சனி, 27 டிசம்பர், 2025

மெகபூபா முஃப்தி வாழ்க! ஸ்டாலின் நீடூழி வாழ்க!!

மக்கள் ஜனநாயகக் கட்சியின்(பிடிபி) தலைவர் மெகபூபா முஃப்தி, வெள்ளிக்கிழமை கட்சியின் தலைமையகத்தில் காஷ்மீரி மொழியில் தனது செய்தியாளர் சந்திப்பைத் தொடங்கிய உடனேயே, ஒரு பத்திரிகையாளர் அவரை உருது மொழியில் பேசுமாறு கேட்டார்.

முன்னாள் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரான அவர், ஊடகங்கள் ஏன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை ஆங்கிலத்திலோ அல்லது உருதுவிலோ பேசுமாறு கேட்பதில்லை என்று கேள்வி எழுப்பி, அந்தப் பத்திரிகையாளரைக் கடுமையாகச் சாடினார்.

ஊடகக்காரனைச் சாடியது மட்டுமல்லாமல், தய்மொழிப் பற்றுக்கு முதல்வர் ஸ்டாலினை முன்னுதாரணமாக அவர் காட்டியிருப்பது தமிழர்களைப் பெருமிதப்படச் செய்திருக்கிறது.

இந்தியாவில் பாதிக்கும் மிகக் குறைவாகப் பேசப்படும் இந்தியைக் கொண்டாடும் இந்தி வெறியர்களுக்கு, மெகபூபா முஃப்தியின் செயல்பாடு புத்தி புகட்டுவதாக அமைந்துள்ளது.

இந்தி அல்லாத பிற மொழிக்காரர்களுக்கு விழிப்புணர்வு ஊட்டுவதாகவும் இது அமைகிறது.

“இப்போது இது ஒன்றுதான் மிச்சம் இருக்கிறது[அத்தனை உரிமைகளையும் ‘பாஜக’ அரசு பறித்துவிட்டது என்கிறார்?], எனவே, காஷ்மீரி மொழிக்குச் சிறிது மரியாதை கொடுங்கள்” என்று ஊடகக்காரர்களிடம் கூறியதோடு,  காஷ்மீரி மொழியிலேயே தொடர்ந்து பேசினார் மெகபூபா முஃப்தி.*

                                           *   *   *   *   *

https://kashmirobserver.net/2025/12/26/mehbooba-speaks-kashmiri-cites-tamil-leaders-in-language-row/