ஆல்பர்ட் ஸ்டீபன் என்னும் விஞ்ஞானி ஒரு கருவி கண்டிபிடித்தார்.
‘ஏ’என்பவனின் காதுகளுக்குச் சற்று மேற்புறமாக, இரு பக்கங்களிலும் இரு ‘ரிஸீவிங் ஆண்டெனாக்களை’ப் பொருத்திவிட வேண்டியது. பாக்கெட் சைஸ் கருவியை, ஆறு வோல்ட் பாட்டரி போட்டு, பாண்ட் பைக்குள் அவனைப் போட்டுக் கொள்ள வைப்பது.
அதே மாதிரி, ‘பி' என்பவன் காதுகளுக்கு மேல் ‘பிராட்காஸ்டிங் ஆண்டெனா’க்களைப் பொருத்திவிட வேண்டியது.

இப்போது விசையைத் தட்டிவிட்டால் போதும். ‘பி’ என்ன உணர்ச்சிகளை அடைகிறானோ, அதை அப்படியே இம்மி பிசகாமல் ‘ஏ’ என்பவனும் அனுபவிப்பான்.
இக்கருவி கண்டுபிடித்துக் கொஞ்ச காலம் கழித்து, ’ நாஸா’ விஞ்ஞானிகள், நான்கு பேரைச் ‘செவ்வாய்’க்கு அனுப்புகிறார்கள்.
அவர்களின் காதுகளில் ‘பிராட்காஸ்டிங் ஆண்டெனா’க்கள் பொருத்தப்படுகின்றன.
அமெரிக்காவில் உள்ள பெரிய நிறுவனம் ஒன்று, துரிதகதியில் உற்பத்தி செய்த ‘ரிஸீவிங் ஆண்டெனா’க்களை அமெரிக்க மக்கள் அனைவரும் பொருத்திக் கொள்கிறார்கள்.
செவ்வாயில், வீரர்கள் பெற்ற உணர்ச்சிகளை அமெரிக்க மக்களும் உணர்வார்கள் என்பதால். அவர்கள் பேரார்வத்துடன் காத்திருக்கிறார்கள். ஆனால், நடந்ததோ..........
செவ்வாயில் நம்மைப் போலவே மனிதர்கள் இருக்கிறார்கள். அவர்கள் அமெரிக்க வீரர்களைக் கடுமையாகத் தாக்குகிறார்கள்.
அவர்கள் அலற, அமெரிக்க மக்கள் அத்தனை பேரும் அலறுகிறார்கள்.
“ஐயோ...ஐயய்யோ...விஞ்ஞானம் வேண்டாம்; வேண்டவே வேண்டாம். அதை அழியுங்கள். பூண்டோடு அழித்துவிடுங்கள்” என்று அவர்கள் முழக்கமிடுகிறார்கள்!
***********************************************************************************************************************
இது, மறைந்த எழுத்தாளர் ‘புஷ்பா தங்கதுரை’ எழுதிய ஓர் அறிவியல் சிறுகதையின் சுருக்கம். எப்போதோ படித்தது. கதை வெளியான இதழோ ஆண்டோ நினைவில் இல்லை. உங்களில் யாருக்கேனும் நினைவிருக்கிறதா?