‘கப்ஸா’ என்னும் அரபுச் சொல்லுக்கு, ‘மெய் என்று நம்பும் வகையில் பேசும் பொய்’ என்று பொருள்.
இதற்கு உதாரணம் தேடி நீங்கள் எங்கும் அலையவே வேண்டாம். தொடர்ந்து வாசியுங்கள்.
திமுக ஆட்சியை அகற்றும்வரை செருப்புப் போடமாட்டேன் என்று நம்ம ஊர்க் கிறுக்கன் அண்ணாமலை சபதம் செய்தது போல, மோடியின் தீவிர ரசிகனான ராம்பால் காஷ்யப் என்பவன்[ஹரியானாவின் கைதல் மாவட்டத்தைச் சேர்ந்தவன்]. 'மோடி இந்தியாவின் பிரதமரான பிறகு அவரைச் சந்திப்பேன். அப்போதுதான் காலணிகளை அணிவேன்; அதுவரை காலணிகளை அணிய மாட்டேன்" என்று சபதம்[2011இல் சபதம்> 2025வரை>14 ஆண்டுகளாகச் செருப்பணியவில்லை] செய்தானாம்[https://www.vikatan.com].
இவனின் இந்தச் சபதம் ஏற்கத்தக்கதுதான்.
ஆனால்.....
மோடி முதன்முதலாக 2014இல் இந்தியாவின் பிரதமராகப் பதவி ஏற்றபோதே இந்த ‘மெண்டல்’ காலணி அணிந்திருக்கலாம். அல்லது, மோடியால் பாராட்டப்பட வேண்டும் என்று ஆசைப்பட்டிருந்தால் அதையும் நிறைவேற்றியிருக்கலாம்{தகவல் தெரிந்ததும் இவரின் வீடு தேடி ஓடிவந்து தன்னுடைய பொற்கரங்களாலேயே[கடவுளால் அனுப்பப்படவரின் கை சாதாரண மனிதக் கையா என்ன?] அவனுக்குக் காலணி அணிவித்திருப்பார்}.
இப்படியான நிகழ்வு ஏதும் நடைபெறவில்லை.
மாறாக.....
இந்தக் காலதாமதமே ‘பாஜக’ சங்கிகளின் திட்டமிட்ட நாடகம் இது என்பதை அம்பலப்படுத்தியிருக்கிறது.
மூடநம்பிக்கைகளை வளர்த்தும், அடுக்கடுக்காய் மக்களிடையே இட்டுக்கட்டிய பொய்களைப் பரப்பியும் ஆட்சியைக் கைப்பற்றும் இந்தப் பொய்யர்கள் அரசியல் களத்திலிருந்து விரட்டியடிக்கப்படுவது எப்போது?
* * * * *