கடவுள் என்று ஒருவர் இருந்தால்.....
என்றேனும் ஒரு நாள் நேரில் தோன்றுவாரா?
தோன்றினால் நாம் அவரை நம்புவோமா? மாட்டோம். ஏனென்றால்.....
ஆடு ஆடுதான். மாடு மாடுதான். புழு, பூச்சி, மரம், மட்டை, காற்று, வெப்பம் என்று எதுவானாலும் அது அதுவாகத்தான் நினைக்கப்படும். அது கடவுளே என்று தலையில் அடித்துச் சத்தியம் செய்தாலும் எவரும் நம்பப் போவதில்லை.
ஒரு வகையில், பேய், பிசாசு, ஆவி போன்றவைகளை நம்புவதும் கடவுளை நம்புவதும் ஒன்றுதான்.
பேய் அடித்ததாகச் சொல்கிறார்கள். நம்புவது எப்படி?
கை என்னும் உறுப்பு[புலன்] இல்லாமல் பேய் நம்மை அடிப்பது எவ்வாறு சாத்தியம்?
ஆவி பேசும் என்கிறார்கள். அது பேசுவதற்கு வாய் என்னும் புலன் வேண்டுமே! மீடியேட்டர்களின் கையை நகர்த்தி, எழுத்துகளைத் தொடச் செய்து கேள்விக்குப் பதில் தருவதாகக் கூறுவது ஊரை ஏமாற்றும் வேலை.
ஆவி என்றால் என்ன?
நீராவி போல் இருக்குமா? நிழல் உருவமா? உரசும் காற்று போலவா?
யார் படமெடுத்துக் காட்டி நிரூபித்தது?
தெளிவில்லாத நிழல் வடிவங்களையும், வெண்மையான புகைப் படலங்களையும் படமெடுத்து ஊடகங்களில் வெளியிட்டு, ஆவியின் வடிவம் என்று சொல்லி ஊரை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். தலைப்பில் கண்டது போன்ற படங்களைத் தொழில்நுட்பங்களைக் கையாண்டு சுயமாக உருவாக்குதலும் நடக்கிறது. இதில், சிறுமியின் முகம்[படமாகவும் இருக்கலாம்] தெளிவாகத் தெரிகிறது. இதை ஆவி என்றோ பேய் பிசாசின் மறு வடிவம் என்றோ நம்புவதற்கான வாய்ப்பே இல்லை.
ஐம்புலன்களில் ஒன்றோ பலவோ இல்லாமல், ஆவியோ பூதமோ எதுவுமோ இயங்குவது நடவாத செயல்.
கடவுளும் அப்படித்தான். புலன்கள் இல்லாமல் இயங்க முடியாது. மூளை இல்லாமல் அல்லது, அது போன்ற ஏதோ ஒன்று இல்லாமல் அவரால் சிந்திக்கவும் இயலாது.
ஆனாலும்.....
அன்றுதொட்டு இன்றுவரை, ஞானிகள் என்று சொல்லப்படுபவர்களும் மதவாதிகளும் கடவுள் இருப்பதாகச் சொல்லிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
உண்மையில் கடவுள் என்று ஒருவர் இருந்தால், தனக்கே தனக்கான ஓர் உருவில் மனிதர்களின் முன்னால் தோன்றி அவர்களின் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றவும் கூடும்.
நாம் காத்திருப்போம்.
ஒட்டுமொத்த மனித குலமும் காத்திருக்கலாம்!
========================================================================
கருத்துப்பெட்டி சரி செய்யப்பட்டது என்பதை மகிழ்வுடன் தெரிவிக்கிறேன்.
கருத்துப்பெட்டி சரி செய்யப்பட்டது என்பதை மகிழ்வுடன் தெரிவிக்கிறேன்.
அவரு வருவாரு... ஆனா வரமாட்டாரு...
பதிலளிநீக்குதினம் 10 தடவைக்குமேல் வந்து மனம் நொந்து விட்டேன் நண்பரே... பெட்டியை திறந்து வைத்தமைக்கு நன்றி.
பெட்டியை அழகுபடுத்த முயன்றதன் விளைவு இது[பழைய பதிவுகளில் பிரச்சினை இல்லை].இனி மறந்தும் இம்முயற்சியில் ஈடுபட மாட்டேன்.
நீக்கு\\தினம் 10 தடவைக்குமேல் வந்து மனம் நொந்து விட்டேன் நண்பரே//
வருந்துகிறேன் கில்லர்ஜி.
தங்களின் நல்ல மனதுக்கு நன்றி.
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் 4 அறிவுப்பசிஜி மீயும் நேற்று வந்து கொ.பொக்ஸ் ஐ தேம்ஸ்ல வீசிட்டீங்க என ஏசிக்கொண்டே போனேனே கேட்டுதா?:)
நீக்குநல்லா இருந்த கருத்துப் பெட்டியை நாசமாக்கிட்டியேடான்னு மனசாட்சி போட்ட காட்டுக் கூச்சலில் அதிரா ஏசினது கேட்கவே இல்ல!
நீக்குநன்றி பாரதி.
பதிலளிநீக்குகருத்துப் பெட்டி நல்ல கருத்துகளுக்கான இடம். இதில் அழகு எதுக்கு?
பதிலளிநீக்குசரியோ தவறோ கடவுள் பற்றி நீர் எழுதுவது சிந்திக்க வைக்கிறது.தொடர்ந்து எழுதும்.
பதிலளிநீக்குநீர் பொய் முகத்தோடு வந்தாலும் பாராட்டவும் செய்கிறீர்!
நீக்குநன்றி புதுமுகனாரே.
கடவுள் வர மாட்டார்ர்:) அப்பூடி வர மீ விடமாட்டேன்ன்ன் அதையும் மீறி வந்தால் தேம்ஸ்ல தள்ளி விட்டிடுவேன் ஹா ஹா ஹா:)).. இதை எப்படியும் கடவுள் படிப்பார்:) படிச்சிட்டு, அதிராவுக்குப் பயத்திலயே வரமாட்டார் ஹா ஹா ஹா:)...
பதிலளிநீக்குநல்லவர்கள் இருந்தால் மட்டும்தானே கடவுள் வருவாராம்:) நாங்க நல்லவர்களா தெரியல்லியே:))
தேம்ஸில் வேண்டாம். கங்கைதானே அவருக்குப் பிடித்தமான நதி! அதிலே தள்ளிடுவோம்!
நீக்கு//நல்லவர்கள் இருந்தால் மட்டும்தானே கடவுள் வருவாராம்:) நாங்க நல்லவர்களா தெரியல்லியே:))//
அதிரா மாதிரி நல்லவங்க இருக்கிறதாலதான் கடவுள் வருவார்னு நம்பிக்கையோடு சொல்லியிருக்கேன். ஆனா...
அவர் வந்துட்டா, அவரைத் திட்டிப் 'பசி'பரமசிவத்தால் பதிவு எழுத முடியாது. அதிரா கொடுத்த 'அறிவுப்பசிஜி' பட்டமும் பறி போயிடும்!
'ஆற்றோரக் கவிதைகள்' ஒரு தடவைதான் படிச்சேன். இன்னொரு தடவை படிச்சிட்டு நாளை கருத்துச் சொல்றேன்.
நீக்குகடவுளைப் பற்றிய ஒரு புரிதல் வேண்டும் என்றால்
பதிலளிநீக்குஸ்ரீ பகவத் ஐயாவின் நூல்களைப் படியுங்கள். இதைவிட எளிமையாக யாருமே சொன்னதில்லை. உங்களுக்கு மிகப்பெரிய சிந்தனை மாற்றத்தை உருவாக்கும்.
வாழ்க வளமுடன்.
https://aashaatamil.blogspot.com/
பதிலளிநீக்குஎன்னுடைய வலைத்தளத்துக்கு பக்கத்தை கொஞ்சம் படித்து பாருங்கள் இப்பொழுதுதான் வளர்ந்து வருகிறேன் ஆதரவு தாருங்கள்