நடக்கவுள்ள தேர்தலில் வெற்றி வாகை சூடி, தொடர்ந்து ஆட்சிபீடத்தைத் தக்கவைக்க முயலும் மோடி, மேலும் பல சக்தியுள்ள ஆயுதங்களையும் மிகத் திறமையாகக் கையாள்கிறார்.
அவற்றில் சில:
*அமலாக்கத் துறை, வருமானவரித் துறை, சிபிஐ போன்ற உச்ச அதிகாரம் பெற்ற அமைப்புகளைப் பயன்படுத்தி, மாற்றுக் கட்சிக்காரர்களைத் தன் கட்சிக்கு இழுப்பது.
*அதே அமைப்புகளின் மூலம் பெரும் செல்வந்தர்களை மிரட்டிப் பணம்[நன்கொடை] பறிப்பதன் மூலம் தன் கட்சிக்கு[பாஜக]க் கோடி கோடி கோடியாச் சொத்துச் சேர்ப்பது.
*பணத்தாசை காட்டி, எந்தவொரு கூட்டணியிலும் நிரந்தர இடத்தைப் பெறாத, ‘உதிறி’க் கட்சித் தலைவர்களைத் தேர்தல் கூட்டாளிகளாக இணைத்துக்கொள்வது.
*அமைப்புகளின் மிரட்டலுக்குப் பணியாத மாற்றுக் கட்சித் தலைவர்கள் மீது, ஜாமீன் பெற இயலாத அளவுக்குக் கடும் ஊழல் குற்றச் சாட்டுகளைச் சுமத்திச் சிறையில் அடைப்பதன் மூலம், அவர்கள் சம்பந்தப்பட்ட மாற்றுக் கட்சிகளின் வெற்றி வாய்ப்பைப் பறிப்பது[தேர்தல் வருவதற்கு முன்பே சிறையில் அடைக்காதது கருத்தில் கொள்ளத்தக்கது].
*தேர்தல் ஆணையத்தின் மூலம் மாற்றுக் கட்சி வேட்பாளர்களை மன உளைச்சலுக்கு உள்ளாக்கி, வாக்குச் சேகரிப்பில் சுணக்கம் உண்டுபண்ணுவது.
*ரவுடிகளை அதிக எண்ணிக்கையில் உறுப்பினர்களாகச்[பாஜக] சேர்த்திருப்பதால், அவர்களைக் கொண்டு எதிரிகளான பிற கட்சியினர் பரப்புரையில் ஈடுபடும்போது உட்புகுந்து குழப்பம் விளைவிப்பது.
இவ்வாறாக,
வெகு எளிதாக வெற்றிக் கனியைப் பறிக்க, மோடி விதம் விதமான ஆயுதங்களை மிகச் சாதுர்யமாகப் பயன்படுத்திவருவது அறியத்தக்கது.
அவர் பயன்படுத்தாத மிக மிக மிகச் சக்தி படைத்த ஆயுதம் ‘ராணுவம்’ மட்டுமே!
வரம்பு கடந்து தனக்குள்ள அத்தனை அதிகாரங்களையும் அவர் பயன்படுத்துவதை எதிர்த்து, மக்கள் தொடர் கிளர்ச்சியில் ஈடுபடுவார்களேயானால், அப்போது மட்டுமே அவர்களை அடக்கி ஒடுக்கி, ஒற்றுமையைச் சிதைத்துச் சிறையில் தள்ளி வதைத்துக் கிளர்ச்சியை முறியடிக்க அந்த ஆயுதத்தைப் பயன்படுத்துவார் மோடி!