பக்கங்கள்https://kadavulinkadavul.blogspot.com/p/blog-page_1.html
ஞாயிறு, 25 ஜனவரி, 2026
பெண்களின் நகை மோகம்... ‘நறுக்’ வைத்த உத்தரகாண்ட் கிராமம்!
//திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் பெண்கள், தங்கத்தில் கம்மல், மூக்குத்தி, தாலி[திருமணம் ஆனவர்கள்] ஆகியவற்றை மட்டும் அணியலாம்; ஆரம், நெக்லஸ் போன்ற விலை உயர்ந்த தங்க நகைகளைப் போட்டுக்கொண்டு பெண்கள் தங்கள் பணக்காரத்தனத்தை காட்டுவது கூடாது.
திருமணம் என்பது புனிதமான நிகழ்ச்சி. அதைத் தங்களின் பணக்காரத்தனத்தைக் காட்டும் மேடையாக மாற்றக் கூடாது. சமூகத்தில் சமத்துவம் நிலவுவது அவசியம்//
உத்தராகண்ட் மாநிலம், ‘ஜான்சர் பவார்’ பகுதியில் உள்ள 'கந்தார் 'கிராமத்துப் பெரியவர்கள் கூடி, மேற்கண்ட முடிவுகளை அறிவித்திருக்கிறார்கள்.
அவர்கள் விதித்துள்ள கட்டுப்பாடுகளை மீறுகிறவர்களுக்குரூ.50,000 அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவித்திருக்கிறார்கள்.
அவர்கள் பாராட்டுக்கு உரியவர்கள்.
இங்கெல்லாமும் இவ்வாறான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டால், நம் பெண்கள் வரவேற்பார்களா, போர்க்கொடி தூக்குவார்களா?