ஈரோடு இடைத் தேர்தலுக்கு மிகச் சில நாட்களே உள்ள நிலையில், இதைப் படித்த பிறகேனும் பெரியார் எதிர்ப்புப் போதையிலிருந்து விடுபட்டு, நிதானப் புத்தியுடன் வாக்குச் சேகரிப்பில் ஈடுபடுவான் சீமான் என்னும் நப்பாசையில் பகிரப்படுகிறது இப்பதிவு[நன்றி: ராம், ரஹீம், ராபர்ட்> Quora].
//சமூகச் சீர்திருத்தத்திற்காகவும், சாதியை அகற்றுவதற்காகவும், மூட நம்பிக்கைகளைக் களைவதற்காகவும், பெண் விடுதலைக்காகவும், அவர் போராட்டங்களை மேற்கொண்டபோது, இவை அத்தனையும் கடவுளோடு முடிச்சுப் போடப்பட்டிருப்பதைக் கண்டார். கடவுள் நம்பிக்கையை ஒழித்தாலன்றி இந்த இழிநிலைகளை அகற்ற இயலாது என்பதை உணர்ந்து செயல்படலானார்.
சாதி, தீண்டாமை, அடக்குமுறை, உயர்ந்தவன் தாழ்ந்தவன் எனப்படும் ஏற்றத்தாழ்வு என்றிவை கடவுள் பெயரால் கடவுள் சொன்னதாகவே மக்கள் மீது திணிக்கபட்டிருந்தன.
தாழ்த்தபட்டவனுக்குப் பிள்ளை பிறக்கும்பொழுது தாழ்த்தப்பட்டவனாகவே பிறக்கிறான். இப்படிக் கடவுளே சொல்கிறாராம்.
‘உயர்ந்த ஜாதிக்காரன்’ எனப்பட்டவன் தாழ்த்தப்பட்ட பெண்ணோடு உறவு கொண்டு குழந்தை பிறந்தால், அந்த பிள்ளைக்குச் சண்டாளன் என்ற அடையாளம் கொடுக்கபட்டது. இதற்குக் கடவுளால் அசரீரியாகச் சொல்லப்பட்ட வேதத்தையே[அண்டப்புளுகு] ஆதாரமாகக் காட்டினார்கள்.
சண்டாளன் என்னும் சமஸ்கிருத வார்த்தைக்குப் பிணம் எரிப்பவன் என்று பொருள்.
வயசுப் பெண்களைப் பொட்டுக்கட்டித் தேவதாசிகளாகக்[தேவதாசிகள் எவனெவனுக்கோ தாசிகள் ஆனது தனிக்கதை] கோயிலுக்கு விடுதல் வேண்டும் என்று சொன்னதும் கடவுளால் அருளப்பட்ட வேதங்கள்தானாம்.
பெண்கள் அரை நிர்வாணமாகத் திரிய வைக்கப்பட்டதும்[அந்தச் சாதிப் பெண்கள் எவர் என்பது சங்கிகளின் அடிமையான சீமானுக்குத் தெரியாமலிருக்க வாய்ப்பில்லை] கடவுளின் பெயரால்தான்.
சேர நாட்டில்[தமிழ்நாட்டிலும்தான்], ஒவ்வொரு வீட்டிலும் ‘பருவம் அடைந்த பெண் திருமணம் ஆனவுடன், முதலில் குறிப்பிட்ட உயர்ந்த சாதிக்காரனோடு[மிட்டா, மிராசு, ஜமீன்] உடல் உறவில் ஈடுபட்டு முதல் பிள்ளை பெற்ற பிறகுதான் கணவனோடு சேர வேண்டும்’ என்பதும் கடவுளின் பெயரால் திணிக்கப்பட்ட வழக்கங்களில் ஒன்று. கடவுளின் பெயரால் நிகழ்த்தப்பட்ட அட்டூழியமும் ஆகும்.
இந்தப் பழக்கத்தை மீறும் எந்த ஒரு பெண்ணும் கடவுளுக்குத் துரோகம் செய்துவிட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டுக் கொல்லபட்டாள்.
கடவுள் சொன்னதாகக் கதைகள் கட்டி, மேற்கண்டவை போன்ற மிகக் கொடூர நிகழ்வுகளுக்கு வழி வகுத்த அயோக்கியர்களையும், அவர்களால் கற்பிக்கப்பட்ட கடவுள்களையும் சாடுவதன் மூலம் சாமானியர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தியவர் பெரியார்[இன்னும் இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம். பட்டியல் நீளும்].
அந்தப் பெரியாரைத்தான், சங்கிகளிடம் கையூட்டுப் பெற்றுக்கொண்டு, ஈரோட்டில் தெருத்தெருவாகப் பொய்யுரைத்து இழிவுபடுத்தித் திரிகிறான் சீமான் என்னும் இழிகுணத்தவன்.