திங்கள், 15 ஏப்ரல், 2024

ஏனுங்க மோடி, அதென்னங்க திருவள்ளுவர் கலாச்சாரம்!?!?

திருவள்ளுவரின் புகழ் பரப்ப மோடி உறுதிபூண்டிருக்கிறார் என்பது செய்தி[படம் கீழே]. 

என்ன செய்வதாக உறுதிபூண்டிருக்கிறார்?

உலகம் முழுவதும் ‘திருவள்ளுவர் கலாச்சார மையங்கள்’ உருவாக்குவாராம்.

திருவள்ளுவர்... சரி, அதென்ன திருவள்ளுவர் கலாச்சாரம்?

திருவள்ளுவர் அமைதியான வாழ்க்கைக்குத் தேவையான அறநெறிகளைத் திருக்குறள் மூலம் அறிவுறுத்தியவர்; வலியுறுத்தியவர்.

கலாச்சாரம் என்பது இனத்துக்கு இனம் மாறுபடுவது. நிறைகளுடன் குறைகளையும் உள்ளடக்கியது. வள்ளுவர் வகுத்த நெறி ஒட்டுமொத்த உலகுக்கும் பொதுவானது; மாறுபாடுகளுக்கும் குறைகளுக்கும் இடம்தராதது.

இவையே வள்ளுவரின் சிறப்புகளாக இருக்க, மோடி, ‘வள்ளுவர் கலாச்சாரம்’ என்று எதைச் சொல்லுகிறார்?

அவருக்கே தெரியாது. இப்படியெல்லாம் அறிவிப்புச் செய்து தமிழர்களை எளிதில் ஏமாற்றி ஓட்டு வாங்கலாம் என்று அவருக்குச் சொல்லிக்கொடுத்த அறிஞர் அண்ணாமலை முதலான மோடியின் சதியாலோசகர்களுக்கும் தெரியாது.

‘கலாச்சார மைய உருவாக்கம்’ பற்றிச் சொன்னதோடல்லாமல், அந்த மையத்தின் செயல்பாடுகளுக்கு ஒரு சிறு பட்டியல் தந்திருக்கிறாரே, அங்குதான் அவரின் போலி ‘வள்ளுவர் பக்தி’ அம்பலமாகிறது.

பாரதத்தின் பாரம்பரிய யோகா, பாரதத்தின் மொழிகள்[இந்திக்கு முதலிடம். செத்த மொழி சமஸ்கிருதத்திற்கு இரண்டாம் இடம்], இசை ஆகியவை இந்த மையத்தின் மூலம் உலகெங்கும் பரப்பப்படும் என்கிறார் அவர்.

திருவள்ளுவர் மையத்தின் மூலம் திருக்குறளின் சிறப்புகளை உலகறியச் செய்யும் வழிகள் குறித்தும், அதற்குத் தமிழ் மொழியை எவ்வாறெல்லாம் செப்பனிட்டுப் பயன்படுத்தலாம் என்பது பற்றியும் சொல்லாமல், இந்திய மொழிகளையும் யோகாவையும் இசையையும் பரப்புகிறாராம்.

தமிழின வரலாற்றில் இந்த மோடியைப் போல் தமிழர்களை இளிச்சவாயர்களாக ஆக்க முயன்ற தலைவர் எவருமே இல்லை.

‘வஞ்சித்தல்’ > ஏமாற்றுதல். ஏமாற்றுபவர் > வஞ்சகர்.

நயமாகப்[நல்லது செய்வதாகப்] பேசி ஏமாற்றுபவர் நயவஞ்சகர்.