அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

புதன், 29 ஏப்ரல், 2015

மன்மதக்கலையும் மதி மயங்கும் மனித குலமும்![பழசோ பழசு!]

“சொல்லித் தெரிவதில்லை மன்மதக்கலை” என்பார்கள். இது முற்றிலும் தவறான கருத்து. ‘ஆண் பெண் சேர்க்கை கொள்வது இன விருத்திக்காக மட்டுமே’ என்ற இயற்கை நியதியைத் தகர்த்து, அதை ஒரு கலையாக்கி, அதற்கான ‘கால அளவை’ நீட்டித்துக்கொண்டிருப்பவன் மனிதன்.

நீண்ட நேரம் ‘கலவி இன்பம்’ துய்க்க விரும்புவோர், அதற்கான வழிமுறைகளையும் உத்திகளையும் கற்றுத் தெளிய வேண்டியது ‘கட்டாயம்’ என்பதை மனித குலம் ஏற்றுக்கொண்டுள்ளது. ஆனால், கற்பதற்குரிய ‘தருணம்’ எது என்பதில்தான் கருத்துமாறுபாடுகள் நிலவுகின்றன.
“பாலு, கொஞ்ச நாளாவே நீ ஏதோ குழப்பத்தில் இருக்கிற மாதிரி தெரியுது. காரணத்தை உன் உற்ற நண்பனான நான் தெரிஞ்சிக்கலாமா?” என்று கேட்டார் கேசவன். வழக்கம் போல, மதிய உணவு இடைவேளையில், இருவரும்  நிறுவன வளாகத்திலிருந்த புங்கமர நிழலில் அமர்ந்திருந்தார்கள்.


“சொல்லுப்பா, ஏன்?” என்றார் கேசவன்.


“என் வீட்டில் எனக்குப் பெண் பார்க்கிறாங்க. கல்யாணத்தை நினைச்சாலே பயமா இருக்கு” என்றான் பாலு.

“ஏன்பா அப்படி? அது வந்து... போயி...ன்னு சுத்தி வளைக்காம போட்டு உடை.” 

“அப்பெல்லாம் படிச்ச பெண்கள் ரொம்பக் கம்மி. மத்த பெண்கள்கூட செக்ஸ் பேச மாட்டாங்க. அவ்வளவு பயம். புருஷன் கொஞ்ச நேரமே உடலுறவு வெச்சிட்டாலும் அவ்வளவுதான் முடியும்போல. மத்த ஆண்பிள்ளைகளும் இப்படித்தான் இருப்பாங்கன்னு நினைச்சித் திருப்தி அடைஞ்சாங்க. இன்னிக்கி நிலைமை வேற. எல்லாப் பெண்களும் படிக்கிறாங்க. செக்ஸைப் பத்திக் கருத்துப் பரிமாறிக்கிறாங்க; புத்தகங்களில் படிச்சும் மீடியாக்கள் மூலமாகவும் நிறையவே தெரிஞ்சிக்கிறாங்க. அதனால, கட்டின புருஷன்கிட்ட அவங்களோட எதிர்பார்ப்பும் அதிகமா இருக்கு.....” 


குறுக்கிட்டார் கேசவன். “எதிர்பார்ப்புன்னா?.....”


“மத்த விஷயங்கள்ல சந்தோசமா வெச்சிக்கிறது மட்டுமில்ல,  ‘அது’ விஷயத்திலும் தன்னைத் திருப்திபடுத்தணும்னு நினைக்கிறாங்க.”


"எதை வெச்சி இப்படிச் சொல்லுறே?”


“மீடியாக்கள் தர்ற செய்திகளைப் படிச்சுட்டுத்தான். கல்யாணமாகிக் கொஞ்ச நாள்லயே, மூனுல ஒரு பங்குத் தம்பதிகள் விவாகரத்துக் கேட்டுக் கோர்ட்டுப் படி மிதிக்கிறாங்களாம். இதுக்கான காரணங்களில், வரதட்சணை, ஈகோ தவிர செக்ஸும் முக்கிய இடம் வகிக்குது. ஏதோவொரு அயல்நாட்டுப் பத்திரிகையில் படிச்சதா நீங்க சொல்லியிருக்கீங்க. அந்தப் பத்திரிகை நிருபர், பல குடும்பப் பெண்களைச் சந்திச்சி, ‘செக்ஸ்’ அனுபவம் பத்திக் கேட்கிறார். எந்தவொரு பெண்ணும் முழுத் திருப்தி அடைஞ்சதாச் சொல்லல. ‘அப்பப்ப அப்படி இப்படின்னு இருந்தாரு. ரெண்டு குழந்தைகளையும் பெத்தேன். வருஷங்கள் ஓடிடிச்சி. அதுல திருப்தி கிடைச்சுதுன்னு நான் சொல்ல மாட்டேன்’னு ஒருத்தி அடிச்சிச் சொல்லுறா. ‘என்ன செய்யுறது? மனசுக்குள்ளயே புழுங்கினேன். படி தாண்டியும் போக முடியல. வேறே வழியில்லாம சுய இன்பப் பழக்கத்துக்கு அடிமையானேன்’னு இன்னொருத்தி வேதனைப்படுறா. மத்த பெண்கள் பேட்டியும் இதே ரீதியில்தான் இருக்கு.”


“வெளிநாட்டுப் பெண்களுக்குத் துணிச்சல் அதிகம்; சுதந்திரமும் இருக்கு. சுயமா சம்பாதிப்பது காரணமா இருக்கலாம். நம் நாட்டுப் பெண்களில் பலரும் கணவனைச்  சார்ந்தே இருக்காங்க. ஒளிவு மறைவில்லாம இவங்களால பேச முடியாது.”


“பேச முடியாதுன்னாலும், வளர்ந்து ஆளான புள்ளைகளை விட்டுட்டுக் கள்ளக் காதலனோட ஓடிப் போற பெண்கள் இங்கே இருக்காங்களே.  கட்டுப்பாடான குடும்பத்தில் பிறந்த பெண்களால, இப்படியெல்லாம் ஓடுறதுக்கு அவங்க மனசு இடம் கொடுக்காது. ஆனா, தப்புப் பண்ணவும் வழியில்லாம, ஓடிப் போகவும் முடியாம, மனநிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்படுவதும் இங்கே நடக்குது.”


“உண்மைதான். எனக்குத் தெரிஞ்சி ஒரு நடுத்தர வர்க்கத்துப் பெண். அவளோட மாராப்பு விலகி நான் பார்த்ததில்லை. அப்படிப்பட்டவ, ஒரு நாள் படு அசிங்கமா பேச ஆரம்பிச்சுட்டா. காரணம், கட்டின புருஷனின் இயலாமை அவளை மன நோயாளி ஆக்கிடிச்சி. போகட்டும், பெண்களின் எதிர்பார்ப்பு அதிகமாயிட்டதால, கல்யாணம் பண்ணிக்கப் பயப்படுறேன்னு சொல்லுறே. அப்படித்தானே?”


“ஆமாங்க.”


"மத்த நாட்டுப் பெண்கள் எப்படியோ, நம்ம பெண்களோட மனப்போக்கு வேறுமாதிரி. விந்தணுக்களை உட்செலுத்துகிற அந்த ஒரு செயல்பாட்டுக்கான கால நீட்டிப்பை மட்டுமே இவங்க பிரதானப்படுத்தறதில்ல. அழகை ரசிக்கிறது; உடம்போடு உடம்பு உரசறது; தொட்டுத் தழுவறது; முத்தமிடுறது; வார்த்தைகளால் சல்லாபிக்கிறதுன்னு ஆடவனுடைய ஒவ்வொரு செயலையும் உள்வாங்கிட்டு, அவ்வப்போது மனசுக்குள் அசை போட்டு ஆனந்தப்படுற உன்னத குணம் இவங்களுக்கு இருக்கு. அதனால, ’அந்த ஒரு விஷயத்தில்’ ஓரளவு இவங்களைத் திருப்திபடுத்தினாப் போதும், புருஷனைத் தலையில் தூக்கி வெச்சிக் கொண்டாடுவாங்க; ஆயுள் கால அடிமையா ஆயிடுவாங்க. என்ன நான் சொல்றது?” என்றார் கேசவன்.


"நீங்க சொல்றது சரிதாங்க. அந்த ஓரளவுக்குத் திருப்திபடுத்துற சாமர்த்தியம்கூட எனக்கு இல்லையேங்குறதுதான் என் நிலைமை.”


“விளக்கமா சொல்லு.”


“படிப்பு பாதிச்சுடும்கிற பயத்தில், செக்ஸ் பற்றிய நினைப்புக்கு நான் அதிகம் இடம் கொடுத்ததில்லை; நண்பர்களோட இதைப் பத்திப் பேசினதில்ல; செக்ஸ் புத்தகங்கள் படிச்சதில்ல.....”


இடைப் புகுந்து  சொன்னார் கேசவன்: “கல்வி நிலையங்களில் செக்ஸ் பத்திச் சொல்லித் தரணுனு சொல்றவங்க  யாரும்,  எந்த அளவுக்குக் கத்துக் கொடுக்கணும்னு அதுக்கான எல்லையை வரையறுத்ததே இல்லை. ஆண் பெண் உறுப்புகளின் பயன்பாடு; கருவுறுதல்; தவறான உடலுறவால் ஏற்படும் பாதிப்புகள்; தொற்றும் நோய்கள் பற்றியெல்லாம் சொல்லிக் கொடுக்கணும்னு  சொல்றாங்க. இப்படி, செக்ஸ் பத்திக் கொஞ்சம் சொல்லித் தந்தாலே,  அதற்கு மேலும் தெரிஞ்சிக்கணும்கிற ஆர்வத்தை டீன் ஏஜ்  பிள்ளைகளால் கட்டுப்படுத்த முடியாது. அதன் பின் விளைவு மிக மோசமானதாகவே இருக்கும். வயிற்றுப் பசியைக் காட்டிலும் அதிக சக்தி வாய்ந்தது காம உணர்ச்சி. ’காம உணர்ச்சிக்கு இடம் தந்துட்டா அது நம்மை வேறு எதுவும் செய்யவிடாது’ன்னு எனக்குத் தெரிஞ்ச ஒரு மேடைப் பேச்சாளர் அடிக்கடி சொல்வார். பெரிய பெரிய மேதைகளையும் அறிஞர்களையும் இந்த செக்ஸ் என்ன பாடுபடுத்தியிருக்கு!? அதனால, மாணவர்களுக்கு செக்ஸ் சொல்லித் தரணும்கிறது அடிமுட்டாள்தனமான வாதம்னுதான் நான் சொல்லுவேன். சரி...நீ மேலே சொல்லு.” 

பாலு தொடர்ந்தான். “பெண்களோட சகவாசமும் எனக்கு இருந்ததில்ல. மனக் கட்டுப்பாட்டையும் மீறி எப்பவாவது...எப்பவாவது...சுயமா......”

“சும்மா சொல்லு.”

“சுயமா என்னை நானே சந்தோசப்படுத்திக்குவேன். அந்தச் சந்தோசத்துக்கும் அற்ப ஆயுசுதான். நீண்ட நேரம் என்னை நானே சந்தோசப்படுத்திக்க முடியறதில்ல. அதை வெச்சுத்தான் என் வருங்கால மனைவியை அது விசயத்தில் ஓரளவுகூடத் திருப்திபடுத்த முடியாதுன்னு சொல்லுறேன்.”


“ரொம்பச் சரி. உடலுறவு சம்பந்தமான அனுபவமோ கேள்வி ஞானமோ படிப்பறிவோ இல்லாத நிலையில் நீ கல்யாணம் கட்டிக்கிறது தப்புதான்.....”


கேசவன் சொல்லி முடிப்பதற்குள் சொன்னான் பாலு: "என்னைப் புரிஞ்சிகிட்டதுக்கு நன்றி. எனக்குக் கல்யாணமே வேண்டாம்னு வீட்டில் சொல்லிடப் போறேன்.” 

“அவசரப்படாதே. நான் சொல்றதை முழுசாக் காதுல வாங்கிக்க. நான் கல்யாணம் கூடாதுன்னு சொன்னது, இனனும் ஆறு மாசத்துக்குத்தான். தேவைப்பட்டா ஒரு வருஷ அவகாசம்கூட நீ எடுத்துக்கலாம். அதுக்குள்ள நீ ஒரு நல்ல கணவனுக்குரிய தகுதியை வளர்த்துக்கணும்.  சேர்க்கையின்போது கையாளவேண்டிய வழிமுறைகள், உத்திகள் பற்றியும், திருப்திகரமான உடலுறவுக்கு உதவும் ‘ஆயின்மெண்ட்’ ‘ரப்பர்பேண்ட்’ போன்றவை பற்றியும் புத்தகங்கள் மூலமாவும் நல்ல நண்பர்கள் மூலமாவும் நீ தெரிஞ்சிக்கணும். கூச்சப்படாம மருத்துவர்கிட்டேயும் ஆலோசனை பெறலாம்.  உடலுறவு  சம்பந்தமான அறிவு வளர வளர, அது பற்றிய பயமும் படிப்படியாக் குறைய ஆரம்பிச்சுடும்........... ”

பேசுவதை நிறுத்தி, பொருள் பொதிந்ததொரு புன்னகையை முகத்தில் படரவிட்ட கேசவன், “பாலு, ‘ஆறு மாசம் போகட்டும். அப்புறம் பெண் பார்க்கலாம்’னு உன் பெற்றோர்கிட்ட சொல்லிட்டு, இன்னிக்கே உடலுறவுப் பாடம் படிக்க ஆரம்பிச்சுடு..... என்ன? வேலை முடிஞ்சி போகும்போது ஞாபகப்படுத்து, ஒரு நல்ல புத்தகம் தர்றேன்” என்று கண் சிமிட்டிவிட்டு உணவுப் பொட்டலத்தைப் பிரிக்க ஆரம்பித்தார் பாலு.
*****************************************************************************************************************************************************


ஒரு பக்கக் ‘குங்குமம்’[04.05.2015] கதை![புதுசோ புதுசு!]

                                            அர்ச்சனை   
ண்டுக்கு   இரண்டு தடவை ஏதாவது பிரசித்தி பெற்ற கோயிலுக்குக் குடும்பத்துடன் சென்று வருவது    என் வழக்கம்.

இன்று, நூறு கிலோ மீட்டர் தொலைவிலுள்ள தாரமங்கலம் கைலாசநாதர் கோயில்..

அதிகாலை புறப்பட்டு, கோயிலைச் சென்றடைந்தோம். அர்ச்சனைத் தட்டுடன் தேங்காய் பழத்தட்டை அர்ச்சகரிடம் நீட்டினோம்.

சாமி சிலைக்கு மாலை சாத்தி, பூர்வாங்க ஏற்பாடுகளைச் செய்து முடித்த அர்ச்சகர், “அர்ச்சனை யார் பேருக்கு? சொல்லுங்கோ” என்றார்.

“ஸ்ரு...” எங்கள் குழந்தையின் பெயர் சொல்லப்போன சரிதாவைக் கையமர்த்திவிட்டு, ‘மாரிமுத்து’ என்றேன். என்னைக் குழப்பமாகப் பார்த்துவிட்டு மௌனமானாள் சரிதா.

அர்ச்சனை, வழிபாடெல்லாம் முடிந்து, கோயிலைச் சுற்றிப்  பார்க்க ஆரம்பித்தபோது, சரிதா புரியாமல் கேட்டாள்...“யாருங்க அந்த மாரிமுத்து?”

“நம்ம வீட்டு வேலைக்காரி மகன்மா. அவன் ஒரு வாரமா டைபாய்டு காய்ச்சலால் அவஸ்தைப்படுறான்னு அந்த அம்மா சொன்னதை மறந்துட்டியா? அவன் சீக்கிரம் குணமடையட்டும்னு அவன் பேரைச் சொன்னேன். எப்பவும் நம் குழந்தைக்காகத்தான் அர்ச்சனை பண்றோம். இன்னிக்கி மத்தவங்க குழந்தைக்காகப் பண்ணியிருக்கோம். இது தப்பா சரிதா?” என்றேன்.

“நான் அப்படிச் சொல்வேனா? நானும் ஒரு பிள்ளையைப் பெத்தவதானே!” என்றாள் அவள் கனிவோடு.
============================================================================================                         


சனி, 25 ஏப்ரல், 2015

‘நல்ல நேரம்’ பார்க்கும் ‘நட்டு’ கழன்றதுகளிடம் ஒரே ஒரு கேள்வி!

இந்தப் பதிவு, மிகப் பெருமளவில்[குறைந்தபட்சம் 100000{ஒரு லட்சம்}] ‘ஹிட்ஸ்’கள் பெறுதல் பொருட்டு, முற்பகல் 10.30 மணிக்கு[ராணிமுத்து நாட்குறிப்பின்படி இன்று 10.30 - 11.30 நல்ல நேரம்] வெளியிடப்படுகிறது. [ஒரு 500 தேறுமா பார்ப்போம்!!!]


ரு தினசரியில்[25.04.2015], ‘ராகு காலம்’ கடக்கக் காத்திருந்த ஜி.கே. வாசன்’ என்னும் தலைப்பின் கீழ்..........
#தமிழ் மாநிலக் காங்கிரஸ் கட்சியின் முதல் பொதுக்குழுக் கூட்டம் நேற்று வானகரத்தில் நடந்தது. இந்தக் கூட்டம் காலை பத்து மணிக்குத் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், கூட்டம் குறித்த நேரத்தில் தொடங்கவில்லை.

காலை 10.30 மணி முதல் 12.00 மணி வரை ராகு காலம் என்பதால் கூட்டத்தில் பங்கேற்கக் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் விழா அரங்கிற்கு வரவில்லை. ராகு காலம் முடிந்த பிறகு 12.15 மணிக்கு அவர் மேடைக்கு வந்தார். அதன் பிறகே நிகழ்ச்சிகள் தொடங்கின# என்னும் செய்தியைச் சற்று முன்னர் வாசிக்க நேர்ந்தது.
பெருமதிப்பிற்குரிய ஜி.கே வாசன் அவர்களிடம் மட்டுமல்ல, எந்தவொரு முக்கியத்துவம் வாய்ந்த காரியத்தையும் செய்யத் தொடங்குவதற்கு முன்பாக ‘நல்ல நேரம்’ பார்க்கும் அனைத்து அதிபுத்திசாலிகளிடமும்['நட்டு' கழன்றதுகள் என்று தலைப்பில் குறிப்பிட்டது வெறும் கவர்ச்சிக்காக மட்டுமே. யாரையும் புண்படுத்தும் நோக்கம் எனக்கில்லை]  நான் கேட்க விரும்பும் ஒரே ஒரு கேள்வி...........

ஒவ்வொரு நாளிலும், நல்ல நேரங்களுக்கிடையே ‘கெட்ட நேரம்’களும்[எ.டு: 24.04.2015, ராகு காலம் 10.30 - 12.00; எமகண்டம்: 03.00 - 04.30] வரத்தானே செய்கின்றன. ஒரு செயலை நல்ல நேரத்தில் தொடங்கிச் செய்துகொண்டிருக்கிற நீங்கள், இடையிடையே குறுக்கிடும் ‘கெட்ட’ நேரங்களில் உங்களின் செயல்பாடுகளை நிறுத்தி வைப்பதில்லையே, ஏனய்யா? ஏன்?!

‘தொடங்குவதற்கு மட்டும் நல்ல நேரம்! அப்புறம் அது தேவையில்லை’.....இப்படிச் சொல்லிவிட்டுப் போனவர்களா, அல்லது அதை நம்புகிறவர்களா, இவர்களில் ஆகச் சிறந்த முட்டாள்கள் யாரெல்லாம்?

கொஞ்சமே கொஞ்சம் சிந்திக்கவும் செய்யலாமே! 

##########################################################################################################

10.30 என்று கணினி காட்டிய நேரத்தில் பதிவைக் ‘கிளிக்’ செய்ய,  நேரம் 10.29 என்று பதிவாகியிருக்கிறது. எல்லாம் என் நேரம்!!!!!

##########################################################################################################

வியாழன், 23 ஏப்ரல், 2015

பக்தர்களைச் சீண்டும் ‘குட்டிக்கதை’ இது! சிந்திக்கவும் தூண்டும்!!

நான் பதிவுகள்[2011] எழுதத் தொடங்கியதன்  நோக்கமே கடவுளைத் திட்டுவதுதான். குட்டிக்குட்டிக் கதைகள் சொல்லிப் பக்தர்களின் தலையில் குட்டுவது எனக்கு மெத்தப் பிடிக்கும். நான் ‘கெட்ட’ புத்தியுடன் படைத்த ‘நல்ல’ கதைகளில் இதுவும் ஒன்று. 


சாலையைக் கடந்து கொண்டிருந்த ஒரு பள்ளிச் சிறுவனை மோதித் தள்ளிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது அந்த வாகனம்.

ரத்தக் காயங்களுடன் கிடந்த சிறுவனை மருத்துவ மனையில் சேர்த்துவிட்டு, அடையாள அட்டையிலிருந்த தொ.பே. எண்ணுக்குத் தகவல் தந்தான் தங்கராசு.

விரைந்து வந்த சிறுவனின் பெற்றோர், மருத்துவரைப் பார்த்துவிட்டு, தங்கராசுவை அணுகினார்கள்.

“பத்து நிமிசம் தாமதம் ஆகியிருந்தா உங்க பிள்ளையைக் காப்பாத்தியிருக்க முடியாதுன்னு டாக்டர் சொன்னார். நான் கடவுளை நம்புறவன். அவராப் பார்த்து உங்களை அனுப்பியிருக்கார்.  ரொம்ப நன்றிங்க.” என்று சொல்லித் தங்கராசுவின் இரு கைகளையும் பற்றித் தன் கண்களில் ஒற்றிக் கொண்டார் சிறுவனின் தந்தை.

குரல் தழுதழுக்கச் சொன்னான் தங்கராசு: 
“என் ரெண்டு வயசுக் குழந்தை காணாம போயி ரெண்டு வருசம் ஆச்சு. கடவுளை வேண்டாத நாளில்லை. அவர் கண் திறக்கல. அவருக்கு உங்க மேல ரொம்பப் பிரியம் போலிருக்கு. நீங்க கேட்காமலே உங்களுக்கு உதவி செய்ய என்னை அனுப்பியிருக்கார். நீங்க சொன்னா அவர் கேட்பாரு. தயவு பண்ணி என் பிள்ளையைக் கண்டுபிடிச்சிக் கொடுக்கச் சொல்லுங்க.”

என்ன சொல்வதென்று புரியாமல் பேந்தப் பேந்த விழித்தார் சிறுவனின் தந்தை!

=============================================================================================

திங்கள், 20 ஏப்ரல், 2015

நான் ஒரு ரவுடியிடம் உதை வாங்கிய கதை!!!

“சேலம் போய் வந்ததிலிருந்து ஒரு மாதிரி இருக்கீங்க. சொல்லுங்க, என்ன நடந்தது?” என்றாள் என் மனைவி.

“எதுவும் நடக்கல. இயல்பாத்தானே இருக்கேன்.” கொஞ்சமாய்ச் சிரிக்க முயன்று தோற்றேன்.

“மூஞ்சி, கறுத்துச் சுண்டிப் போயிருக்கு. நாலு நாளா எதைப்பத்தியோ தீவிரமா யோசிச்சிட்டிருக்கீங்க. வேண்டத்தகாதது ஏதோ நடந்திருக்கு. மறைக்காம சொல்லுங்க.” என் தாடையைப் பற்றி நிமிர்த்திப் பரிவுடன் நோக்கினாள் என்னவள்.

“அன்னிக்கி, சேலம் போன வேலை முடிஞ்சி   பஸ் நிலையம் போயிட்டிருந்தேன். என் பின்னால பைக்கில் வந்த ஒரு முரடன் என்னை இடிச்சித் தள்ளிட்டான். குப்புறச் சரிந்து எழுந்து, உடம்பு துடைச்சி நிமிர்ந்தபோது, “முண்டம், , ஓரமா போறதுக்கென்ன?”ன்னு  அவன் முறைச்சான்.

“ஏண்டா தடிமுண்டம், இடிச்சதும் இல்லாம திமிர் பேசுறியான்னேன். ‘ஆமா, திமிர்தான் பேசுறேன். என்னடா பண்ணுவே’ன்னு பைக்கை ஸ்டேண்டு போட்டுட்டு என்னை நெருங்கினான்.......லேசா சாராய நெடி. போதையில் இருந்தான்.”

“ஐயோ...அப்புறம்.....”

“கூட்டம் கூடிச்சி. எல்லாரும் வேடிக்கைதான் பார்த்தாங்க. ‘என்னடா, குடிச்சுட்டு வம்புக்கு வர்றே. மரியாதையா வீடு போய்ச் சேருன்னு நான் சொல்ல,  ‘மரியாதையாவா?’ன்னு நக்கலா கேட்டுட்டு, அசிங்கமாவும் கொச்சையாவும் திட்டினான். என்னால, அவனளவுக்குத் தரம் தாழ்ந்து பேச முடியல. பன்றி...நாய்...கழுதைன்னு ஏதோ உளறினேன்.........”

குறுக்கிட்டாள் என் மனைவி. “என்னங்க ஆச்சு? சீக்கிரம் சொல்லி முடிங்க.”

“வாய்ச் சண்டையோட விவகாரம் முடிஞ்சிடும்னு  நினைச்சேன். ஆனா அவன் நான் கொஞ்சமும் எதிர்பாராத வகையில் என் நெஞ்சில் எட்டி உதைச்சிட்டான். தரையில் மல்லாக்க விழுந்து உருண்டேன். உதைக்கு உதை கொடுக்கத்தான் நினைச்சேன். அதுக்குள்ள ஆயிரம் யோசனை. ரெண்டு பேரும் உதைச்சிட்டுக் கட்டிப்புரண்டு, ரத்த காயம் பட்டு, போலீஸ், கோர்ட்டுன்னு.....இப்படி மனசுக்குள் பட்டிமன்றம் நடத்தி ஒரு முடிவுக்கு வர்றதுக்குள்ள அவன் இடத்தைக் காலி பண்ணிட்டுப் போய்ட்டான். ஒரு பெரிய கும்பலுக்கு மத்தியில் நான் கூனிக்குறுகி ஒடுங்கி நின்னேன். அப்புறம் எப்படியோ வீடு வந்து சேர்ந்தேன். விழுந்த வேகத்தில் எழுந்து போய் அவனை உதைக்காம இருந்துட்டமேன்னு வருத்தமா இருக்கு. ”

“தெருவில் திரியற ஒரு சொறி நாய் நம்மைக் கடிச்சுடுது. அதை நாம திருப்பிக் கடிக்கலையேன்னு வருத்தப்படுறோமா? அது அவமானம்னு நினைக்கிறோமா? அது மாதிரிதாங்க இதுவும். ஒரு கனவா நினைச்சி மறந்துடுங்க” என்றாள் என்னவள். என்னை அமைதிப்படுத்த இன்னும் என்னவெல்லாமோ சொன்னாள். அவற்றில் எதுவும் என் நெஞ்சில் பதியவில்லை.

நாட்கள் கழிந்தன.

அன்றைய செய்தித்தாள் படித்துக் கொண்டிருந்த போது, ‘பிரபல ரவுடி கைது’ என்று ஒரு செய்தியின் தலைப்பு கண்ணில் பட்டது. ரவுடியின் புகைப்படமும் வெளியாகியிருந்தது.

‘தங்கச் சங்கிலி பறிப்பு, வழிப்பறி ஆகியவற்றில் ஈடுபட்டு வந்தவன் சேலத்தைச் சேர்ந்த பிரபல ரவுடி கலிவரதன். காவல்துறையால் தேடப்பட்டு வந்த இவன், களவாடிய பைக்கில் போன போது, வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீஸாரால் கைது செய்யப்பட்டான். இவன் கொலை, கொள்ளை வழக்குகளிலும் சம்பந்தப்பட்டவன். இவனால் வெட்டிக் கொல்லப்பட்டவர்களில், காவல்துறை ஆய்வாளரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.’

மனைவியை அழைத்து, அந்தச் செய்தியைப் படிக்கச் சொன்னேன்.

“ஐயய்யோ.....இன்ஸ்பெக்டரையே வெட்டிக் கொன்னவனா? இவனோடவா நீங்க சண்டை போட்டீங்க?”

“நல்லா ஞாபகம் இருக்கு. இவனோடதான்.”

“அவனை உதைக்காம விட்டதுக்கு வருத்தப்பட்டீங்களே. உங்க கையோ காலோ அவன் மேல பட்டிருந்தா உங்களை வெட்டிப் போட்டிருப்பான். நம்ம குல தெய்வம்தான் உங்களைக் காப்பாத்தியிருக்கு. அவனைத் திருப்பித் தாக்கலையேன்னு நினைச்சி இனியும் வருத்தப்படாதீங்க; நடந்ததை அடியோட மறந்துடுங்க” என்றதோடு, மாங்கல்யத்தை எடுத்துக் கண்களில் ஒற்றிக் கொண்டாள் என் மனைவி.

“அதுக்கென்ன மறந்துட்டாப் போச்சு” என்றேன்.

அது வெறும் வாய் வார்த்தைதான். இது நடந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனாலும், ஒரு குடிகாரப் பொறுக்கியிடம் பட்ட அவமானத்தை மறப்பது அத்தனை எளிதா என்ன?

சற்று முன்னர்கூட  அந்தச் சம்பவம் மனதை உறுத்தியது; வருத்தியது. அந்த வருத்தத்தைத்தான் உங்களுடன் பகிர்ந்துள்ளேன். இதன் மூலம் கொஞ்சம் ஆறுதல் பெறமுடியும் என்பது என் நம்பிக்கை.

===========================================================================

ஞாயிறு, 19 ஏப்ரல், 2015

பாவம் இந்தப் பாலியல் பெண் தொழிலாளர்கள்!!! [old is gold!?]

"இந்தத் தொழிலில் ஈடுபடுத்தப்படும் ஆயிரக் கணக்கான பெண்களில் பலரும் சிறு வயதிலேயே தந்தை, தாய்மாமன், மச்சான், சொச்சான் போன்ற மிக நெருங்கிய ரத்த உறவு கொண்டவர்களாலேயே வன்புணர்ச்சிக்கு உட்படுத்தப் பட்டவர்கள்; குடும்ப உறுப்பினர்களாலும் சமுதாயத்தாலும் புறக்கணிக்கப்பட்டவர்கள்" என்கிறார் இந்தத் தொழிலில் ‘முத்துக் குளித்த’ ஒரு ’முன்னாள்’ பிரபலம்! [பெயர் தவிர்க்கப்படுகிறது. interviewed in 'Not For Sale’, 2004]
"இதில் ஈடுபட்டவர்கள் பலரும் நரம்பு சம்பந்தப்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டு இத்தொழிலைத் தலை முழுகியவர்கள்.” ['Avaria', Shelly Lubben's Blog, 06.12.2007].

இதில் ஈடுபடுத்தப்படும் பெண்களின் சராசரி வயது 18 ஆகும்.[ABC News quoted on erasethedark.com]

நிறையச் சம்பாதிக்கலாம் என்ற ஆசையில் இளம் பெண்கள் வருகிறார்கள். ஆனால், உண்மையில் சம்பாதிப்பவர்கள், பேரழகும் கட்டான உடலமைப்பும் அதிர்ஷ்டமும் உள்ள கொஞ்சம் பெண்களும், தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும், தரகர்களும்தான்.

இதில் ஈடுபடும் தொழில்காரிகள், A, B, C என வகைப்படுத்தப்படுகிறார்கள்.

'A’ தரத்தில் உள்ளவர்களைத் தயாரிப்பாளர்கள் தேடிப் போவார்கள்; கேட்கும் ஊதியத்தைக் கொடுப்பார்கள்; மிகவும் மரியாதையாக நடத்துவார்கள்.

Bயும் Cயும் நம் சினிமாக்களின் துணை நடிகைகள் போல! மேற்சொன்ன கவுரவங்கள் மிஸ்ஸிங்! [Jonathan Morgan, ex .... director, The Guardian, march 17, 2001].

“இது மிகப் பயங்கர அனுபவம். இதில் ஈடுபடும்போது, பெண்கள் வலியால் துடிப்பார்கள்; அலறுவார்கள். இவர்களில் பலரும் பாலியல் தொற்று நோய்களுக்கும், H.I.V தொற்றுக்கும் ஆளாகிவிட்டவர்கள்”என்றிப்படித் தன் அனுபவங்களை அடுக்குகிறார் ஒரு male....performer [at the Los Angeles Hearings of The Attorney General Commission, 2005] 

தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட சிறிது காலத்திலேயே குடும்ப உறவுகளால் புறக்கணிக்கப்பட்டுத் தனிமைப்படுத்தப் படுகிறார்கள் இவர்கள். போதைப் பழக்கங்களுக்கு அடிமையாகி, மனநோயாளிகளாய் மாறுகிறார்கள்.

இத்தொழிலில் ஈடுபட்டவர்களில் மிகப் பலரின் , குறிப்பாகப் பெண்களின் வாழ்க்கை பாழாகியிருக்கிறது. 75%---80% பேர் தற்கொலை முயற்சிகளில் ஈடுபட்டவர்கள். நிறையத் தற்கொலைகளும் நிகழ்ந்துள்ளனவாம்.

இளம் பெண்களைக் காவு வாங்கும் ‘இந்த’த் தொழில் எது என்பது பலரும் அறிந்ததே. ஆங்கிலத்தில் ‘........phy’ என்று சொல்லப்படும் ஆபாசப் படத் தயாரிப்பு!

இவ்வகைப் படங்களைத் தயாரிப்பதற்கான சிறந்த மையமாக Hungary- Budapest திகழ்கிறதாம்!

55% நிறுவனங்கள் [Internet Child .... Industry] அமெரிக்காவிலும், 33% நிறுவனங்கள் ரஷ்யாவிலும் உள்ளனவாம். 

இந்தத் தொழிலில் நம் பாரதேசம் பின்தங்கியிருப்பது ஆறுதல் அளிக்கிறது!

ஒரு பக்கத்தில் ஆண் பெண் சமத்துவத்துக்கான ஆக்கபூர்வமான செயல்கள் நடைபெற்றுக் கொண்டிருக்க, வக்கிர புத்தியுடன் பெண்களை உடலுறவில் ஈடுபடுத்திப் படம் எடுத்து உலகம் முழுக்கப் பரவவிட்டுப் பணம் சம்பாதிக்கிறது ஆண் வர்க்கம்.

இணைய வலைத்தளங்களில் உலா வரும் கோடிக்கணக்கான ஆபாசப் படங்களைத் தடை செய்ய வேண்டும் என்று அவ்வப்போது சில குரல்கள் ஓங்கி ஒலித்தாலும் அவையும் பின்னர் அடங்கிவிடுகின்றன.

ஆபாசப் படங்களுக்கு எதிரான குரல் [anti .... websites] இணையத்தில் ஒலிப்பதே இல்லையா என்னும் ஆதங்கத்தில் தேடுபொறிகள் வாயிலாகத் தேடிய போது பல தகவல்கள் கிடைத்தன. மேற்கண்டவை அவற்றில் சில.
உடலுறவு கொள்ளும் ‘முறைகள்’ குறித்துப் படங்கள் [ஓவியங்களைப் பயன்படுத்தி] தயாரிப்பதும் திருமணம் செய்துகொள்ளவிருக்கும் இளைஞர்களுக்குக் குறிப்பிட்ட கால அவகாசத்துக்கு முன்னரே பாலுறவுக் கல்வி கற்றுத் தருவதும் வரவேற்கப்பட வேண்டியவை.

நடைமுறை சாத்தியம் இல்லாத,  உடலுக்கும் மனதுக்கும் தீங்கு விளைவிக்கிற படங்களை எடுத்து அவற்றைப் பலரும் பார்க்க வழிவகை செய்வது கண்டிக்கத் தக்க மாபெரும் குற்றம் ஆகும். அக்குற்றங்களை வேரோடு களைவது இன்றைய இளைஞர்களால் சாத்தியப்படும்.

அவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான மிக மிகச் சிறிய முயற்சியே இப்பதிவு.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@


















சனி, 18 ஏப்ரல், 2015

அன்று அக்கினி பகவான் நடத்திய வேட்டையும் தப்பிப் பிழைத்த தளிர்களின் பேட்டியும்!

பொழுதுபோக்காகப் பழைய ‘விகடன்’[01.08.2004] இதழ் ஒன்றைப் புரட்டிக்கொண்டிருந்தேன். ‘தப்பிப் பிழைத்த தளிர்கள்!’ என்னும் தலைப்பில் வெளியாகியிருந்த அந்தச் சிறுமிகளின் பேச்சு என்னைக் கண்கலங்க வைத்தது. படியுங்கள். பத்தாண்டுகளுக்கு முன்பு கும்பகோணம் பள்ளியொன்றில் 90 குழந்தைகள் தீயில் கருகிய  அந்தக் கொடூரம் உங்கள் மனக்கண் முன் விரியும்; கண்களைக் குளமாக்கும்.
புஷ்பராணி[7ஆம் வகுப்பு]:
“கிளாஸ் ரூமில் ஒக்காந்திருந்தோம். உஷா டீச்சர் வந்து, ‘சீக்கிரம் ஓடுங்க...ஓடுங்க’ன்னு எங்களைப் படியிலே இறக்கிவிட்டாங்க. என் ஃபிரெண்டு அனிதாவோட தம்பி அருணைப் பார்த்தேன். ‘டேய் வாடா’ன்னு அவனை இழுத்தேன். ‘உள்ளே பை கிடக்குக்கா’ன்னு அதை எடுக்க உள்ளே ஓடினான். அவன் அங்கேயே செத்துப் போய்ட்டான்.”

எம்.சரண்யா[7ஆம் வகுப்பு]:
“அருணோட அக்கா அனிதா என் கிளாஸ்மேட்தான். தீப்பிடிச்சதும் எல்லாரும் ஓட ஆரம்பிச்சோம். ஆனா, அருண் உள்ளே ஓடறதைப் பார்த்ததும், ‘ஐயோ அருணு’ன்னு தம்பியைக் கூட்டிட்டு வர்றதுக்காக புகைக்குள்ள ஓடினா. தம்பியைக் காப்பாத்தப் போன அவளும் செத்துட்டா.”

சுகன்யா[8ஆம் வகுப்பு]:
“டிஃபன் பாக்ஸ், புக், பை எல்லாத்தையும் எடுத்துட்டு ஓட முடியல. அப்படியே போட்டுட்டேன். படிக்கட்டு எங்கே இருக்குன்னு பார்த்து இறங்க முடியல. ஒரே புகை. கண்ணு இருட்டிருச்சி. மூச்சிவிட முடியல. மூனாங்கிளாஸ் ஜன்னலையெல்லாம் யாரோ அண்ணனுங்க உடைச்சாங்க. எரியுது...எரியுதுன்னு ஒரே சத்தம். எப்படியோ நான் ஓடிவந்துட்டேன்.”

ரேவதி[6ஆம் வகுப்பு]:
“என் டியர் ஃபிரெண்டு நந்தினி. நாங்க ரெண்டுபேரும்தான் வேன்ல பக்கத்துல பக்கத்துல உட்கார்ந்து வருவோம். கடையில் மிட்டாய் வாங்கி டப்பாவுல போட்டுகிட்டு மதியம்வரை வெச்சிருந்து திம்போம். இப்போ அவ தீயில் சிக்கிச் செத்துப் போய்ட்டா. எனக்குப் பயமா இருக்குண்ணே.”

ஸ்ரீவித்யா[6ஆம் வகுப்பு]:
மோனிகாதான் என் ஃபிரெண்டு. அவள விட்டு நான் வேற யார்கூடவாவது பேசினாக்கூட சண்டை போடுவா. ஆனா, ரொம்ப நல்லவ. ‘எல்லாரும் ஓடுறாங்க, வாடீ’ன்னு இழுத்துகிட்டு வந்தேன். நடுவுல எல்லாரும் இடிச்சித் தள்ளினாங்க. ரொம்ப நேரம் என்கூடதான் இருந்தா. நடுவுல எங்க போனான்னு தெரியல. அவளும் வெளியே வந்திருப்பான்னு தேடினேன். ஆனா, அவ தீயில் சிக்கிச் செத்துட்டா.”

ஆர்.சரண்யா[7ஆம் வகுப்பு]:
“தப்பிச்சி ஓடி வர்றப்ப என்கூட ரோஜாவும் வந்தா. ரெண்டுபேரும் அழுதுகிட்டே கேட்வரைக்கும் போய்ட்டோம். திடீர்னு, ‘ஐயோ...பாரதி எப்படீடி வருவா’ன்னு மறுபடியும் மூனாவது மாடிக்கு ஓடினா. பாரதிக்குக் காலு சரியில்ல...அவளால ஒழுங்கா நடக்கவே முடியாது. ‘ரோஜா...பாரதி’ன்னு அழுதுகிட்டே நின்னேன். என்னைப் புடிச்சி யாரோ வெளியே தள்ளிட்டாங்க. வீட்டுக்கு அழுதுட்டே வந்துட்டேன். அப்புறம்தான் சொன்னாங்க...’ரோஜா, பாரதி ரெண்டு பேரும் சேர்ந்தே தீயில் சிக்கிச் செத்துப் போய்ட்டாங்க’ன்னு.”

இளந்தளிர்களின் பாசப் போராட்டங்களைப் பார்த்தாவது அக்கினி பகவான் தன் வேட்டையை ஒத்திப்போட்டிருக்கலாம். அற்ப மனிதர்களால் அவருக்கு ஆணையிட முடியுமா என்ன?

0000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000



வெள்ளி, 17 ஏப்ரல், 2015

நடுநிலை பிறழ்ந்ததோ தமிழ்மணம்!? ஆயினும் அதற்கு நன்றி!

#ஜெயகாந்தனின் ‘அக்கினிப் பிரவேசம்’ ஒரு புரட்சிப் படைப்பா? -ஓர் அதிரடி விமர்சனம்!#http://kadavulinkadavul.blogspot.com/2015/04/blog-post_9.html என்னும் தலைப்பில் இன்று முற்பகல் 11.30 மணிக்கு, ஒரு பதிவு எழுதியதோடு அதைத் தமிழ்மணத்தில் இணைக்கவும் செய்தேன்.

தமிழ்மணமும் அதை இணைத்துக்கொண்டதாக அறிவிப்புச் செய்தது. ஆயினும், அது தமிழ்மணம் பதிவுகள் பட்டியலில் இடம்பெறவில்லை.[நண்பகலில் அது மீண்டும் இணைக்கப்பட்டும் பலனில்லை]

‘அக்கினிப் பிரவேசம் ஒரு எதார்த்தமான படைப்பல்ல; அது தரத்தில் சராசரிக்கும் குறைவான இடத்தையே பெற்றிருக்கிறது’ என்பதாக விமர்சனம் செய்திருக்கிறேன். தரம் தாழ்ந்து எழுதப்பட்டதல்ல அவ்விமர்சனம்.

என் பதிவு இணைக்கப்பட்டதாக அறிவித்த பின்னர் அது இருட்டடிப்புச் செய்யப்பட்டதற்கான காரணத்தை என்னால் அறிய இயலவில்லை. ஜெயகாந்தன் விமர்சிக்கப்படுவதை தமிழ்மணம் விரும்பவில்லை போலிருக்கிறது. 

மூளைக்கு வேலை தரவேண்டும் என்பதற்காகவே நான் பதிவு  எழுதுகிறேன். அது பிறருக்குப் பயன்படுவதாக இருந்தால் நல்லது என்றும் நினைப்பவன் நான்.

ஆகவே, தமிழ்மணத்தின் புறக்கணிப்பு என்னை வருத்தவில்லை. கடந்த காலங்களில் அது அளித்த ஆதரவை நன்றியுடன் நினைவு கூர்கிறேன்.

நன்றி தமிழ்மணம்...மிக்க நன்றி.

=====================================================================================================================================

ஜெயகாந்தனின் ‘அக்கினிப் பிரவேசம்’ ஒரு புரட்சிப் படைப்பா? -ஓர் அதிரடி விமர்சனம்!

ஜெயகாந்தனுக்குப் பெரும் புகழ் ஈட்டித் தந்த சிறுகதைகளில் அக்கினிப் பிரவேசமும் ஒன்று. தரத்தில் ‘சராசரி’க்கும் கீழே இடம்பெறும் இது,  1966ஆம் ஆண்டில் ஆனந்தவிகடனில் வெளியானபோது கடுமையான விமர்சனங்களுக்கு  உள்ளானதாகச் சொல்வார்கள். 

#ஜெயகாந்தனின் அக்கினிப் பிரவேசம் கதைக் கருவும், அதன் முடிவும் தமிழகமெங்கும் பலத்த சர்ச்சைக்குரியனவாக அமைந்தன. இக்கதை, 1966இல் ஆனந்தவிகடனில் வெளியானது. இக்கதையின் கரு புரட்சிகரமானது என்று மக்கள் மத்தியில் எண்ணம் நிலவியிருந்தது. ஆனால், அக்கரு யதார்த்தமான உண்மையைப் பேசுவது என்கிறார் ஜெயகாந்தன்-www.tamilvu.org/.../p1011662.htm

ஜெயகாந்தன் சொல்வது போல் இந்தக் கதை எதார்த்தமான ஒன்றா? இதன் கருவும் முடிவும் சர்ச்சைக்குரியனவா? புரட்சிகரமானவையா? என்பனவாகிய கேள்விகளுக்கு விடை தேடும் முயற்சியின் பயனே இப்பதிவு.
ரு கல்லூரி மாணவிதான் இந்தச் சிறுகதையின் நாயகி. பதினாறைக் கடந்து வயது பதினேழில் நடை பயில்பவள் அவள். கல்லூரி முடிந்து, பேருந்துக்குக் காத்துக்கொண்டிருக்கிற அவளைச் ‘சிறுமி’ என்று அறிமுகப்படுத்துகிறார் எழுத்தாளர் ஜெயகாந்தன்.

.....‘கும்பலை[மாணவிகள்] ஏற்றிக்கொண்டு அந்த பஸ் நகர்ந்த பிறகு பிளாட்பாரத்தில் இரண்டு மாணவிகள் மட்டுமே நிற்கின்றனர். அதில்[அவர்களில்] ஒருத்தியைச் ‘சிறுமி’ என்கிறார்.

இவர் பார்வையில், குறைந்தபட்சம் பதினேழு வயதான ஓர் இளம்பெண் சிறுமியாகக் காட்சி தருவது விந்தைதான்.

‘சிறுமியைப் பார்த்தால், கல்லூரியில் படிப்பவளாகவே தோன்றவில்லை...’என்று தொடங்கி  ஏழ்மையில் வாழ்ந்து  வளர்ந்த அவளின் தோற்றத்தை மனதில் பதியும் வகையில் வர்ணித்திருக்கிறார் ஜெயகாந்தன்.

தனக்குரிய பேருந்து வராததால், தனிமையில் தவித்துக் கிடந்த அவளிடம் முன்பின் அறிமுகமே இல்லாத ஓர் இளைஞன், “பிளீஸ் கெட் இன். ஐ கேன் டிராப் யூ அட் யுவர் பிளேஸ்” என்று சொல்கிறான். முதலில்  மறுத்த அவள், “ஓ! இட் ஈஸ் ஆல்ரைட்...கெட் இன்” என்று அவன் அவசரப்படுத்தியபோது காரில் அமர்ந்துவிடுகிறாளாம்; அவள் கை மேல் அவனது கை அவசரமாக விழுந்து பதனமாக அழுத்தியபோது, ‘அவன்தான் என்னமாய் அழகொழுகச் சிரிக்கிறான்!’ என்று ரசிக்கிறாளாம். ரசித்தவள் ஜெயகாந்தனால் ‘சிறுமி’ என்று சான்றிதழ் வழங்கப்பட்ட அந்தப் பதினேழு வயதுக் குமரி!

வழக்கமாகக் கல்லூரிக்கு வந்து செல்கிற ஒருத்திக்குத் தன் வீடு செல்ல இரவில் எத்தனை மணிவரை பேருந்து வசதி உண்டு என்பது தெரியாதா? பேருந்துகளே ரத்து செய்யப்பட்டிருந்தாலும் மாற்று ஏற்பாடுகளை அவள் அறிந்திருக்க மாட்டாளா? எவனோ ஒரு வழிப்போக்கனை நம்பிச் சென்று ஏமாறுகிறாளாம். கயிறு திரிப்பவர் பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தன்தான்!

கார் திசை மாறி எங்கோ செல்கிறது. ‘இதென்ன, கார் இந்தத் தெருவில் போகிறது?’ என்று தனக்குள் நினைக்கிறாள் அந்தப் பெண்; ஆனாலும் அவனிடம் காரணம் கேட்கவில்லை;  அவனைப் பார்த்துப் புன்னகை வேறு செய்கிறாளாம்!

நகரத்தின் சந்தடியே அடங்கிப்போன ஏதோ ஒரு டிரங்க் ரோட்டில் கார் போய்க்கொண்டிருக்கிறது. அப்போதும் அவள் வாய் திறக்கவில்லை. அவள் ஏதும் அறியாத ‘சிறுமி’ அல்லவா? ‘சின்னக் குழந்தை மாதிரி’ வீட்டுக்குப் போக வேண்டும் என்று நச்சரிக்கவும் பயமாக இருந்ததாம். ஆமாம்... தான் வழிதவறிக் கடத்திச் செல்லப்படுவதைச் சுட்டிக்காட்டுவதற்குக்கூட அவள் பயப்பட்டாள் என்கிறார் எழுத்தாளர்.

எப்படிப் போகிறது கதை...எப்படியெல்லாம் நம் காதில் பூச்சுற்றுகிறார் கதாசிரியர் என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள்.

சாக்லெட்டை அவள் கையில் தராமல், அவள் முகத்தருகே ஏந்தி, அவள் உதட்டின் மீது பொருத்தி லேசாக நெருடுகிறான் அவன். அப்போதும்கூட அவள் வாய் திறந்து தன் எதிர்ப்பை வெளிப்படுத்தவில்லை! அந்த அளவுக்கு அவன் அழகிலும் அவனின் ஆசையைத் தூண்டும் அந்தரங்க விளையாட்டுகளிலும் தன்னைப் பறிகொடுத்துக் கிளுகிளுத்துக் கிடக்கிறாள் அவள்.  அவளைத்தான் ‘சிறுமி’ என்று நமக்கு அறிமுகப்படுத்தினார் ஜெ.

“ரொம்ப நல்லா இருக்குல்லே?” இந்தச் சூழ்நிலையைப் பற்றி, இந்த அனுபவத்தைக் குறித்து அவளது உணர்ச்சிகளை அறிய விழைந்து அவன் கேட்கிறான்.

“நல்லா இருக்கு...ஆனா, பயமா இருக்கு” என்று சொல்லுகிறாள் முன்பின் தெரியாத ஓர் அழகனின் தொடுதலில் சிலிர்த்துப் போன அந்தச் சிறுமி!

புணர்ச்சி இன்பம் துய்த்து முடித்து வீடு திரும்பிய நிலையில், “மழை கொட்டுக் கொட்டுன்னு கொட்டிச்சி. பஸ்ஸே வரல. அதனாலதான் [அவன்]காரில் ஏறினேன். அப்புறம் எங்கேயோ காடு மாதிரி ஒரு இடம்... மனுஷாலே இல்ல...ஒரே இருட்டு. மழையா இருந்தாலும் எறங்கி ஓடி வந்துடலாம்னு பார்த்தா, எனக்கோ வழி தெரியாது. நான் என்ன பண்ணுவேன்...அப்புறம் வந்து...வந்து...ஐயோ! அம்மா அவன் என்னெ...” என்று சொல்லி, புத்தகங்கள் நாலாபுறமும் சிதறி விழ, கூடத்து மூலையில் அவள் சுருண்டு விழுகிறாள்’ என்று விவரித்தவாறு, கதையை அதன் உச்சநிலைக்குக் கொண்டுசெல்கிறார் கதாசிரியர்.

“அடிப்பாவி! என் தலையில் நெருப்பைக் கொட்டிட்டியே...” என்று பதறுகிறாள் தாயார்க்காரி.

இது போன்ற சூழலில், இப்படியாகப் பதறுவது எல்லா சராசரித் தாய்மாருக்கும் உள்ள குணம்தான்.

‘அப்படியே ஒரு முறம் நெருப்பை அள்ளி இவள் தலையில் கொட்டினால் என்ன?’ என்று நினைக்கிறாள் அவள். இதுவும் எதார்த்தம்தான்.

“கடவுளே, நீதான் அந்தப் பாவிக்குத் கூலி கொடுக்கணும்” என்று மகளைக் கெடுத்த இளைஞனுக்குச் சாபம் இடுகிறாள்.

உணர்ச்சிப் போராட்டங்களுக்குப் பிறகு,

‘[மனதில் பொங்கிய]கருணையால் நடந்தவற்றைச் சகித்துக்கொண்டு, ‘நானே இவளை ஒதுக்கினால், இவள் வேறு எங்கே தஞ்சம் புகுவாள்?’ என்று எண்ணி மகளைக் கோபிப்பதோ தண்டிப்பதோ பரிகாரம் ஆகாது’ என்ற முடிவுக்கு வருகிறாள். இதுவும் நடப்பியல் சார்ந்த நிகழ்வுதான்.

இந்நிகழ்வுக்குப் பிறகு ஏறத்தாழ கதை சொல்லி முடிக்கப்பட்டுவிட்ட நிலையில். எஞ்சியிருப்பது கதையின் ‘முடிவு’ மட்டுமே.

“யார்கிட்டேயும் இதைப் பத்திப் பேசாதே. இந்த விஷயத்தில் மட்டும் வேண்டியவங்க நெருக்கமானவங்கன்னு கிடையாது. யார்கிட்டயும் சொல்லலேன்னு என் கையிலே அடிச்சி, சத்தியம் பண்ணு” என்கிறாள் அம்மாக்காரி.

“யாரிடமும் சொல்லாதே” என்று முடித்திருந்தாலே போதுமானது. சத்தியம் செய்யச் சொல்லுவது மிகையானது. பிறரிடம் பகிர்ந்து மகிழத்தக்க நிகழ்வல்ல இது என்பது ஒரு கல்லூரி மாணவிக்குத் தெரியாமலிருக்க வாய்ப்பே இல்லை.

‘சத்தியம் செய்தல்’ஐக்கூட அலட்சியப்படுத்தலாம்; இதை ஒரு சராசரிக் கதை என்றும் ஏற்கலாம். கதையின் ‘முடிவு’ப் பகுதியில் கீழ்க்காணும் நிகழ்வைச் சேர்க்காமல் இருந்திருந்தால்.

குடம் குடமாய் மகளின் தலையில் நீரைக் கொட்டி, தலை துவட்டி,  “நீ சுத்தமாயிட்டேடி...உன் மேலே கொட்டினேனே, அது ஜலமில்லேடி...நெருப்புன்னு நினைச்சுக்கோ. ......ஒனக்கு அகலிகை கதை தெரியுமோ? ராமரோட பாதத் தூளி பட்டு அவ புனிதமாட்டான்னு சொல்லுவா. ...நீயும் புனிதம் ஆயிட்டே”  என்று அம்மாக்காரி சொல்கிறாள். 

ஒரு பிராமணக் குடும்பத்தைச் சேர்ந்த குமரிப் பெண்ணான அவள் மனம் விரும்பிச் செய்த தவற்றுக்கு, சூழ்நிலையே காரணம் என்று சப்பைக்கட்டுக் கட்டியதோடு, அகலிகையுடன் ஒப்பிட்டு அவளைப் புனிதப்படுத்தியிருக்கிறார் ஜெயகாந்தன்.

இவ்வகையில், இது எதார்த்தமானதொரு படைப்பல்ல.

தவறிழைத்த மகளிடம், “இதைப் பிறரிடம் சொல்லிவிடாதே” என்றுதான் அத்தனை தாய்மார்களுமே சொல்லுவார்கள். இந்த மாமியும் அதைத்தான் செய்கிறாள். கூடுதலாகப் புராணக் கதையையும் மேற்கோள் காட்டுகிறாள். இதில், புதுமை என்றோ, புரட்சி என்றோ சொல்ல ஏதுமில்லை.

மகளைக் குளிர்ந்த  நீரால் குளிப்பாட்டி, “குழந்தே, நீ அக்கினியில் குளிச்சிட்டே[சீதாப்பிராட்டி மாதிரி] தூய்மை அடைஞ்சுட்டே; புனிதம் அடைஞ்சுட்டே” என்று சொல்வதிலும் புரட்சியில்லை; புதுமையும் இல்லை. இம்மாதிரிச் சூழலில் புராணக் கதை சொல்லியா ஒரு தாய் தன் மகளைத் தேற்றுவாள்?!

தரத்தில் சராசரிக்கும் கீழே இடம்பெறவேண்டிய இக்கதை, தமிழின் சிறந்த சிறுகதைகளின் வரிசையில் முன்னிலை பெற்றது ஓர் அதிசயம் என்று சொன்னால் அதில் தவறேதும் இல்லை எனலாம்.

*****************************************************************************************************************************************************
22.04.2015 விகடனில் ஜெயகாந்தனின் இக்கதை மீள் பிரசுரம் செய்யப்பட்டுள்ளது.
*****************************************************************************************************************************************************













செவ்வாய், 14 ஏப்ரல், 2015

சறுக்கியவர் யார்? புத்தரா, வைரமுத்துவா? [20.04.2015 குமுதம் சிறுகதைக்கான விமர்சனம்]

‘புத்தருக்கும் அடிசறுக்கும்’ என்பது வைரமுத்துவின் இந்த வாரக் குமுதம் கதை. இதை ‘உருவகக் கதை’[?] என்கிறது குமுதம். அதற்கும்  அடிசறுக்கியிருக்கிறது!
‘சங்கல்பன்’ என்பவனின் தந்தை ‘பிக்கு’வாக மாறுகிறார். இதற்குக் காரணமாக இருந்தவர் புத்தரே என்று எண்ணி அவரைப் பழிவாங்க எண்ணுகிறான் அவன்; பொது மக்களும்  சீடர்களும் சூழ்ந்து நிற்க, அறவுரை நிகழ்த்திக்கொண்டிருந்த புத்தரின் மீது கூர்மையான ‘கத்திக் கருங்கல்’லை வீசுகிறான். 

புத்தரின் புருவப்பொட்டைத் தாக்கிக் குருதியில் நனைந்து புத்தரின் மடியில் விழுந்த அந்தக் கல் தங்கக் கட்டியாக மாறுகிறது. “மகனே, என்னைத் தொட்டதும் கல் தங்கமாயிற்று. ஏனென்றால் நான் புத்தநிலை அடைந்துவிட்டேன்.....” என்று சங்கல்பனிடம் சொல்கிறார் புத்தர். 

இது, கதையின் முற்பகுதியில் இடம்பெறும் நிகழ்வாகும்.

ஒரு கல் தங்கக் கட்டியாக மாறும்  அதிசயம் எப்படி நிகழ்ந்தது?

‘ரசவாதம்’ என்கிறார் கதாசிரியர் வைரமுத்து.

‘புத்தரின் மடியில் கிடந்த கல் புத்தரின் குருதியில் நனைந்து மெல்ல மெல்ல ரசவாதம் கண்டது. கல்லின் கருவண்ணப் புள்ளிகளில் பொன்னணுக்கள் பூத்தன. சற்று நேரத்தில் மொத்தக் கருங்கல்லும் தங்கக் கட்டியாய் மாறித் தகதகத்தது...’ என்பன வைரமுத்துவின் வைர வரிகள்.

புத்தர் என்றுமே தம்மை ஒரு தேவன் என்றோ, கடவுளின் அவதாரம் என்றோ கூறிக்கொண்டதில்லை[விக்கிப்பீடியா]. நடைமுறை வாழ்வு பற்றியே சிந்தித்தவர். அவர் வாழ்க்கையில் இப்படியொரு ரசவாதம் நிகழ்ந்தது என்று சொல்லும் துணிவு கவிஞருக்கு எப்படி வாய்த்தது?

கல் வீசிய சங்கல்பனிடமே கல்லை ஒப்படைக்கிறார் புத்தர். அவன் கை பட்ட பிறகும்கூட அது, கல்லாக மாறாமல் தங்கக் கட்டியாகவே இருக்கிறதாம். உன் மனமாசு கழிந்து நீயும் புத்தனாகிவிட்டாய். அதனால்தான் உன் கை பட்ட பிறகும் கல் தங்கமாகவே ஜொலிக்கிறது” என்கிறாராம் புத்தர்.

புத்தர் ஒரு பகுத்தறிவாளர் என்கிறது வரலாறு. கவிஞரின் கற்பனை அவரை ஒரு ரசவாதியாக ஜொலிக்க வைக்கிறது.

இத்துடன் முடித்திருந்தால் இது ஓர் ஒரு பக்கக் கதையாக வடிவம் பெற்றிருக்கக்கூடும். அதைத் தவிர்க்கிறார் கதாசிரியர்.

இடையிடையே புத்தரின் சில போதனைகளுக்குப் புதிய விளக்கவுரைகள் தருகிறார்.

“நீங்கள் பிராமண துவேஷியா?” என்று கூடியிருந்தவர்களில் ஒருவரைக் கேள்வி கேட்க வைக்கிறார்; “நான் எல்லா உயிர்களுக்கும் விசுவாசி” என்று புத்தரைப் பதில் சொல்ல வைக்கிறார். ஆமாம்...சொல்ல வைக்கிறார், தான் சொல்ல நினைத்ததை!

கதை நீளுகிறது.

கையில் மூட்டையுடன் ஓடி வருகிறான் ஓர் அழுக்கு மனிதன். அவனைத் திருடன் என்று சொல்லி ஓர் ஊர் மக்கள் விரட்டி வருகிறார்கள். 

அவனுக்குப் புகலிடம் தந்த புத்தர், “திருடனும் மனிதன்தான். மனிதனை மனிதன் கொல்வதற்கு அதிகாரம் இல்லை” என்கிறார்; ஜடாமுடியுடன் இருந்த அந்தத் திருடன்தான் தன் மீது கல் எறிந்த சங்கல்பன் என்பதையும் அறிகிறார்.

அவன் வைத்திருந்த மூட்டையில் தங்கக் கட்டி இருப்பதையும் காண்கிறார். தான் திருடனல்ல என்று சங்கல்பன் உறுதியளித்த பின்னர், தங்கக் கட்டியைப் புத்தர் தம் கையால் எடுக்க, அது கல்லாக மாறுகிறது.

இது, கதையில் நிகழ்ந்த இரண்டாவது ரசவாதம். இது நிகழ்ந்ததற்கான காரணத்தைப் புத்தர் வாயிலாகச் சொல்கிறார் கவிப்பேரரசு.

“நான் இவனைத் திருடன் என்று தவறாக நினைத்ததால் புத்தர் என்ற நிலையிலிருந்து திரிந்தேன். என் மனம் மாசு பட்டது. தங்கக் கட்டி கல்லாக மாறியது.”

புத்தர் ஒரு மனிதராகப் பிறந்து மனிதராகவே வாழ்ந்து மறைந்தவர்; தெய்வ நம்பிக்கை அற்றவர். ரசவாதம், மாயாஜாலம் போன்ற வித்தைகளை அறியாதவர். அவர் வாழ்க்கையில் ரசவாத அதிசயங்கள் நிகழ்ந்ததாகக் கதாசிரியர் கற்பனை செய்து கதை படைத்திருக்கிறார்.

இந்தப் படைப்பு, புத்தருக்குப் பெருமை சேர்க்கவில்லை; அவரை இழிவுபடுத்துகிறது.

புத்தர் மறைந்த பிறகு, அவர் வகுத்த வழியில் செல்வதாகச் சொல்லிக்கொண்டவர்கள் அவரையே கடவுளாக்கினார்கள். அந்த மூடர்களைக்கூட மன்னிக்கலாம்; அவரை ஒரு ரசவாதி ஆக்கிய வைரமுத்துவை மன்னிக்கவே முடியாது.

வைரமுத்து என்னை மன்னிப்பாராக.

=============================================================================================

பிழைகளுடன்[இரண்டு இடங்களில் ‘சருக்கி...’] பதிவைத் தமிழ்மணத்தில் இணைத்த எனக்கும் அடிசறுக்கிவிட்டது!!

‘சறுக்கியது யார்?’ என்பதும் பிழையே; ‘சறுக்கியவர் யார்?’ என்பதே சரி.

=============================================================================================





சனி, 11 ஏப்ரல், 2015

சாகா வரம் பெற்ற ‘சதை’ வணிகம்!


ணத்துக்காகவோ பிற பயன்களுக்காகவோ கொள்ளும் உடலுறவு ‘விபச்சாரம்’[சதை வணிகம்] எனப்படும். இதை, உலகின் பழைமையானதொரு தொழில் என்பார்கள்.[Prostitution is the business or practice of engaging in sexual relations in exchange for payment[1][2] or some other benefit. Prostitution is sometimes described as commercial sex.....It is sometimes also referred to as "the world's oldest profession" -Wikipedia


#இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எகிப்து, இந்தியா, பாபிலோனியா, கிறீஸ் ஆகிய நாடுகளில் விபச்சாரம் ஒரு தொழிலாக அங்கீகாரம் பெற்று விட்டது. மெஸபடோமியாவில் கி.மு.2300 இல் விலைமாதர்கள் மிகுந்த சுறுசுறுப்புடன் இத்தொழிலைச் செய்ததாகக் குறிப்புகள் உண்டு. 


ஏதென்ஸ் நாட்டில் சட்டமேதை ஸோலன், சிவப்புவிளக்குப் பகுதிகள் இயங்குவதற்குச் சட்டத்தில் வழிவகுத்தார். 


18ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் பால்வினைத் தொழில்(விபச்சாரம்) வெளிப்படையாகத் தலையெடுத்தது. அங்கு இராணுவத்துக்கும், பங்கு மார்க்கெட்காரர்களுக்கும்  பிரத்தியேகமாக விலைமாதர்கள் நியமிக்கப்பட்டார்கள். அவ்வகை விலைமாதர்களிடம் மற்றவர்கள் உறவுகொள்ள இயலாது.# - விக்கிப்பீடியா[தமிழ்]


அயல்நாடுகளில் ‘தொழில் வரி’ செலுத்தும் அளவுக்கு வருவாய் மிக்க தொழிலாக இது இருந்திருக்கிறது![Both women and boys engaged in prostitution in ancient Greece.[20] Female prostitutes could be independent and sometimes influential women. They were required to wear distinctive dresses and had to pay taxes]


‘நம் இந்தியத் திருநாட்டில் பாலியல் தொழிலாளர்களில் 40% சிறுமியர்கள்..’ என்பது நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்கும் செய்தியாகும்{.....A CBI statement said that studies and surveys sponsored by the ministry of women and child development estimated that about 40% of all India's prostitutes are children.[88]}


மேற்கண்ட தகவல்கள் இப்பதிவிற்கான ஒரு முன்னோட்டம்தான். காலந்தோறும் இத்தொழிலை ‘ஒழித்துக்கட்ட’ விதிக்கப்பட்ட தடைகள் குறித்தும், அவற்றைக் கடந்து இது வளர்ந்த விதம் குறித்தும் சேகரித்த தகவல்களின் தொகுப்பே இப்பதிவு.
*கி.மு.594 இல் ‘சாலோன்’ என்பவரால்[Solon (/ˈslɒn, ˈslən/; Greek: Σόλων; c. 638 – c. 558 BC) was an Athenian statesman, lawmaker] சட்டம் இயற்றப்பட்டு, விபச்சாரம் ஒரு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. ஏசு கிறிஸ்துவின் பிறப்புக்குப் பின்னர் 600 ஆண்டுகள்வரை அவை நடைமுறையில் இருந்தன; காலப்போக்கில் மறைந்தன.


*கி.பி 5ஆம் நூற்றாண்டில் இத்தொழிலைப் பரவவிடாமல் அடக்கி ஒடுக்க முனைந்தான் ஐஸ்டினியன் என்னும் மன்னன். ‘தியோடரா’ என்னும் பெயருடைய விலைமகளை மணந்து பிறருக்கு வழிகாட்டியாகவும் திகழ்ந்தானாம்!


*தியோடரா நல்ல புத்திசாலி. சீர்திருத்த மனம் கொண்டவள். ஒரே ஒரு நாள் இரவில் 500 விலைமகளிரைச் சிறையில் அடைத்தாள்; ஆடவர் நுழையாதவாறு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. விலைமகளிருக்கு முழுச் சுதந்திரம் வழங்கப்பட்டது.


அதன் பிறகு அதிர்ச்சிதரும் சம்பவங்கள் நடந்தன. சில பெண்கள் தற்கொலை செய்துகொண்டார்கள். பலரின் மனநிலை பாதிக்கப்பட்டது!


*13ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பிரெஞ்சு மன்னன் ஒன்பதாம் ‘லூயி’ அனைத்து விலைமகளிரையும் நாடு கடத்தினான். விபச்சாரத்துக்குத் துணைபோகும் நபர்களைச் சிறையில் தள்ளினான். அப்புறம்  நடந்தது?


காலப்போக்கில், புதிய புதிய விபச்சாரிகள் நகரில் நுழைந்துவிட்டார்கள்! மிகவும் ரகசியமாகத் தொழில் செய்தார்கள்.  சதை வணிகம் ஓஹோ என்று வளரத் தொடங்கியது!


*1347ஆம் ஆண்டில், சிசிலி நாட்டைச் சேர்ந்த அரசி ஜேன்1[13 வயது] மிகக் கடுமையான சட்டங்களை இயற்றினாள்.

அவை பின்வருமாறு:

1.சதை வணிகத்தில் ஈடுபடுபவர்கள், வலது தோளில் சிவப்பு முடிச்சு போட்ட அங்கியை அணிய வேண்டும். அவர்கள் வீதிகளில் நடமாடக்கூடாது. ஒதுக்கப்பட்ட விடுதிகளில் தங்கியிருக்க வேண்டும்.

2.குறிப்பிட்ட விடுதிகளில் தங்கியிருக்க ஆண்களுக்கு அனுமதி இல்லை. இன்னும் பல கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டன.

3.இந்த விதிகளை மீறும் குற்றவாளிகள், நாற்சந்தியில் நிறுத்தப்பட்டு சவுக்கால் விளாசப்படுவார்கள். தொடர்ந்து குற்றம் புரிபவர் நாடு கடத்தப்படுவார்.

4. ஒவ்வொரு சனிக்கிழமையும் மருத்துவரிடம் உடல் பரிசோதனை செய்துகொள்ளுதல் வேண்டும்.

5.வெள்ளி, சனி ஆகிய கிழமைகளில் தொழில் செய்தல் கூடாது.

6.யூதர்கள் விபச்சாரிகளை அணுகுதல் கூடவே கூடாது.

*ஆறாவது சார்லஸ் மன்னன் காலத்தில், பொது மகளிர் வெள்ளை நிற உடை உடுத்துக் கைகளில் வெள்ளை நிற ரிப்பன் கட்டியிருத்தல் கட்டாயம். இவர்கள் தெருவுக்கு வருவதாயின், இவர்களின் முன்னே ஒருவர் முரசறைந்து செல்ல வேண்டும். இவர்களுக்கு வருமான வரி விதிக்கப்பட்டு, அவ்வருமானம் மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்டது.


*ஐரோப்பிய நாடுகள் மட்டுமன்றி, இந்திய நாட்டிலும் கணிகையருக்கென்று தனிக் குடியிருப்புகள் இருந்தன. அவர்களுக்கென்று தனியே சட்டதிட்டங்கள் வகுக்கப்பட்டிருந்தன.


*தமிழகத்தில் ‘பொட்டுக் கட்டும்’ வழக்கம் வெகு பிரசித்தம். பொட்டுக்கட்டிய தேவதாசிகளைக் ‘கடவுளர் மனைவி’யாக்கிக் கோயில் குருக்களும் தர்மகர்த்தாக்களும் ஆசைதீர அனுபவித்தார்கள்.


*தாசி வீடுகளுக்குக் கடவுள் சிலைகளைக் கொண்டுபோகும் வழக்கம்கூட நடைமுறையில் இருந்ததுண்டு!


*1635ஆம் ஆண்டில், விலைமாதரின் தலைகளை மொட்டையடித்து நடுத்தெருவில் நிறுத்தி, சவுக்கால் அடிக்கும் வழக்கமெல்லாம் இந்த நாட்டில் இருந்திருக்கிறது.


மேற்கண்டவை போல எத்தனை எத்தனையோ சட்டங்கள் இயற்றப்பட்டு, சதை வணிகர்கள் தண்டிக்கப்பட்டும்கூட, ‘அந்த’த் தொழிலை அடியோடு ஒழித்துவிட இயலவில்லை. நாகரிகம், கலை, பக்தி போன்ற  போர்வைகள் போர்த்து, புதிய புதிய உத்திகளைக் கையாண்டு அது நாளும் வளர்க்கப்பட்டு வருகிறது.

*****************************************************************************************************************************************************

உதவி:

1.‘மதம், மாந்திரீகம், மருத்துவம்’, பா. கலைச்செழியன், பல்கலைப் பதிப்பகம், சென்னை. முதல் பதிப்பு, ஆகஸ்டு, 1999.

2. கூகிள்.

3. Wikipedia

*****************************************************************************************************************************************************