைக் கரைப்பதால், அது ஆற்று நீரை வெளியேறவிடாமல் தடுக்கிறது. அதனால், நிலத்தடி நீர்மட்டம் உயரும். எனவேதான், விநாயகருக்குச் சிலை வைத்து, அதைக் கரைக்கும் பழக்கம் வந்துள்ளது. ஈரமான களிமண்ணைக் கரைத்தால் பலன் கிடைக்காது என்பதால்தான், அதை மூன்று நாட்கள் வைத்து இறுகிப்போனதும் அதைக் கொண்டுபோய் ஆறுகளில் கரைக்கிறார்கள்’.

இது பக்திஜீவிகள் பலராலும் சொல்லப்பட்ட/படும் கதை.

ஆற்றுநீரைத் தடுத்து நிறுத்தப் பலதரப்பட்ட வசதிகள் இருப்பதைக்கூட மறந்து திரியும் இவர்கள் மனிதர்கள் அல்ல; செம்மறியாட்டு மந்தைகள்.

இப்படியான கதைகளைச் சொல்லும் இவர்கள், களிமண் பிள்ளையாரைக் கடலிலும் ஆறுகளிலும் கரைப்பதால் நிகழும் கேடுகள் பற்றிச் சிந்திப்பதே இல்லை.

இதற்கு ஆதாரமாக, இன்று[25.09.2023] காலை[08.30] ‘சன்’ தொலைக்காட்சியில் அறிவிக்கப்பட்ட ஒரு செய்தி:

//சென்னை, மெரினா கடற்கரையில் நூற்றுக்கணக்கான விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டதால், கடல் நீர் கரும்பச்சையாக மாறியது. ஏராளமான மரக்கட்டைகளும். பிய்ந்த துணிகளும், உதிர்ந்த பூ மாலைகளும் மிதக்கும் நிலையில் கடற்கரையெங்கும் துர்நாற்றம் வீசுகிறது.

இவற்றைச் சேகரித்து அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள நகராட்சிப் பணியாளர்கள் மிகுந்த மனச் சோர்வுக்கும் உடல் சோர்வுக்கும் உள்ளாகியிருக்கிறார்கள்.//

எந்தவொரு அறிவியல் அடிப்படையிலான காரணம் பற்றியும் சிந்திக்காமல், சிலைகளை நீர்நிலைகளில் கரைத்துச் சுற்றுச் சூழலை மாசுபடுத்தும் இந்தக் காட்டுமிராண்டிக் கும்பலின் எண்ணிக்கை அதிகரிக்கிறது.

இம்மாதிரியான மூடநம்பிக்கைகளை வளர்ப்பதன் மூலம்  ஆட்சிப்பீடத்தைக் கைப்பற்றியவர்களின் முழு ஆதரவும் இவர்களுக்கு இருப்பதால், இவர்கள் அடிக்கும் கொட்டம் கொஞ்சநஞ்சமல்ல.

போற்றி போற்றி! பிள்ளையார் போற்றி!!

அழுக்கில் அவதரித்து, ஆற்றுநீரையும் கடல் நீரையும் அழுக்காக்குவதற்கு ஒரு கடவுளா?

அடக் கடவுளே!!!

http://blog.raaga.com/2020/08/vinayagar-chathurthi-kadhaigal.html

https://www.dailythanthi.com/Others/Devotional/2021/09/06222634/Why-dissolve-Ganesha-idol-in-water.vpf

https://manithan.com/article/ganesha-sathurthi-in-water-dissolve-1631250406

ஞாயிறு, 24 செப்டம்பர், 2023

உறங்கும் ‘விக்ரம் லேண்டர்’, ‘பிரக்யான் ரோவர்’... விழிப்பூட்ட.....

 //நிலவில் தூக்க நிலையில் உள்ள ‘சந்திரயான் 3 விக்ரம் லேண்டர்’, ‘பிரக்யான் ரோவர்’ ஆகிய இரண்டையும் விழிக்கச் செய்ய இஸ்ரோ தொடர்ந்து முயற்சி மேற்கொண்டுள்ளது// என்பது இன்றளவில் அறியப்பட்ட தகவல். 

இதுவரை, இது தொடர்பாக அவர்கள் மேற்கொண்ட முயற்சிகள் வெற்றிபெறவில்லை. 


கடந்த வியாழக்கிழமை அங்கே சூரியன் உதித்தது. அக்டோபர் 6ஆம் தேதிவரை நிலவில் பகல் இருக்கும் என்பதால், அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 


கருவிகள் வேலை செய்வதற்கு உகந்த சூரிய வெளிச்சம் இருக்க வேண்டும். இதற்கு, சூரியக் கோணம் 6° முதல் 9° வரை இருப்பது அவசியம்.


இப்படி இருந்தால் விழிப்பூட்டும் முயற்சியைத் தொடர்வார்கள் நம் விஞ்ஞானிகள்.


இது நிகழாவிட்டால், 15 நாட்கள் கழித்து மீண்டும் சூரியன் உதிக்கும்வரை காத்திருந்து கருவிகளுக்கு விழிப்பூட்ட ஆவன செய்வார்கள்.


முயற்சியில் வென்றால், 15 நாட்களுக்குப் பின் உறக்க நிலைக்குச் செல்வதும், அதன்பின் 15 நாட்கள் கழித்து விழிப்பதும் தொடரும்.


தோல்வியே தொடருமேயானால்,  


அமெரிக்கா, சீனா, ரஷ்யா போன்ற நாடுகளால் சந்திரனுக்கு அனுப்பப்பட்ட மேற்கண்டவை போன்ற கருவிகள், உறக்கத்தில் ஆழ்ந்து, வெயில் வந்ததும் விழிப்பு பெற்றது உண்டா? “ஆம்” எனில் அது எப்படி நிகழ்ந்தது? என்று அவற்றிடம் விசாரிக்கலாம்.


ஆனால், அவற்றில் எந்தவொரு நாடும் தாங்கள் கண்டறிந்த உண்மையை நம்முடன் பகிரமாட்டா என்பது உறுதி.


இந்நிலையில்…..


‘சந்திராயன் 3’ஐ நிலவுக்கு அனுப்புவதற்கு முன், நம் விஞ்ஞானிகள் அதன் மாதிரியை[பொம்மை]த் திருப்பதி ஏழுமலையானின் பார்வைக்கு வைத்து வழிபட்டது நினைவுக்கு வருகிறது.


ஏழுமலையானின் அருட்பார்வை ‘சந்திராயன் 3’ பொம்மை மீது பட்டதால்தான் அது வெற்றிகரமாகத் தனக்கு இடப்பட்ட பணிகளைச் செய்து முடித்தது[பணி முடிந்த பின்னரே உறக்கத்தில் ஆழ்ந்தது] என்பதும் கருத்தில் கொள்ளத்தக்கது.


நிலவில் தூக்க நிலையில் உள்ள ‘விக்ரம் லேண்டர்’, ‘பிரக்யான் ரோவர்’ ஆகியவற்றை எழுப்பிச் செயல்பட வைப்பதற்கும், அவற்றின் பொம்மைகளுடன் ஏழுமலையானைத் தரிசித்துக் கோரிக்கை வைப்பதே ஆகச் சிறந்த வழியாகும்.


எனவே,


நம் விஞ்ஞானிகள், மேற்கண்ட கருவிகளுக்கான பொம்மைகளுடன் திருப்பதி சென்று அவரை வழிபடுதல் வேண்டும் என்பது, ஏழுமலையானின் பக்தர்கள் மட்டுமல்லாமல், நம்மைப் போன்ற இரண்டுங்கெட்டான்களின்[கடவுளை நம்புவதும் நம்பாததுமான குழப்ப நிலையாளர்] எதிர்பார்ப்பும்கூட!


                                    *   *   *   *   *

https://tamil.oneindia.com/news/chennai/will-chandrayaan-3-vikram-lander-and-pragyan-rover-wake-up-in-moon-isro-tries-over-and-over-again-541763.html?story=3


சனி, 23 செப்டம்பர், 2023

‘இபிஎஸ்’களின் தலைவர் ‘அண்ணா’வா, ‘அமித்ஷா’வா?!?!

“அறிஞர் அண்ணாவை அவமதித்தவனின் நாக்கை அறுப்போம்; குஞ்சைத் துண்டிப்போம்” என்று இங்கே மேடை ஏறிச் சபதம் மேற்கொண்டது அண்ணாவின் பெயரைச் சொல்லிக் கட்சி நடத்தும் ஒரு கூட்டம்.

இப்போது ‘சமாதானம்’ பேச அண்ணாமலைக் கட்சியின் அதி முக்கியத் தலைவர் அமித்ஷாவைச் சந்திக்கத் தில்லி சென்று காத்துக்கிடக்கிறது.

அவர் இவர்களைச் சந்திக்க மறுத்துள்ளார் என்பது இன்றையக் காலைச் செய்தி[‘சன்’ தொ.கா].

தன்மானத் தமிழர்களா இவர்கள்?

கூட்டணிக் கட்சிகளிடையே முரண்பாடுகள் ஏற்பட்டால், அதைச் சரி செய்ய, பெரிய கட்சித்(தமிழ்நாட்டில்) தலைவரை அல்லது, தலைவர்களைச் சிறிய கட்சியின்[தமிழ்நாட்டில் ‘பாஜக’ எடுபிடிகளின் ஒரு சிறு கும்பல் மட்டுமே உள்ளது] தலைவரோ, தலைவர்களோ தேடிவந்து சந்தித்துப் பேசுவதுதான் வழக்கம்.

அந்த வழக்கத்தை இவர்கள் மாற்றியிருக்கிறார்கள்[அமித்ஷாதான் எடப்பாடியைத் தேடிவந்து சந்தித்துப் பேசியிருக்க வேண்டும்]. 

இவர்கள் சென்றது சமரசம் பேச அல்ல; அமித்ஷாவின் திருவடி வருடி மன்னிப்புக் கேட்பதற்காக.

பெருந்தலைவர் காமராசர் காலத்திலிருந்து தமிழ்நாட்டின் எந்தவொரு தலைவரும் இப்படியொரு இழி செயலைச் செய்ததில்லை.

பதவியில் இருந்தபோது சம்பாதித்த சொத்துகளைச் சேதாரமில்லாமல் கட்டிக் காப்பதற்காகத் தமிழனின் தன்மானத்தை விலை பேசுகிறார்கள் இவர்கள். 

அமலாக்கத் துறை, வருமானவரித் துறை என்று எதையெதையெல்லாமோ ஏவி ஏவித் தாங்கள் தப்பான வழிகளில் சம்பாதித்ததையெல்லாம் பறிப்பார்கள் ‘அவர்கள்’ என்ற பயம் இவர்களுக்கு  இருந்தால்.....

“கட்டுக்கட்டாய்ப் பணம், கொத்துக்கொத்தாய்த் தங்க நகைகள் என்று இருப்பில் இருப்பதையெல்லாம், இற்றுப்போகாத கெட்டியான பாலிதீன் பைகளில் மூட்டை கட்டி, கழிவுகள் தேங்குகிற ‘செப்டிக்’ டேங்குகளில் போட்டு வையுங்கள். யாராலும் கண்டுபிடிக்க முடியாது” என்பதே இவர்களுக்கான நம் பரிந்துரை.

“உங்களின் சுயநலத்திற்காகத் தமிழனின் தன்மானத்தைக் குழி தோண்டிப் புதைக்க வேண்டாம்” என்பதே நம் வேண்டுகோள்.

வெள்ளி, 22 செப்டம்பர், 2023

இந்தப் பாதிரியார் ‘ஒரு மாதிரி’யா?!?!

மனோஜ்[50] ஒரு கிறித்தவப் பாதிரியார்; பெங்களூருவில் பணியாற்றுகிறார்.

திடித்திடீர்னு சபரிமலை ஐயப்பன் மீது அபிரிதமான ஈர்ப்பு இவருக்கு ஏற்பட்டது.

திருவனந்தபுரம் அருகிலுள்ள ஐயப்பன் கோயிலுக்குப் போய், மாலை போட்டு, காலை மாலை என்று இரண்டு வேளையும் அழுக்குப்போகக் குளித்து ஐயப்ப சாமியைத் தரிசனம் செய்தார்.

41 நாள் விரதம் முடிந்ததும், இருமுடி கட்டி, சபரி மலைக்குச் சென்று ஐயப்ப சாமியை[“சாமியேஏஏஏய்... சரணம் ஐயப்பா!!!”]த் தரிசனம் பண்ணினார்.

ஐயப்பனுக்குப் பூஜை செய்யும் நம்பூதிரிகள் ஆனந்த சாகரத்தில் மூழ்கித் திளைத்தார்கள்; இவருக்குப் பொன்னாடை அணிவித்து மனம் பூரித்தார்கள்.

மலையாளம், தமிழ், இங்கிலீசு, இந்திலீசுன்னு இங்குள்ள அத்தனைப் பத்திரிகைகளிலும், பிற ஊடகங்களிலும் செய்தி வெளியாகி நாடெங்கும் பெரும் பரபரப்பை உண்டுபண்ணியது பாதிரியாரின் இந்த அதிரடி ஐயப்பத் தரிசனம்.

ஒரு பேட்டியில், “பல்வேறு மதங்கள் குறித்தும் தெரிந்துகொள்ளும் ஆசை எனக்கு உண்டு. இதன் காரணமாகத்தான் சபரிமலை வந்தேன்” என்று கூறியிருக்கிறார்[ஆனால், மதம் மாறவில்லையாம்].

கணுக்கால்வரை கைலி கட்டி, தொப்பி அணிந்து, “உங்களுடன் ஒரு நாள் தொழுகை நடத்த விரும்புகிறேன்” என்று திருவனந்தபுரம் இஸ்லாமியரிடம் இவர் சொல்வாரேயானால், அவர்கள் ஏற்பார்களா, எள்ளி நகையாடுவார்களா? சீக்கியர்களிடம் அனுமதி வேண்டினால், அவர்கள் ஆரத் தழுவி வரவேற்பார்களா, சிரித்து மழுப்புவார்களா?

வேறு வேறு மதங்கள் பற்றி அறிந்துகொள்ள ஆசைப்பட்ட  பாதிரியார், சம்பந்தப்பட்ட கோயில்களுக்குச் சென்று சம்பந்தப்பட்ட மதத் தலைவர்களின் அனுமதியோடு ஆய்வு நிகழ்த்தியிருக்கலாம்; தொடர்புடைய ஆய்வு நூல்களைத் தேடிக் கண்டறிந்து வாசித்திருக்கலாம். மாறாக.....

“ஒரு மதத்தைப் பற்றி அறிந்துகொள்ள[கிறித்தவராக இருந்துகொண்டே] அந்த மதம் சார்ந்த பக்தராக மாறியது நம்மை நகைக்கத் தூண்டுகிறது.

இவரின் செயல்பாடு சரியானதே என்றால்.....

கொலைகாரர்கள் பற்றி அத்துபடியாகத் தெரிந்துகொள்ள விரும்பும் ஒருவருக்குக் கொலை செய்த அனுபவம் தேவை என்றாகிறது.

ஆபாசப் படங்களில்[Porno] நடிப்பவர்களைப் பற்றி முழுமையாக அறிந்திட நினைத்தால், அம்மாதிரிப் படங்களில் நடித்திருப்பது அதற்கான தகுதி என்று கொள்ள நேரிடும்.

ஒரு பெண் ஆய்வாளர், விலைமகளிரின் அவல வாழ்க்கை குறித்து ஆராய்ச்சி செய்ய வேண்டுமானால், சிறிது காலமேனும் ஒரு விலைமகளாக வாழ்ந்திருத்தல் அவசியமாகிறது.

பாதிரியாரின் பித்துக்குளித்தனமான செயல்பாடு நம்மைப் போன்றோருக்கு வினோதமானதாகத் தோன்றுகிறது. ஆனால், சம்பந்தப்பட்ட கிறித்தவ நிர்வாகச் சபை இதை அவமானமாகக் கருதியிருக்கிறது; திருப்பலி உள்ளிட்ட சடங்குகளை இவர் செய்யத் தடை விதித்துள்ளது.

இவருக்கு வழங்கப்பட்ட அடையாள அட்டையையும் திரும்பப் பெற்றுள்ளது.

எது எப்படியோ,

“விதம் விதமான மதவாதியாக மட்டுமல்ல, பரிசுத்த நாத்திகனாகவும் நான் வாழ்ந்துகாட்டுவேன்” என்று பாதிரியார் பின்னர் அறிவிப்பார் என்பது அடியேனின் அசைக்க இயலாத நம்பிக்கை!

ஹி... ஹி... ஹி!!!

வியாழன், 21 செப்டம்பர், 2023

‘ஒரே நாடு ஒரே மதம்’ சாத்தியமே!!!

‘இந்தியச் சாசனத்தின் 32ஆவது பிரிவின்படி, இந்திய மக்கள் சார்பில், ‘ஒரே அரசியல் சாசன மதம்’ கோரி முகேஷ் குமார், முகேஷ் மன்வீர் சிங் என்னும் இருவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்கள்.

“ஒரு மதத்தை மட்டும் இந்த நாட்டுக்குரிய மதம் ஆக்கினால், மற்ற மதத்தைப் பின்பற்றுவோர் தத்தம் மதத்தைப் போற்றுவதைத் தடுக்க முடியுமா?” என்று மனுதாரர்களிடம் கேள்வி எழுப்பிய நீதியரசர்கள், அவர்களின் மனுவைத் தள்ளுபடி செய்தார்கள் என்பது ஊடகச் செய்தி[09.09.2023].

நீதியரசர்கள் இன்னும் கொஞ்சமே கொஞ்சமேனும் சிந்தித்திருந்தால், மனுவை நிராகரித்திருக்க வாய்ப்பே இல்லை என்பது எளியேன் மிக்கப் பணிவுடன் முன்வைக்கும் கருத்தாகும்.

“ஒரே நாடு; ஒரே மொழி; ஒரே இனம்[‘பாரத்’தன்]; ஒரே தேர்தல்’  என்று ஒரு ‘ஒரே’யில் பல்வேறு இனங்களையும், மொழிகளையும் 'இந்தி'யருக்குள்ளும் இந்திக்குள்ளும் ‘அடக்கம்’ செய்துவிடத் திட்டமிடும் ஒன்றிய அரசு, அதை நடைமுறைப்படுத்துவதிலும் தீவிரம் காட்டுகிறது. விரைவில் அது சாத்தியப்படவும்கூடும்

‘ஒரே நாடு; ஒரே மதம்’ என்று சிறுபான்மை மதங்களையெல்லாம் ‘ஒரே’யில் முடக்கிப்போடும் எண்ணமும் இந்த அரசுக்கு உண்டு. ஆனால், அதை நடைமுறைப்படுத்துவதில் பல சிக்கல்களும் பாதகங்களும் இருப்பதால், குலுக்கலின்[துண்டுச் சீட்டுகளில் மதங்களின் பெயர்களை எழுதிக் குலுக்கி ஒன்றைத் தேர்ந்தெடுத்தல்] மூலம் ஒன்றைத் தேர்வு செய்து, இந்தியா ‘பாரத்’தின் ஒரே தேசிய மதமாக அறிவிக்கலாமா?” என்று முன்னணி மதத் தலைவர்களிடம் கேட்கலாம்.

ஆனால்,  அவர்கள் சம்மதிக்க மாட்டார்கள் என்பது 100% உறுதி.

எனினும், இதற்கு மாற்றாக வேறொரு தேர்வு முறையைப் பாரத் அரசு கையாளலாம்[‘எங்களின் கடவுளைத் தொழுதால் துன்பங்கள் அகலும்; தீராத நோய்களும் குணமாகும்; செத்தவர் பிழைத்ததுண்டு’ என்று மதவாதிகள் செய்யும் பரப்புரையை மனதில் கொண்டு இந்த ‘முறை’ பரிந்துரைக்கப்படுகிறது].

அது.....

‘பிழைப்பது 100 சதவீதம் சாத்தியமே இல்லை’ என்று மதச் சார்பில்லாத, தேர்ந்த மருத்துவர்கள் அடங்கிய குழுக்களால் அறிவிக்கப்பட்ட நோயாளிகளை[ஒவ்வொரு மதக் குழுவுக்கும் ஒரு நோயாளி], தத்தம் கடவுளைப் பிரார்த்தித்து உயிர் பிழைக்கச் செய்யும்படி முன்னணி மதக் குழுவினரை நிர்ப்பந்திக்கலாம்[இந்நிகழ்ச்சியைத் தொ.கா.போன்ற ஊடகங்களில் உலகோர் அனைவரும் காணும்படிச் செய்யலாம்].

முதலில் எந்தக் குழுவினர் பிழைக்க வைக்கிறார்களோ, அவர்களின்  மதத்தை நம் தேசத்தின்[பாரத்] ஒரே மதமாக அறிவிக்கலாம்.

இந்த அதிசயத்தை எந்தவொரு குழுவும் நிகழ்த்தவில்லை என்றால், நாத்திகத்தை ஒரு மதமாக[மதங்களே ஏற்கத்தக்கன அல்ல என்னும்போது, நாத்திகத்தை மதமாக ஏற்பதில் தவறில்லை] ஏற்று அதைப் ‘பாரத்’தின் ஏகபோக மதமாக்கலாம்.

நம்முடைய இந்தப் பரிந்துரையை ஒன்றிய அரசு பரிவுடன் பரிசீலிக்க வேண்டும் என்பது நம் கோரிக்கையாகும்! 

செவ்வாய், 19 செப்டம்பர், 2023

பிள்ளையார் பிறந்த நாள்[சதுர்த்தி] வருத்தங்கள்!!!

“நமக்கும் மேலான ஒரு சக்தி இருக்கிறது. அது கருணை வடிவானது. அதை[கடவுளை] வழிபட்டால், துன்பங்கள் அகலும்; நினைத்த காரியம் கைகூடும்” என்றார்கள் நம் முன்னோர்களில் சிலர்.

“அவை நடந்தனவா? இனியேனும் நடக்குமா?” என்றெல்லாம் ஆராயாமல் அழுத்தம் திருத்தமாகக் கடவுளை நம்பினார்கள் நம் மக்கள்.

கிறித்தவர்கள் அவரைக் ‘கர்த்தர்’ என்றார்கள். இஸ்லாமியர்கள் அவரை ‘அல்லா[ஹ்]’ என்று அழைத்தார்கள்.

இந்து மதத்தவரோ, ஆளாளுக்கு ஒரு கதையைக் கற்பனை செய்து, அவரைப் பல்லாயிரவர் ஆக்கினார்கள்.

ஒரு கடவுளுக்கு ஒரு கதை போதாது என்று விதம் விதமான பல புதுப் புதுக் கதைகள் சொல்லி மனம் பூரித்தார்கள்.

உதாரணத்துக்கு, சிவன் ஆனவர் உருத்திரன், முக்கண்ணன், நடராசன் என்றிப்படி பல வடிவங்கள் பெற்றது. திருமால் என்பவர் விஷ்ணு, கண்ணபிரான், இராமபிரான் என்றானது.

ஒவ்வொரு பெயருக்குப் பின்னாலும் ஒரு கதை.

பார்வதி தேவியின் அழுக்கில் உதித்த பிள்ளையாருக்கோ, விநாயகன், விக்னேஷ்வரன், யானை முகன், கணபதி என்று  ஏராளமான பெயர்கள்; கற்பனைக்கு எட்டாத கதைகள்.

மேற்கண்டவர்களின் அவதாரம் குறித்தக் கதைகளில் பலவும் அருவருக்கத்தக்க ஆபாசத்தின் உச்சம் தொட்டவை.

கடவுள் ஒருவரே என்பதை உணரும் மனப் பக்குவம் இல்லாதவர்களுக்காகப் பல கடவுளர் கொள்கையை முன்னோர்கள் உருவாக்கினார்கள் என்பார்கள்.

ஆனால், அதனால் விளைந்த கேடுகள் மிகப் பல.  

குப்பை மேடு போல் குவிந்து கிடக்கும் இந்தக் கடவுள்களால் உருவான மூடநம்பிக்கைகள் எண்ணிக்கையில் அடங்காதவை.

இவர்களைத் துதிபாடிக் கூத்தடிப்பதற்கென்று மனிதர்கள் செலவிடும் பொருளும் நேரமும் அதிகரித்தவாறு உள்ளன.

மக்கள் வாழ்வில் இடம்பெறும் அத்தனை நன்மைகளையும் நமக்கு அளிப்பவர்கள் இந்த கற்பனைக் கடவுள்கள்தான் என்று இவர்கள் செய்யும் பரப்புரை கொஞ்சநஞ்சமல்ல.

உதாரணத்துக்கு, பிள்ளையார் வழிபாட்டால் மக்கள் பெறும் பயன்கள் குறித்து ஊடகம் ஒன்றில் வெளியான பதிவின் ஒரு பகுதி கீழே:

இப்படிக் கதையளப்பது போதாதென்று, பிள்ளையார் பொம்மை வாங்கிவருவதற்குக்கூட நல்ல நேரம் பார்க்க வேண்டும் என்கிறார்கள். 

கற்பனைக் கடவுள்களை வழிபடுவதற்கு நல்ல நேரமும் கெட்ட நேரமும் கற்பிக்கிற இந்தக் காட்டுமிராண்டி மனிதர்களைக் கண்டித்துப் பேசினாலோ, எழுதினாலோ, “பக்தர்களின் மனதைப் புண்படுத்துகிற இவனைக் கைது செய்” என்று கொடி பிடிப்பார்கள்.


ஆகவே.....


பக்தர்களின் மனம் நோகும்படியாக எதையும் சொல்லித் தொலைக்காமல், “பிள்ளையார்[மற்றக் கடவுள்கள் பிறந்த அசிங்கக் கதைகளையும் நினைவுகூர்க], பிறந்த நாள் வருத்தங்கள்” என்று சொல்லிக்கொள்வதில் ஆறுதல் பெறுகிறேன்!

திங்கள், 18 செப்டம்பர், 2023

‘பாரதிய தர்மம்’... தமிழ்நாடு ஆளுநர் ‘ரவி’யின் புதுப் ‘புருடா’!!!

தமிழ்நாட்டில், ஆன்மிக நெறியைச் சிதைத்திடும் வகையில் நாத்திக நெறியாளர்கள் செயல்படுவதாகப் புரளி கிளப்பிக்கொண்டிருக்கிறார்கள். 

இங்குள்ள நாத்திகவாதிகளின் எண்ணிக்கையைப் படிப்படியாகக் குறைப்பதற்கான பல வழிகளையும், உத்திகளையும், வெகு துரிதமாகக் கையாண்டுவருகிறது ஒன்றிய அரசு..

அவற்றில் குறிப்பிடத்தக்கவை, மாஜி காவல்துறை அதிகாரிகளான அண்ணாமலையைத் தமிழ்நாடு ‘பாஜக’ தலைவராகவும், ஆர்.என் ரவியைத்  தமிழ்நாடு ஆளுநராகவும் நியமித்ததது.

அண்ணாமலை, “அடித்துத் தூக்கு”, “போட்டுத் தாக்கு” ரகம். இவர் உருட்டல், மிரட்டல் மூலம் ஆளுங்கட்சியினரைக் கலங்கடிப்பவர் என்றால், பக்கா ஆத்திகவாதியான ஆளுநர் ஆர்.என்.ரவி, சனாதனம், சர்வரோகசனம் என்றெல்லாம் பேசிப் பேசி மிரள வைப்பவர்.

சனாதனம் பேசிச் சலித்துப்போன நிலையில், இந்த ஆன்மிக ஆசான், இப்போது ‘பாரதிய தர்மம்’ பற்றியும் திருவாய் திறந்திருக்கிறார்.

அண்மையில், ‘பாரதிய தர்மம்’ குறித்து அவர் தந்த விளக்கத்தின் ஒரு பகுதி கீழே.

[தினத்தந்தி, 18.09.2023]
இதில், ‘இந்தப் பாரத நாடு மன்னர்களால் உருவாக்கப்படவில்லை; ரிஷிகளாலும் முனிவர்களாலும் உருவாக்கப்பட்ட பெருமையைப் பெற்றது’ என்னும் வரிகளை நம்மால் புரிந்துகொள்ள இயலவில்லை.

புரிந்துகொள்ள வேண்டுமாயின், அந்த ரிஷிகளைப் பற்றியும் முனிவர்களைப் பற்றியுமான ஒரு பட்டியல் நமக்குத் தேவை.

அதை வழங்குமாறு மேதகு ஆளுநர் அவர்களை வேண்டுகிறோம்.

மேலும், ‘ரிஷி’ என்பவர் யார்? ஒருவர் ரிஷியாக மதிக்கப்படுவதற்கான தகுதிகள் என்னவெல்லாம்? ரிஷிகள் எப்போது, அல்லது எப்போதெல்லாம் இந்த மண்ணில் வாழ்ந்தார்கள்?

இவற்றிற்கான வரலாற்று ஆதாரங்களும் தேவை.

அதே போல, முனிவர் என்னும் சொல்லுக்கான விளக்கமும், முனிவர்களாலும் ரிஷிகளாலும் ‘பாரதிய தர்மம்’[இது குறித்த, ரவியின் கருத்தை ஆராயத் தனி பதிவு தேவை] உருவாக்கப்பட்டதற்கான ஆதாரங்களும் தேவை.

ஆளுநரால் தர இயலாது என்றால்,

பலம் வாய்ந்த நடுவணரசின் பக்கப் பலத்துடன் மனம்போன போக்கில், சனாதன தர்மம், பாரதிய தர்மம் என்றெல்லாம் பேசிப் பேசித் தமிழர்களை முழு மூடர்கள் ஆக்க முயலுகிறார் இந்த ஆன்மிக நெறிச் செம்மல் என்று சொல்ல நேரிடும்.

அதைத் தவிர்க்க.....

தர்ம யோகியும் கர்ம யோகியுமான ஆர்.என். ரவியின் அறிவியல் பூர்வமான விளக்கங்களைப் பேராவலுடன் எதிர்பார்க்கிறோம்.