எனது படம்
கடவுள் குறித்த ஆய்வுரைகளோ, மூடநம்பிக்கைச் சாடல்களோ, என் பதிவுகளின் உள்ளடக்கங்களின் தரம் எனக்கு வாய்த்துள்ள அறிவுக்கும் மனப் பக்குவத்துக்கும் ஏற்பவே அமையும். அவற்றை ஏற்பதும் மறுத்துப் புறக்கணிப்பதும், ஆறறிவும் ஆழ்ந்து சிந்திக்கும் திறனும் வாய்க்கப்பெற்ற உங்களின் விருப்பம் சார்ந்தது.

திங்கள், 18 ஆகஸ்ட், 2025

மோடிக்குத் ‘தன்மானம்’ கட்டாயமில்லை! அவரின் ‘பிரதமர் பதவி’க்கு?

“இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான போர் நிறுத்தம் நீடிக்காது என்பதால் இரு நாடுகளையும் உன்னிப்பாகக் கண்காணித்துவருகிறோம்” -இப்படிப் பேசியிருப்பவர் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மார்கே ரூபியோ[‘டிரம்ப்’ அனுமதியோடு] -இது இன்றைய[17.09.2025] ‘சன்’ தொ.கா. காலைச் செய்தி.

இந்தியா - பாகிஸ்தான் போரைத் தான்தான் நிறுத்தியதாக டிரம்ப் 40 முறை அழுத்தம் திருத்தமாகச் சொல்லிய நிலையில் அவரைக் கண்டிக்காமல், கனத்த மௌனம் சுமந்து, வேறு எது குறித்தெல்லாமோ மோடி வாயால் ருசியான வடை சுட்டுக்கொண்டிருக்கிறார்.

அவர் ஒரு தனி மனிதராகத் தன் தன்மானம் குறித்துக் கவலைப்படாதது ஒரு பொருட்டல்ல என்றாலும், இந்த இந்தியத் திருநாட்டின் ‘பிரதமர்’ என்ற வகையில் டிரம்புக்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்திருத்தல் தவர்க்கவே கூடாதது.

நாட்டின் பிரதமருக்கான கடமை[தன்மானம் காத்தல்]யை அவர் செய்யத் தவறியதால் மனம் கொதித்து டிரம்புக்கு நம் கண்டனத்தைத் தெரிவிக்கிறோம்; மோடிக்கும்தான். 

ஒழிக டிரம்ப்! வாழ்க மோடி[கடமை தவறினாலும் இவர் நம் பிரதமர்]!!