எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

திங்கள், 22 ஜனவரி, 2024

மனிதர்களைக் காக்கக் கடவுளா, கடவுளைக் காக்க மனிதர்களா?!

//சிஆர்பிஎப் படைகளும், உளவுப் பணிக்காக சர்வதேச இந்திய உளவு அமைப்பான ரா(ரிசர்ச் அண்ட் அனலைஸ் விங்), மேலும் மத்திய உளவு அமைப்பான ஐபி(இன்டலிஜென்ஸ் பீரோ) ஆகியவை அமர்த்தப்பட்டுள்ளன.

இவர்கள் அனைவரும் நிலப்பகுதியின் பாதுகாப்பில் இருப்பர்.

அயோத்தியின் சரயு நதி வழிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நீர்ப்பாதுகாப்புக்காக என்டிஆர்எப்(தேசிய பேரிடர் மீட்பு படை) சரயுவின் கரைகளில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

அயோத்தியின் 10,715 பகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் ஐடிஎம்எஸ் கருவி மூலமாகப் பொருத்தப்பட்டுள்ளன. அயோத்தியைச் சுற்றிலும் ஐந்து கி.மீ தொலைவில் டிரோன்கள் அனுமதியின்றிப் பறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பை மீறிப் பறப்பதைக் கண்காணிக்க டிரோன் எதிர்ப்பு கருவிகள் நீர், நிலம், வானம் ஆகிய பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ளன. இவை அனைத்தின் பாதுகாப்பிலும் ஏஐ(ஆர்டிபியுஷியல் இண்டலிஜன்ஸ்) தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.....[ஊடகச் செய்தி].

இவை, பாதுகாப்பு ஏற்பாடுகளின் சுருக்கம். இன்னும் பல பரவலானதும் உறுதியானதுமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இத்தனைப் பெத்தப் பெரீஈஈஈஈஈஈய பாதுகாப்பு எதன் பொருட்டு என்று வாசிப்பின் தொடக்கத்திலேயே புரிந்துகொண்டிருப்பீர்கள் நீங்கள்.

ஆம், அயோத்தி ராமர் கோயில் ‘பிரான் பிரதிஷ்டா’[பக்தியின் பெயரால் சமஸ்கிருதத் திணிப்பு; இந்தி?] விழாவுக்காகத்தான்.

விழாவில் கலந்துகொள்ளும்/கொண்டிருக்கும் உலக மகா பிரபலங்களை மட்டுமல்ல, கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும் ராம-சாமியைப் பாதுகாக்கவும்தான்.

கோயிலில் நட்டுவைக்கும் சிலைக்கு ‘பிரான்’[பிராணன்>தெவ்வீகச் சக்தி] ஊட்டுவதற்காகப் ‘பிரான் பிரதிஷ்டை’ செய்திருக்கிறார்கள்

ஆக, சிலைக்குள் ‘பிரான்’ சேர்க்கப்பட்டுவிட்டது{சிலைக்குள் பிராணன்[கடவுள்களுக்கு உயிர் உண்டா?!] இரண்டறக் கலந்துவிட்டது}.

அதாவது, ராமன் சிலை இப்போது உயிருள்ள கடவுள் ராமன்ர்.

கோயிலில் உள்ள ஸ்ரீராமனை, அல்லது ராமரை, அல்லது ராமச்சந்திர மூர்த்தியை, அல்லது முழுமுதல் கடவுளான விஷ்ணு[வைணவர்கள் சிவனுக்கு முதலிடம் தருவதில்லை]வின் மறு பிரதியை ஆயிரக்கணக்கான பிரமுகர்கள் நேரிலும், கோடானு கோடிப் பக்தர்கள் தொ.கா. போன்ற ஊடகங்கள் வாயிலாகவும்[?] தரிசித்துப் புண்ணியம் சேர்த்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதை மறவாதீர்.

“முழுமுதல் கடவுளான ராமபிரானே கோயிலில் தங்கி அருள்பாலித்துக்கொண்டிக்கையில், மேற்கண்ட வகையிலான மிக மிக மிகப் பல பாதுகாப்பு ஏற்பாடுகள் எதற்கு?” இது அடியேனின் களிமண் மண்டையில் எழும்[வழக்கம்போல] எழும் கேள்வி.

உண்மையில் ராமன் ஒரு கடவுளானால், இதற்காக வெட்கப்படுவார்!

வெட்கங்கெட்ட மனிதர்களைக் காக்கக் கடவுளா, வெட்கமில்லாத கடவுளைக் காக்க மனிதர்களா?

கடவுள் நம்பிக்கையை ஊட்டோவூட்டு என்று ஊட்டிப் பக்தி நெறி பரப்புகிறவர்கள் இந்தக் கேள்வியை மட்டும் முற்றிலுமாய் அலட்சியப்படுத்துவது ஏன்? 

பதில் தெரியாதா? தெரியும்.

தெரிந்திருந்தும் அதைப் பக்தர்கள் அறியச் சொன்னால்.....

அவர்கள் இவை போன்ற மூடநம்பிக்கைகளிலிருந்து விடுபட்டு, ராமன் போன்ற கடவுளுக்கும் அவர்களின் பிரதிநிதிகளுக்கும் சேவகம் செய்யமாட்டார்கள்.

கோயிலைப் பூட்ட 400 கிலோ எடையில் உலகின் மிகப் பெரிய பூட்டு எதற்கு?

சின்னஞ் சிறிய பூட்டுகளால் கோயிலைப் பூட்டினால், திருடர்கள் எளிதாக உடைத்துவிட்டுச் பகவான் ராமரைக் கடத்தி விற்றுவிடுவார்கள் என்னும் பயமா?

அல்லது, விழா என்னும் பெயரில் பக்தப் பிரமுகர்கள் அடிக்கும் கொட்டங்களிலிருந்து ராம-சாமி தப்பிச் சென்றுவிடாமலிருக்கவா?

இன்று ராமனுக்குக் கோடி கோடிகளில் கோயில். இனி, பிள்ளையார், சுப்ரமணியன், இவர்களின் அப்பனான நடராசன், அம்மை பார்வதி தேவி, லட்சுமி, சரசுவதி என்று எஞ்சியிருக்கும் அத்தனைப் பிரபலச் சாமிகளுக்கும் கோயில் எழுப்பி, உலகறியக் கொண்டாடுவது நடபெறக்கூடும்.

கொண்டாடினால்.....

இந்தப் பூமி மனிதர்களுக்கானது என்னும் நிலைமை மாறி விதம் விதமான, வகை வகையான சாமிகளுக்கான இடமாக மாறும்.

மனிதர்கள் அனைவரும் நல்ல சிந்தனையாளர்களாக ஆகும் காலம் வரும்போது.....

“நம் முனோர்கள் ஆறறிவு படைத்தவர்களாக இருந்தும் ஆதாரம் இல்லாத கடவுளின் பெயரால், பக்தி வளர்த்து, எப்படியெல்லாமோ அந்த அறிவைச் சிதைத்துச் சீரழிந்திருக்கிறார்களே” என்று எண்ணி எண்ணி வருந்துவார்கள்.

வருங்காலச் சந்ததியர் அறிந்துகொள்வதற்காக வரலாற்று ஏடுகளில் பதிவு செய்வார்கள்.

ஒழிக மூடநம்பிக்கை! வளர்க பகுத்தறிவு!!

“மோடி தன் மனைவியிடம் ராமனின் ஒழுக்க நெறியைப் பின்பற்றவில்லை” -சு.சாமி!!!

யோத்தி ராமர் கோவில் பூஜையில், மோடியின் 'பிரதமர்' என்ற அந்தஸ்து பூஜ்ஜியம்தான். அவர் அவரது தனிப்பட்ட வாழ்க்கையிலும் ராமரைப் பின்பற்றியது இல்லை. குறிப்பாக, அவரது மனைவியிடம் அவ்வாறு நடந்துகொள்ளவில்லை” [https://www.maalaimalar.com/news/national/tamil-news-subramanian-swamy-tweet-699429].

மேற்கண்ட கருத்துரை, ‘பாஜக’ கட்சிக்காரரான டாக்டர் சுப்பிரமணியன் சாமி அவர்களால் வெளியிடப்பட்டது.

சாமி சொல்வது போல, பிரதமர் மோடி, பிரதமர் பதவிக்குத் தகுதி அற்றவராகவோ, ஒழுக்க சீலர் என்று ராம பக்தர்களால் போற்றப்படுகிற ராமச்சந்திர மூர்த்தி வகுத்த பொதுவான வாழ்க்கை நெறிகளைப் பின்பற்றாதவராகவோ இருந்தாலும் அதைப் பற்றி நமக்குக் கவலை இல்லை; ஊர் உலகமும்[மோடி உட்பட] அதைப் பெரிதுபடுத்த வாய்ப்பில்லை.

ஆனால்.....

‘தனிப்பட்ட வாழ்க்கையில் அவரது மனைவியிடம் அவ்வாறு அவர் நடந்துகொள்ளவில்லை’ என்று கூறியிருப்பதில் விபரீத அர்த்தம் புதைந்திருக்கிறதே, அதை அறிந்தால் மோடியால் கலைப்படாமல் இருக்க முடியுமா?

சீதை ராமனின் மனைவி. அந்தத் தன் மனைவிக்கு அவன் ஒருபோதும் துரோகம் செய்ததில்லை[பக்தர்கள் நம்பிக்கை], அதாவது பிற பெண்கள் மீது ஆசைப்படுபவனாக நடந்துகொண்டதில்லை. இங்கு சு. சாமியின் கருத்து, நம் பிரதமர் இது விசயத்தில் தன் மனைவிக்குத் துரோகம் செய்தவர்[பிற பெண்களை நாடியவர்] என்று எண்ணத் தூண்டுகிறது.

இது விசயத்தில், சு.சாமியின் துணிச்சல் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது.

அதே வேளில்.....

நம்மைப் போன்ற சாமானியர்கள், மோடியை ஒழுக்கம் கெட்ட மனிதர் என்று சொல்லியிருந்தால், மோடி கடும் சீற்றத்திற்கு உள்ளாகியிருப்பார். அவரின் ஆணைப்படி காவல்துறை நம்மை ‘உள்ளே’ தள்ளிக் கம்பி எண்ணவைத்திருக்கும். நம் மீது வழக்கு தொடுக்கப்படலாம். வழக்குப் போடப்படாமல் குண்டர் சட்டம், தடியர் சட்டம் என்று ஏதேனும் ஒரு சட்டம் நம் மீது பாய்ந்திருக்கும்.

டாக்டர் சுப்பிரமணியன் சாமி அவர்கள் மிகப் பிரபலமான மனிதர்; ஆளும் பாஜக கட்சிக்காரர்; படு பயங்கரப் புத்திசாலியும்கூட!

மெத்தப் படித்த இந்தப் பெரிய மனிதர் மீது நாட்டை ஆளும் பிரதமர் மோடி நடவடிக்கை எடுப்பாரா?

எடுப்பாரோ அல்லவோ, டாக்டர் சாமியின் அபாரத் துணிச்சலைப் பாராட்டுவோமா?

ஊஹூம்... நமக்கெதுக்குங்க ஊர் வம்பு! ஹி... ஹி... ஹி!!!

Subramanian Swamy

@Swamy39

Modi is muscling into the Prana Prathishta Puja, when his PM status is a zero in the Puja, nor has he followed Bhagwan Ram in his personal life especially in his behaviour to his wife, nor he has acted as per Ram Rajya as PM during the last decade.

இடுகையை மொழிபெயர்

முற்பகல் 8:51 · 22 ஜன., 2024·705.9ஆ பார்வைகள்