எனது படம்
அனைத்துப் போதைகளைவிடவும் ‘அதிகாரப் போதை’ மிக மிக மிக ஆபத்தானது. நம் பிரதமர் மோடி இதிலிருந்து விடுபடாவிட்டால், ஒன்றுபட்டிருக்கும் நம் இந்தியாவைச் சிதைத்துச் சிதறடித்த ‘பெருமை’க்குரியவராக அவர் ஆவார். ‘பாரத மாதா’வின் சாபத்துக்கும் அவர் ஆளாகக்கூடும்!

சனி, 28 பிப்ரவரி, 2026

அடங்காத காமமும் அடக்கப்படாத காமுகர்களும்!!!

மேற்கண்ட செய்தியை வாசிக்கும்போது நம்மில் பெரும்பாலோர், “இவனையெல்லாம் உலகறியப் பொதுவிடத்தில் அம்மணப்படுத்தி, ஒவ்வொரு உறுப்பாய்ச் சிதைத்துச் சித்திரவதை செய்து சாகடித்தால்தான், பச்சிளஞ் சிசுக்களைப் பலாத்காரம் செய்யும் கொடூரங்கள் நிகழ்வதைத் தடுக்க இயலும்” என்று சொல்ல நினைப்போம்.

மாறுபட்டக் கருத்துக்கு இடமில்லைதான்.

ஆனாலும், மனிதர்கள் இப்படி மிருகங்களாக ஆவது ஏன் என்னும் கேள்வி தவிர்க்க இயலாதது.

கள்ளங்கபடம் இல்லாத குழந்தைகளின் அழுகையும் சிரிப்பும் ஆனந்தப் பரவசத்தில் ஆழ்த்துமே தவிர, விபரீத இச்சையைத் தூண்டுவது எப்படி?


இவன்களின் மரபணுவில் குறைபாடா?


பெற்றோரின் வளர்ப்பு முறையில் நிகழ்ந்த தவறுகளா?


பக்குவப்படாத/படுத்தப்படாத மனமா?


தனிமனித  ஒழுக்கத்தில் அக்கறை காட்டாத சமுதாயமா? அரசாங்கமா?


இவனைப் போன்றவர்களுக்கு விலைமாதரை நாடிப்போய் இச்சை தணிக்கக் குறைந்தபட்ச வசதிகூட இல்லையா?


அடிக்கடி ஆபாசப் படங்கள் பார்ப்பதால் இவன்களின் குருதியில் காமம் இரண்டறக் கலந்துகிடக்கிறதா?


அனைத்திற்கும் மேலாக,  மனிதர்களை இவ்வாறான நாசகாரச் செயல்களில் ஈடுபடுத்தி வேடிக்கை பார்ப்பது கடவுளின் விருப்பமா?


சிசுக்களை வன்புணர்வு செய்தல் என்றில்லை, மனித இனத்தவர் செய்யும் பெரும்பாலான படு பயங்கரக் குற்றச் செயல்களுக்கு அடங்காத காமமே காரணமாக உள்ளது. 


இதைக் கட்டுப்படுத்தவும் முறைப்படுத்தவுமான நடவடிக்கைகளில், ஒட்டுமொத்த உலக நாடுகளும் அதீதக் கவனம் செலுத்துவது காலத்தின் தேவை.