எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

செவ்வாய், 15 ஏப்ரல், 2025

“செருப்புப் போடமாட்டேன்”... சபதம் செய்த[மோடி பிரதமராகும்வரை] ஹரியானா பைத்தியம்!!!

‘கப்ஸா’ என்னும் அரபுச் சொல்லுக்கு, ‘மெய் என்று நம்பும் வகையில் பேசும் பொய்’ என்று பொருள்.

இதற்கு உதாரணம் தேடி நீங்கள் எங்கும் அலையவே வேண்டாம். தொடர்ந்து வாசியுங்கள்.

திமுக ஆட்சியை அகற்றும்வரை செருப்புப் போடமாட்டேன் என்று நம்ம ஊர்க் கிறுக்கன் அண்ணாமலை சபதம் செய்தது போல,  மோடியின் தீவிர ரசிகனான ராம்பால் காஷ்யப் என்பவன்[ஹரியானாவின் கைதல் மாவட்டத்தைச் சேர்ந்தவன்]. 'மோடி இந்தியாவின் பிரதமரான பிறகு அவரைச் சந்திப்பேன். அப்போதுதான் காலணிகளை அணிவேன்; அதுவரை காலணிகளை அணிய மாட்டேன்" என்று சபதம்[2011இல் சபதம்> 2025வரை>14 ஆண்டுகளாகச் செருப்பணியவில்லை] செய்தானாம்[https://www.vikatan.com].

இவனின் இந்தச் சபதம் ஏற்கத்தக்கதுதான்.

ஆனால்.....

மோடி முதன்முதலாக 2014இல் இந்தியாவின் பிரதமராகப் பதவி ஏற்றபோதே இந்த ‘மெண்டல்’ காலணி அணிந்திருக்கலாம். அல்லது, மோடியால் பாராட்டப்பட வேண்டும் என்று ஆசைப்பட்டிருந்தால் அதையும் நிறைவேற்றியிருக்கலாம்{தகவல் தெரிந்ததும் இவரின் வீடு தேடி ஓடிவந்து தன்னுடைய பொற்கரங்களாலேயே[கடவுளால் அனுப்பப்படவரின் கை சாதாரண மனிதக் கையா என்ன?] அவனுக்குக் காலணி அணிவித்திருப்பார்}.

இப்படியான நிகழ்வு ஏதும் நடைபெறவில்லை.

மாறாக.....

2011ஆம் ஆண்டிலிருந்து வெறும் காலுடனேயே இருந்துவந்த இந்த ஆளுக்கு[ராம்பால் காஷ்யப்], ஹரியானவின் யமுனா நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட[2025இல்] பிறகு, மோடி புதிய ஷூவை வழங்கி “இனி இதுபோல செய்யக் கூடாது” என்று கண்டித்தாராம்[மனப்பூர்வமாக அல்ல; இம்மாதிரியான அடிமுட்டாள்கள்தானே அவருக்குத் தேவை].

2014இல் நடைபெற வேண்டிய இந்த நிகழ்ச்சி, 11 ஆண்டுகள் காலதாமதமாக 2025இல் இடம்பெற்றுள்ளது.

இந்தக் காலதாமதமே ‘பாஜக’ சங்கிகளின் திட்டமிட்ட நாடகம் இது என்பதை அம்பலப்படுத்தியிருக்கிறது.

மூடநம்பிக்கைகளை வளர்த்தும், அடுக்கடுக்காய் மக்களிடையே இட்டுக்கட்டிய பொய்களைப் பரப்பியும் ஆட்சியைக் கைப்பற்றும் இந்தப் பொய்யர்கள் அரசியல் களத்திலிருந்து விரட்டியடிக்கப்படுவது எப்போது?

* * * * *

https://www.vikatan.com/government-and-politics/modi-criticizes-volunteer-who-went-14-years-without-wearing-shoes

தலைவனின்[மோடி] தந்திரம் தொண்டனின்[அண்ணாமலை] மந்திரம்!!!

பொதுமக்களுக்குப் பணி செய்வதே ஓர் அரசியல்வாதியின் தலையாய கடமையாகும்.

தனக்கானதும் தன்னைச் சார்ந்துள்ள சொந்தபந்தங்களுக்கானதுமான பணிகளைச் செய்வதும் அவருக்குள்ள பிற கடமைகள்தான். ஆனால், இவற்றைப் பொதுமக்கள் அறியும் வகையில்{சுற்றுலாச் செல்வது, கோயிலுக்குப் போவது, பொது இடங்களில் நூற்றுக்கணக்கானவர்கள் மத்தியில் தியானம்[மூச்சுப் பயிற்சி&உடற்பயிற்சி போன்றவற்றால் பயனுண்டு; தியானத்தால் பயன் ஏதுமில்லை] என்னும் பெயரில் ‘பந்தா’ பண்ணுவது போன்றவை} அவர்கள் செய்தல் கூடாது.

{அவதாரி[கடவுள் அவதாரம்] மோடியின் சீடர் அண்ணாமலையார் திருவடி போற்றி!}

இவற்றைத் தவறுகள் என்பதைக் காட்டிலும் மன்னிக்கத் தகாத குற்றங்கள் என்பதே பொருந்தும்.

இம்மாதிரிக் குற்றங்களைச் சர்வ அதிகாரம் படைத்த மோடி செய்வதை[உலகம் அறிந்திட மோடி கையாளும் தந்திரமும்கூட] ஒட்டுமொத்த உலகமும் அறியும்.

மோடியின் ஆயுட்கால அடிமைகளில் முதல்நிலை வகிக்கும் அண்ணாமலை தன் தலைவனான மோடியின் மேற்கண்ட தந்திர உத்தியைத் தனக்கான ‘செயலூக்கி மந்திரமாக’ ஏற்றிருக்கிறார் என்பதைக் கீழ்க்காணும் ஒரு நிகழ்வு உறுதிப்படுத்துகிறது.

#ஆன்மீகப் பயணமாக இமயமலை சென்றுள்ள பாஜக தேசியப் பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை, ஸ்ரீ ஸ்ரீ மகாவதார் பாபாஜி குகையில் தியானம் செய்தார்# [தினத்தந்தி].

இந்தக் கொத்தடிமையைத் தமிழ்நாடு ‘பாஜக’ தலைவர் பதவியிலிருந்து நீக்கியதன் தீய விளைவு இதுவாகும்..

‘திமுக’ ஆட்சி மீது குற்றங்கள் கண்டுபிடித்துப் பட்டியலிடுவது, அடுக்கடுக்காய்ப் பொய்கள் பேசுவது, பொது இடங்களில் சவுக்கால் அடித்துக்கொண்டு சபதம் ஏற்பது போன்றவற்றை முழுநேரக் கடமையாகச் செய்துகொண்டிருந்தவருக்கு வேறு வேலை எதுவும் இல்லாததால், மேற்கண்ட தன் தன்னிகரில்லாத் தலைவனின் வழியைப் பின்பற்றத் தொடங்கியிருக்கிறார்.

இதை இவர் தவிர்க்க வேண்டுமாயின், திமுக உள்ளிட்ட எதிர்க் கட்சிகளை வசைபாடுவதற்கும், சவால்கள் விடுவதற்கும், சபதங்கள் ஏற்பதற்கும் வசதியாக மீண்டும் தமிழ்நாடு ‘பாஜக’ தலைவராக அண்ணாமலையையே நியமிக்கலாம்[பாஜக தலைமை, நயினார் நாகேந்திரனுக்கு  வேறு நல்ல பதவி கொடுத்துச் சமாளிக்கலாம்].

அடியேனின் இந்த ஆசை நிறைவேற, பரலோகத்திலிருந்து இந்த நரகலோகத்திற்கு மோடியை அனுப்பி வைத்த எல்லாம் வல்ல இறைவன் கருணை காட்டுவாராக!

  * * * * *

https://www.dailythanthi.com/news/tamilnadu/annamalai-meditation-in-sri-mahavatar-babajis-cave-1152732?utm_source=newsshowcase&utm_medium=gnews&utm_campaign=CDAqKggAIhBAUQ6VKwIUuERCN2qDtgZWKhQICiIQQFEOlSsCFLhEQjdqg7YGVjDto8AD&utm_content=rundown