‘பாலஸ்தீன் இஸ்ரேல் போரில் அல்லாஹ்வே தெளிவாக கூறிய முடிவு இது தான்!’ என்று உறுதிபடச் சொல்லும் காணொலி[Tamil Islamic guidance] ஒன்று வெளியாகியுள்ளது..
நீங்கள் கடவுள் நம்பிக்கையாளர் என்றால், அவர் ஒருவரே என்றும், வேறு வேறு பெயர்களும் வடிவங்களும் கொண்டவராக மனித இனத்துக்கு[மற்ற உயிரினங்களுக்கும்தான்] அருள்பாலிக்கிறார் என்றும் நம்புபவராகவும் இருந்தால் ‘அல்லா[ஹ்]வை நீங்கள் வழிபடுவதில் தவறே இல்லை.
ஹமாஸ் - இஸ்ரேல் இடையிலான போரால் ஏதுமறியாத அப்பாவி மக்கள்[இஸ்லாமியர்&யூதர்கள்]விவரிக்க இயலாத துன்பங்களுக்கு உள்ளாகியிருக்கும் நிலையில்.....
பிள்ளையாரையோ[மற்ற இந்துக் கடவுள்கள் பெயர்களையும் இணைத்தால் பட்டியல் அனுமார் வால் போல நீளும்], யூதர்களின் கடவுளையோ[விரிவான ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது] கர்த்தரையோ, அல்லாவையோ நெஞ்சுருக நினைந்து, “இவர்களைத்[ஹமாஸ்&யூதர்கள்] திருத்துங்கள்; போரை நிறுத்துங்கள்; மக்களைக் காப்பாற்றுங்கள்” என்று கோரிக்கை வைத்து அவர்களைப் பன்முறை பிரார்த்திருப்பீர்கள், அல்லது, இப்போதேனும் பிரார்த்திப்பீர்கள் என்பது உறுதி.
இதற்கு மாறாக.....
நடைபெறும் போரில், “இஸ்ரேலியரைக் காப்பாற்றுங்கள்; இஸ்லாமியரைத் தண்டியுங்கள்” என்று இஸ்ரேலியர் வேண்டிக்கொள்வதையோ, “அல்லாவே, இஸ்ரேலியரைத் தண்டியுங்கள்; உங்களை மட்டுமே கடவுளாக எண்ணி வழிபடுகிற இஸ்லாமியரைக் காத்தருளுங்கள்” என்று இஸ்லாமியர் வேண்டுவதையோ ஆதரிப்பீர்களா?
நிச்சயமாக இல்லை... இல்லவே இல்லை.
இனி, காணொலிக்குள் நுழைவீர்; நெஞ்சுருக அல்லாவைப் போற்றி ஒரு பெண்மணி ஆற்றியுள்ள உரையைச் செவிமடுப்பீர்.
அவர் ஆற்றிய உரையைக் காணொலியாக்கி, ‘யூதர்களை[இருதரப்பாரும் குற்றங்கள் புரிந்துள்ள நிலையில்] அல்லா தண்டிப்பார்’ என்னும் நம்பிக்கையை இஸ்லாமியர் மனங்களில் அழுத்தமாகப் பதிக்க முயன்றிருப்பது தெரியவரும்.
இவர்கள் நம் அனுதாபத்திற்குரியவர்கள் என்றாலும், “எதிரிகளைத் திருத்துங்கள்” என்று வேண்டுவதற்கு மாறாக, “அவர்களைத் தண்டியுங்கள்” என்று அல்லாவிடம்{உரையை வரவேற்றுப் பலர்[இஸ்லாமியர்] கருத்துரை வழங்கியுள்ளனர்} கோரும் வகையில் இஸ்லாமியப் பெண் உரையாற்றியிருப்பது.....
“அல்லா மட்டுமே கடவுளா? அவர் இஸ்லாமியருக்கு மட்டுமே சொந்தமானவரா?” என்று கேட்கத் தூண்டுகிறது.
அவர்களில் எவரிடமிருந்து உரிய பதிலை எதிர்பார்ப்பது இன்றையப் போர்ச் சூழலில் நாகரிகமல்ல. ஏனென்றால்.....
அவர்கள் மனித நேயம் போற்றும் அனைவராலும் ஆற்றுப்படுத்துதலுக்கு உள்ளாகிருப்பவர்கள்.
அல்லாவும் ஒரு கடவுள், அல்லது அவர் மட்டுமே கடவுள் என்பது உண்மையானால், “உலகெங்கும் உள்ள இஸ்லாம் மக்களை[யூதர்களையும்தான்] அவர் காப்பாற்றுவாராக” என்று மனப்பூர்வமாக வேண்டுவோம்.