வெள்ளி, 31 ஜனவரி, 2025

‘லட்சுமி’ சாமிக்கும் கோயில் கட்டுங்க பிரதமரே!!!

#ழைகளுக்குத் தேவையான செல்வங்களை வழங்க லட்சுமி தேவி[கடவுள் ராமச்சந்திர மூர்த்தியின் துணைவியார்]யைப் பிரார்த்தனை செய்வதாகப் பார்லிமென்ட் வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த PM மோடி கூறினார்#[https://www.kuttramkuttrame.com/2025/01/31/i-want-the-poor-to-get-wealth-modi/].

உலகெங்கும் பக்தி நெறி பரப்புவதற்கென்றே இவ்வுலகுக்கு அனுப்பப்பட்ட, கடவுளின் மறு பிரதியான அருள்மிகு மோடிப் பெருமகனார், நம் நாட்டிலுள்ள கோடானுகோடி எழைகளுக்கு அனைத்துச் செல்வங்களையும் வாரி வாரி வழங்குமாறு லட்சுமி தேவியைப் பிரார்த்தனை செய்திருப்பது நம் நெஞ்சங்களில் குடம் குடமாக அமிழ்தத்தை இட்டு நிரப்பியிருக்கிறது.

வேண்டிக்கொண்டதோடு அமையாமல், கோடி கோடி கோடிகள் செலவில், பாலராமருக்குக் கோயில் கட்டி பெருந்தொண்டு புரிந்தது போல், லட்சுமி தேவிக்கும் அதனினும் பன்மடங்கு கூடுதல் செலவில் கோயில் எழுப்பித் தெய்வத் திருப்பணி ஆற்றிட வேண்டும் என்று அன்னாரின் திருவடி தொழுது வேண்டுகோள் வைக்கிறோம்.

வாழ்க அருளாளர் மோடி! தொடர்க அவரின் தெய்வத் திருப்பணி!!