அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

செவ்வாய், 31 அக்டோபர், 2023

'ஹமாஸ்’ கயவர்கள் கொஞ்சம் நல்லவர்களும்கூட!!!

பாலஸ்தீனத்தின் ‘ஹமாஸ்’ இயக்கம் இஸ்ரேல் மீது நடத்திய முதல் தாக்குதலில்[07.10.2023]  சுமார் 1500 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டதோடு, பலர் பிணைக்கைதிகளாக ஹமாஸர்களால் சிறை பிடிக்கப்பட்ட நிலையில், சிறைப்பட்டவர்களலில் ஒருவரான ‘ஷானி லவுக்’(30) என்னும் ஜெர்மனியைச் சேர்ந்த பெண்ணை நிர்வாணமாக்கி, அவளின் உடல் மீது[அவளைத் தன்னிடம் ஒப்படைக்குமாறு அவளின் தாய் வேண்டியபோது, ‘அவள் கொல்லப்படவில்லை; மருத்துவமனையில் சேர்க்கப்பட்டாள்’ என்பது ஹமாஸியர் அறிவிப்பு] எச்சில் துப்பியும், அதைக் காலால் மிதித்தும் இழிவுபடுத்தியவாறு டிரக்கில் கொண்டுசெல்லப்படும் காணொலி உலகெங்கும் பெரும் பரபரப்பை உண்டுபண்ணியது.

நிர்வாணக் கோலத்தில், அந்தப் பெண்ணை வன்புணர்வு செய்ததோடு எப்படியெல்லாம் சித்திரவதை செய்தார்களோ[டிரக்கில் கொண்டுசென்றபோது, பெண்ணின் பிறப்புறுப்பின் மீது ஹமாஸ் காலியின் கால் அழுத்திக்கொண்டிருக்கும் காட்சி இடம்பெற்றிருந்தது. பின்னர் அந்த வீடியோ அழிக்கப்பட்டுவிட்டதாகத் தெரிகிறது] என்று அவளைப் பெற்ற அன்னை மட்டுமல்லாமல் அகில உலகமே மனம் பதறியது; பெரும் வேதனக்குள்ளானது.

பெண்ணின் நிலை குறித்து ஏதும் அறியப்படாத நிலையில், பதற்றமும் வேதனையும் சிறிதளவும் குறையாமலிருந்தது.

இந்நிலையில், இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில்..... 

அண்மையில் அவர்கள் கண்டெடுத்த மண்டை ஓடு ஒன்றின் மரபணுவைச் சோதித்தபோது, அது ஷானியின் மண்டை ஓடு என்று உறுதிப்படுத்தப்பட்டதாகத் தெரிவித்துள்ளனர். https://www.hindutamil.in/news/world/1146818-german-woman-killed-in-attack-by-hamas-terrorists-israel-army-announcement.html

இதன் மூலம், ‘ஷானி லவுக்’ உயிரோடு இல்லை என்று அறியப்பட்டுள்ளது. இந்தத் தகவலை ஷானியின் உறவினர்களும் உறுதி செய்துள்ளனர்.

இந்தச் செய்தி, ஹமாஸ் கயவர்கள் ‘ஷானி லவுக்’கை உயிரோடு அடைத்து வைத்துத் தொடர்ந்து வன்புணர்வு செய்து கொடுமைப்படுத்துகிறார்களோ என்றெண்ணி, அவளின் தாயும் சொந்தபந்தங்களும் அனுபவித்த துயரத்தின் அளவைக் கணிசமான அளவு குறைத்திருக்கும் என்று ஆறுதல் அடையலாம்.

அடாத செயலில் ஈடுபட்ட ஹமாஸ் கயவர்கள், ‘ஷானி லவுக்’கைத் தொடர்ந்து வன்புணர்வு செய்து துன்புறுத்தாமல், அவளைக் கொன்றதன் மூலம், “அவர்கள் கொஞ்சம் நல்லவர்களும்கூட” என்று சொல்லத் தோன்றுகிறது.

‘காலாவதி’ ஆகிறார் ‘கடவுளின் கடவுள்’!!!

இந்தத் தளம் உருவான[2011] சில ஆண்டுகளிலேயே 1000க்கும் மேற்பட்ட[2000ஐக் கடந்ததும் உண்டு] பார்வையாளர்களைப் பெற்றது  மிக்க மகிழ்ச்சியைத் தந்தது.

கொஞ்சம் ஆண்டுகள் அந்நிலை நீடிக்கவும் செய்தது[‘தமிழ்மணம்’ திரட்டி உயிர்ப்புடன் இயங்கியபோது].

ஆனால், அடுத்த சில ஆண்டுகளிலேயே ‘பார்வை’ எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து சில நூறுகள் என்றானபோதும், சோர்ந்துவிடாமல்[கணிசமான பதிவர்கள் காணாமல்போனார்கள்] பணியை[?]த் தொடர்ந்தேன்.

புதிய புதிய இளம் ‘அறிவுஜீவி’களை உருவாக்குவதைக் கடமையாக எண்ணிப் பதிவுகள் எழுதுவது நீடித்தது[ஹி...ஹி...ஹி!!!; அவற்றின் தரத்தை உயர்த்துவதிலும் மிகுந்த கவனம் செலுத்தினேன்.

ஆயினும் என்ன, அண்மைக் காலங்களில், ‘பார்வைகள்’ 100ஐக் கடப்பதே அரிதானதால், “எல்லாம் அவன்[முழுமுதல் கடவுள்] செயலே” என்று மனதைத் தேற்றிக்கொள்ளும் நிலை உருவாகிவிட்டது.

கீழ்க்காண்பது, சற்று முன்னர் நகல் செய்த, தளத்துக்கான[‘கடவுளின் கடவுள்!!!’] ‘பார்வைகள்’ விவரம்:

மொத்தம் 998016இன்று10 நேற்று118 இந்த மாதம்7065 கடந்த மாதம்10612

அனைத்தையும் படைத்துக் காத்து அருள்பாலித்துக்கொண்டிருக்கும் அந்த முழுமுதல் கடவுள் கருணை காட்டாததால், அடியேனால் படைத்துக் காத்துப் பராமரிக்கப்படுகிற ‘கடவுளின் கடவுள்!!!’ காலாவதி ஆகும் நிலையில் இருக்கிறார் என்பதைத் தளத்திற்கு வருகைபுரிந்து கவுரவித்த... கவுரவிக்கும் அன்பர்களுக்குத் தெரிவிக்கிறேன்.



திங்கள், 30 அக்டோபர், 2023

மதங்களும் ‘மார்ட்டின்’களும்!!!

டொமினிக் மார்ட்டின்தங்கள் பல.

க்களின் மன நலம் காப்பதற்காகவே[கடவுளை வழிபட்டோ படாமலோ] தோற்றுவிக்கப்பட்டவை மதங்கள்.

காலப்போக்கில், தத்தம் மதக் கொள்கைகளை முழுமையாகப் புரிந்துகொள்ளாத பெரும்பான்மையினரால் அவை ஆக்கிரமிக்கப்பட்டன.

அவர்களில் பலரும் மூடர்களாக[மக்கள் மனங்களில் ஏராள மூடநம்பிக்கைகளைத் திணித்தவர்கள்] இருந்ததோடு, சுயநலவாதிகளாகவும் இருந்தததால் தமக்குள்ள செல்வாக்கைப் பயன்படுத்தி ஆட்சியாளர்களின் ஆதரவைப் பெற்றார்கள்.

அது, தங்களின் மதம் தழுவியோர் எண்ணிக்கையை அதிகரிக்கப் பயன்பட்டது.

இதில் கடும் போட்டி நிலவியதால்தான் மதங்களுக்கிடையே மோதல்களும் கலவரங்களும் வெடித்தன.

அவ்வப்போது நிகழ்ந்த கலவரங்களால் அளவிடற்கரிய பொருட்சேதங்களும் உயிர்ச்சேதங்களும் ஏற்பட்டன.

ஆக, சுயநலம் மிக்க மதவாதிகளால் மனித இனத்துக்கு உண்டான நன்மைகளைக் காட்டிலும் அதிக அளவில் தீமைகள் விளைந்தன எனின், அதில் தவறேதும் இல்லை.

அவற்றில் ஒன்றுதான் அண்மையில் மதப் பிரார்த்தனைக் கூட்டத்தில் நிகழ்த்தப்பட்ட, சில உயிரிழப்புகளுக்கும், படுகாயங்களுக்கும் காரணமான குண்டுவெடிப்பு.

//கொச்சி அருகே களமச்சேரியில் ‘யாகோவாவின் சாட்சிகள்’ கிறிஸ்தவ அமைப்பின்[ஒரு பிரிவு] சார்பில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது. சம்பவம் நிகழ்ந்தபோதே ஒரு பெண் உயிரிழந்த நிலையில், மாலையில் சிகிச்சை பலனின்றி ஒரு பெண் இறந்தார். இந்நிலையில், படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த 12 வயதுச் சிறுமி இன்று காலை உயிரிழந்துள்ளார்.

படுகாயமடைந்த 30க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்//[ஊடகச் செய்தி].

* * * * *

குண்டு வெடிப்புக்குக் காரணமான, ‘டொமினிக் மார்ட்டின்’ பல ஆண்டுகள் துபாயில் வேலை பார்த்தவர்; இரண்டு மாதங்களுக்கு முன்பு ஊர் திரும்பிய அவர் 16 ஆண்டுகள் ‘யாகோவாவின் சாட்சிகள்’இல் உறுப்பினராக இருந்த மதப்பற்றாளர்; உள்ளூர் மக்களுக்கு ஆங்கிலம் கற்பிக்கும் பணியைச் செய்துகொண்டிருந்தவர்; உதவும் மனம் கொண்ட மிக நல்ல மனிதர்.

தான் சார்ந்திருந்த மதம் நடத்திய பிரார்த்தனைக் கூட்டத்தில், உயிர்ச்சேதங்கள், பக்தர்களின் உறுப்புச் சிதைவுகள் பற்றியெல்லாம் சிந்திக்க மறந்து, குலைநடுங்கச் செய்யும் கொடூர நிகழ்வுக்கு இவர் காரணமாக இருந்திருக்கிறார் என்பது மிக ஆழ்ந்து சிந்திக்கத் தூண்டுகிறது.

தன் தாய் மதத்தவரையே தாக்கிக் கதறி அழவைத்துக் கடும் துயருக்குள்ளாக்கிய மார்ட்டினின் செயல், மனிதாபிமானம் உள்ள அனைவரையும் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்குவது மட்டுமல்ல, வெகு அபூர்வமானதும்கூட.

தேச விரோத நடவடிக்கைகளின் ‘யாகோவாவின் சாட்சிகள்’[கிறித்தவ மதப் பிரிவு] ஈடுபட்டது என்பது[உண்மையோ பொய்யோ] அவரின் குற்றச்சாட்டு.

எவ்வகையான தேச விரோத நடவடிக்கைகளில் அவர்கள் ஈடுபட்டார்கள் என்பதை, மார்ட்டின் ஆதாரங்களுடன் அம்பலப்படுத்துவாரேயானால், அது வரவேற்கத்தக்கது[அவர்கள் நாட்டு மக்களின் நலனுக்கு எதிராகச் செய்துவந்த பிற குற்றச் செயல்களைக் காவல்துறை விசாரித்தறிந்து, உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள அது உதவும் என்பது உறுதி].

இந்தவொரு மார்ட்டினைப் போல, பிற முன்னணி மதம் தழுவிய, வேறு வேறு பெயர்கள் கொண்ட மார்ட்டின்கள் தோன்றி, வேறு வேறு பெயர்களில் இயங்கும் ‘யாகோவாவின் சாட்சிகள்’ போன்ற மதம் & மதப் பிரிவுகளின், நாட்டுக்கும் மக்கள் நலனுக்கும் எதிரான செயல்பாடுகள் குறித்து அம்பலப்படுத்துதல் வேண்டும்[குண்டுவெடிப்புகள் கூடாது] என்பது நம் எதிர்பார்ப்பு! பெரு விருப்பம்!!

ஞாயிறு, 29 அக்டோபர், 2023

வளரும் பல நாடுகளில் தளரும் கடவுள் நம்பிக்கை!!!

//2015இல்கேலப் இண்டர்நேசனல்’ நிறுவனமும், 2006-2008இல்கேலக்பூர்’ என்று சொல்லப்படுகின்ற ஒரு நிறுவனமும் நடத்திய கருத்துக்கணிப்பின்படி, உலகில் பல நாடுகளில் கடவுள் மறுப்பாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது// என்கிறது ‘விடுதலை’ இதழ்.

இதன் விளைவாக, அந்த நாடுகள் கிடு கிடு வளர்ச்சி பெறுவதோடு, அந்நாட்டு மக்கள் மிக்க மகிழ்ச்சியுடன் வாழ்கிறார்களாம்.

எடுத்துக்காட்டாகக் கொஞ்சம் நாடுகள்:

***சீனா: இது, மக்கள் தொகையில் மட்டுமல்லாமல், அறிவியல் துறையிலும் வெகு வேகமாக முன்னேறும் நாடாகும்.

2015இல் ‘கேலப் இண்டர்நேசனல்’ நடத்திய கருத்துக் கணிப்பு, இங்கு 61 சதவிகித மக்கள் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் என்கிறது.

இப்போது அந்த விழுக்காடு 90[%] ஆக அதிகரித்துள்ளமை அதன் கிடு கிடு முன்னேற்றத்துக்கு வழிகோலியுள்ளது என்கிறார்கள் அறிஞர்கள்.

***டென்மார்க்: ஐரோப்பியக் கண்டத்தில் உள்ள ஒரு நாடு டென்மார்க். பிரபலமான சுற்றுலா நாடுகளில் ஒன்றாகும். இங்கே 58 லட்சம் மக்கள் வாழுகிறார்கள்.

இவர்களில், 61 சதவிகித மக்கள் கடவுள் மறுப்பாளர்கள் மற்றும் அக்னாஸ்ட்டிகளாக[“எங்களுக்கில்லை கடவுள் கவலை” என்பவர்கள்].

இவர்கள் கவலைப்படுவதெல்லாம் அன்றாட வாழ்க்கைக்காக.

புத்திசாலிகள்!

***நார்வே: ஐரோப்பியக் கண்டத்தில் இருக்கின்ற நாடுகளில் ஒன்றுதான் நார்வே. மக்கள் தொகை 55 லட்சம்.

இவர்களில் 62 சதவிகிதம் பேர் கடவுள் நம்பிக்கை அற்றவர்கள்.

இவர்கள், மிக்க மகிழ்ச்சியுடன் வாழ்வதாகச் சொல்கிறார்கள்.

***ஆஸ்திரேலியா:

2.5 கோடி மக்களைக் கொண்டது ஆஸ்திரேலியா.

2006ஆம் ஆண்டு 19 சதவிகித மக்களும், 2015ஆம் ஆண்டு 22 சதவிகித மக்களும், 2016ஆம் ஆண்டு 30 சதவிகித மக்களும் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களாக இருந்திருக்கிறார்கள்.

இப்போது கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள், எச்சார்பும் இல்லாதவர் ஆகியோர் எண்ணிக்கைசுமார் 63 சதவிகிதம் ஆகும்.

மக்கள் போதிய வசதியுடன் வாழும் நாடுகளில் இதுவும் ஒன்று.

***வியட்நாம்: இங்கே 9.6 கோடி மக்கள் வாழுகிறார்கள். இந்த நாட்டினுடைய அரசமைப்புச் சட்டப்பட எந்தவொரு மதத்தையும் ஏற்கலாம்.

இங்கே 2007ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி, 87 சதவிகித மக்கள் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களாகவே இருந்துள்ளனர்.

***அசர்பைஜான்: கிழக்குரோப்பாவில் இருக்கின்ற ஒரு சிறியநாடுதான் இது. இங்கே 1.2 கோடி மக்கள் வாழுகிறார்கள். இது ஒருஇஸ்லாமிய நாடு. ஆனால், இங்குள்ள மக்களில் பெரும்பாலோர் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் என்பது நம்மைப் பெருவியப்பில் ஆழ்த்துகிறது.

இவர்களின் வாழ்க்கைத்தரம் குறையவில்லை.

***பெல்ஜியம்: சாக்லெட்டு உற்பத்தியின் மூலம் பிரபலமான நாடு இது. இங்கு ஒரு கோடியே 16 லட்சம் மக்கள் வாழ்கிறார்கள்.

இந்த நாட்டில் பெரும்பான்மையான மக்கள் கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றுகின்றனர். மீதமுள்ள மக்கள் இஸ்லாம், ஈடன் போன்றவற்றைப் பின்பற்றுகின்றனர்.

62 சதவிகித மக்கள் மதத்தையும், கடவுளையும் ஏற்காதவர்களாக உள்ளனர்.

குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ள நாடு இது.

***நெதர்லாண்ட்: இங்கே சுமாராக ஒரு கோடியே 76 லட்சம் மக்கள் வாழ்கிறார்கள். கிறிஸ்தவம், இஸ்லாம், யூதம் என்று பலமதம் தழுவியவர்கள் இவர்களில் உள்ளனர்.

எனினும், 2010ஆம் ஆண்டிலேயே எந்த மதத்தையும் ஏற்காத மக்கள் 51 சதவிகிதமாக இருந்தார்கள்.

அந்த எண்ணிக்கை இப்போது 66%. வாழ்க்கைத்தரம் உயர்ந்துள்ளது.

***செக் ரிபப்ளிக்: இந்த நாட்டில் 1.7 கோடி மக்கள் இருக்கிறார்கள். சிறிய நாடாக இருந்தாலும், பேமஸ் ஆன்டி வைரசானஆவஸ்ட்’, ஸ்கோடா கார் பிராண்ட், பீர் பிரியர்களின் பட்வைசர், பேட்டா’ எனும் செருப்பு நிறுவனம் என்றிவற்றின் மூலம் வளர்ச்சி பெற்ற நாடு இது.

72 சதவிகித மக்கள் எந்த மதத்தையும் ஏற்காமலிருப்பது இதற்குக் காரணம்.

***சுவீடன்: ஐரோப்பியக் கண்டத்தில் மிகப் பிரபலமான நாடுகளில் ஒன்று சுவீடன்.

இங்கு ஒரு கோடியே 18 லட்சம் மக்கள் வாழ்கிறார்கள் பெரிய சுற்றுலா நாடு என்பதால் ஆண்டுதோறும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இங்கே வருகின்றனர்.

பெரும்பான்மையான மக்கள் கடவுளளை ஏற்பதில்லை. எனவே, மகிழ்ச்சியுடன் வாழ்கிறார்கள்.

மேற்கண்ட நாடுகளைத் தவிர, ஜப்பான், அமெரிக்கா, ரஷ்யா போன்ற முன்னேறிய நாடுகளில், கணிசமான அளவில் கடவுள் மறுப்பாளர்கள் உள்ளனர் என்பது அறியத்தக்கது.

*இந்தியா: இந்தியாவில் 05% பேர் மட்டுமே கடவுள் மறுப்பாளர்களாக உள்ளனர்.

இது, இந்த நாட்டை முன்னேறச் செய்யுமா, பின்னோக்கித் தள்ளுமா??

காலம் பதில் சொல்லும்!