எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

வெள்ளி, 31 ஜனவரி, 2025

‘லட்சுமி’ சாமிக்கும் கோயில் கட்டுங்க பிரதமரே!!!

#ழைகளுக்குத் தேவையான செல்வங்களை வழங்க லட்சுமி தேவி[கடவுள் ராமச்சந்திர மூர்த்தியின் துணைவியார்]யைப் பிரார்த்தனை செய்வதாகப் பார்லிமென்ட் வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த PM மோடி கூறினார்#[https://www.kuttramkuttrame.com/2025/01/31/i-want-the-poor-to-get-wealth-modi/].

உலகெங்கும் பக்தி நெறி பரப்புவதற்கென்றே இவ்வுலகுக்கு அனுப்பப்பட்ட, கடவுளின் மறு பிரதியான அருள்மிகு மோடிப் பெருமகனார், நம் நாட்டிலுள்ள கோடானுகோடி எழைகளுக்கு அனைத்துச் செல்வங்களையும் வாரி வாரி வழங்குமாறு லட்சுமி தேவியைப் பிரார்த்தனை செய்திருப்பது நம் நெஞ்சங்களில் குடம் குடமாக அமிழ்தத்தை இட்டு நிரப்பியிருக்கிறது.

வேண்டிக்கொண்டதோடு அமையாமல், கோடி கோடி கோடிகள் செலவில், பாலராமருக்குக் கோயில் கட்டி பெருந்தொண்டு புரிந்தது போல், லட்சுமி தேவிக்கும் அதனினும் பன்மடங்கு கூடுதல் செலவில் கோயில் எழுப்பித் தெய்வத் திருப்பணி ஆற்றிட வேண்டும் என்று அன்னாரின் திருவடி தொழுது வேண்டுகோள் வைக்கிறோம்.

வாழ்க அருளாளர் மோடி! தொடர்க அவரின் தெய்வத் திருப்பணி!!


சீமானின் அடுத்தப் ‘புதிய’ கட்சி ‘நாம் நாடார்’!!!

ரோடு சட்டமன்ற இடைத் தேர்தல் பரப்புரையில், பெரியாரை மிக அசிங்கமாகவும் ஆபாசமாகவும் பழிதூற்றும் தமிழினத்தின் எதிரியான நச்சு மனத்தவன்[பெரியாரை அவமரியாதை செய்யும் இவனுக்கு மரியாதை தருவது தவறு] சீமான், கலைஞர் கருணாநிதியின் மகளான கனிமொழி குறித்துக் கருத்துத் தெரிவிக்கையில், அவரை ‘நாடார்’ சாதியுடன்[இவனின் சாதி] தொடர்புபடுத்தியிருக்கிறான்[https://tamil.oneindia.com]

இவனைக் கூலிக்காரன் என்ற கனிமொழியை, ‘கூலிக்காரி’ என்றோ வேறு அடைமொழி கொடுத்தோ சாடியிருக்கலாம். அதை விடுத்து, அவசியமே இல்லாமல் தன் சாதியை[நாடார்] அவருடன் தொடர்புபடுத்தியிருக்கிறான் இவன்*.

உள்நோக்கத்துடன் இந்த இழிசெயலைச் செய்த இவன், ஈரோடு தேர்தலில் இவன் கட்சி படுதோல்வி அடையுமேயானால், பெரியாரை மிகக் கீழ்த்தரமாக விமர்சித்ததால் தமிழர்கள் இவனுக்குப் பாடம் கற்பித்தார்கள் என்பதைப் புரிந்துகொள்வான்.

இனியும் ‘தமிழ், தமிழர்’ என்று கூவித் திரிவதால் பயன் ஏதும் இல்லை என்பதைப் புரிந்துகொண்டு, ‘நாம் நாடார்’ என்னும் பெயரில் ஒரு புதியக் கட்சி தொடங்கி, அநாகரிக அரசியல் நடத்துவான் இவன் என்று உறுதிபடச் சொல்லலாம்.

இவனை ஏற்கனவே புரிந்துவைத்திருக்கும் நாடார் இன மக்கள் இவனை ஆதரிக்க மாட்டார்கள் என்பதால்.....

அடுத்த முயற்சியாக, ‘நாம் கிறிஸ்தவர்’ என்னும் பெயரில் ஒரு புதிய கட்சியை இவன் தொடங்குவான் சைமன் என்னும் கிறித்தவனாக.

ஒரு கிறித்தவனாக இருந்தும் தேர்தல்களில் ஓட்டுப் பொறுக்குவதற்காக, நெற்றியில் திருநீறு பூசிப் பொட்டு வைத்து மக்களை முட்டாள்கள் ஆக்கும் இவனின் பச்சோந்தித்தனத்தைக் கிறித்தவர்கள் நன்கு அறிந்திருப்பதால் அவர்களிடமும் இவனின் ‘பருப்பு’ வேகாது.

அப்புறம்.....

வேற்று வழியே இல்லாமல், ‘நாம் பைத்தியம்’ என்னும் பெயரில் கட்சி ஆரம்பித்து, தேர்தல் வரும்போதெல்லாம் மேடையேறி, கை தட்டிச் சொடக்குப் போட்டு, முஷ்டி உயர்த்தி, “ஆதரிப்பீர் பைத்தியங்களை” என்று வெறிக் கூச்சல் எழுப்பிக் கூடியிருப்போருக்கு வேடிக்கை காட்டித் திரிவான் இந்தக் கோமாளி என்பதில் கிஞ்சித்தும் சந்தேகத்திற்கு இடமில்லை!

* * * * *

*பெரியார் விவகாரத்தில் சீமானை மறைமுகமாகக் கூலிக்காரர் என்று கனிமொழி எம்.பி., விமர்சித்திருந்தார். இதற்கு, ‛‛உங்க அப்பா தான் பெரிய கூலி. சாதி ஒழிப்பு, தீண்டாமை ஒழிப்பு உன் கொள்கை என்றால் நீ ஏன் தூத்துக்குடியில் 2 முறை போட்டியிட்டாய்? கனிமொழி நாடார் என்றால் உதயநிதி ஸ்டாலின், முக தமிழரசு எல்லாரும் நாடார்தானே. ஒரு அப்பாவுக்கு 2 ஜாதி இருக்குமா?'' என்று காட்டமாகத் தெரிவித்துள்ளார்[https://tamil.oneindia.com/news/erode/what-is-the-caste-of-kanimozhi-seeman-asks-675757.html]