பொதுமக்களுக்குப் பணி செய்வதே ஓர் அரசியல்வாதியின் தலையாய கடமையாகும்.
தனக்கானதும் தன்னைச் சார்ந்துள்ள சொந்தபந்தங்களுக்கானதுமான பணிகளைச் செய்வதும் அவருக்குள்ள பிற கடமைகள்தான். ஆனால், இவற்றைப் பொதுமக்கள் அறியும் வகையில்{சுற்றுலாச் செல்வது, கோயிலுக்குப் போவது, பொது இடங்களில் நூற்றுக்கணக்கானவர்கள் மத்தியில் தியானம்[மூச்சுப் பயிற்சி&உடற்பயிற்சி போன்றவற்றால் பயனுண்டு; தியானத்தால் பயன் ஏதுமில்லை] என்னும் பெயரில் ‘பந்தா’ பண்ணுவது போன்றவை} அவர்கள் செய்தல் கூடாது.
இவற்றைத் தவறுகள் என்பதைக் காட்டிலும் மன்னிக்கத் தகாத குற்றங்கள் என்பதே பொருந்தும்.
இம்மாதிரிக் குற்றங்களைச் சர்வ அதிகாரம் படைத்த மோடி செய்வதை[உலகம் அறிந்திட மோடி கையாளும் தந்திரமும்கூட] ஒட்டுமொத்த உலகமும் அறியும்.
மோடியின் ஆயுட்கால அடிமைகளில் முதல்நிலை வகிக்கும் அண்ணாமலை தன் தலைவனான மோடியின் மேற்கண்ட தந்திர உத்தியைத் தனக்கான ‘செயலூக்கி மந்திரமாக’ ஏற்றிருக்கிறார் என்பதைக் கீழ்க்காணும் ஒரு நிகழ்வு உறுதிப்படுத்துகிறது.
#ஆன்மீகப் பயணமாக இமயமலை சென்றுள்ள பாஜக தேசியப் பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை, ஸ்ரீ ஸ்ரீ மகாவதார் பாபாஜி குகையில் தியானம் செய்தார்# [தினத்தந்தி].
இந்தக் கொத்தடிமையைத் தமிழ்நாடு ‘பாஜக’ தலைவர் பதவியிலிருந்து நீக்கியதன் தீய விளைவு இதுவாகும்..
‘திமுக’ ஆட்சி மீது குற்றங்கள் கண்டுபிடித்துப் பட்டியலிடுவது, அடுக்கடுக்காய்ப் பொய்கள் பேசுவது, பொது இடங்களில் சவுக்கால் அடித்துக்கொண்டு சபதம் ஏற்பது போன்றவற்றை முழுநேரக் கடமையாகச் செய்துகொண்டிருந்தவருக்கு வேறு வேலை எதுவும் இல்லாததால், மேற்கண்ட தன் தன்னிகரில்லாத் தலைவனின் வழியைப் பின்பற்றத் தொடங்கியிருக்கிறார்.
இதை இவர் தவிர்க்க வேண்டுமாயின், திமுக உள்ளிட்ட எதிர்க் கட்சிகளை வசைபாடுவதற்கும், சவால்கள் விடுவதற்கும், சபதங்கள் ஏற்பதற்கும் வசதியாக மீண்டும் தமிழ்நாடு ‘பாஜக’ தலைவராக அண்ணாமலையையே நியமிக்கலாம்[பாஜக தலைமை, நயினார் நாகேந்திரனுக்கு வேறு நல்ல பதவி கொடுத்துச் சமாளிக்கலாம்].
அடியேனின் இந்த ஆசை நிறைவேற, பரலோகத்திலிருந்து இந்த நரகலோகத்திற்கு மோடியை அனுப்பி வைத்த எல்லாம் வல்ல இறைவன் கருணை காட்டுவாராக!
* * * * *