எனது படம்
கடவுள் குறித்த ஆய்வுரைகளோ, மூடநம்பிக்கைச் சாடல்களோ, என் பதிவுகளின் உள்ளடக்கங்களின் தரம் எனக்கு வாய்த்துள்ள அறிவுக்கும் மனப் பக்குவத்துக்கும் ஏற்பவே அமையும். அவற்றை ஏற்பதும் மறுத்துப் புறக்கணிப்பதும், ஆறறிவும் ஆழ்ந்து சிந்திக்கும் திறனும் வாய்க்கப்பெற்ற உங்களின் விருப்பம் சார்ந்தது.

வெள்ளி, 7 நவம்பர், 2025

நயினார் நாகேந்தரனின் நகைச்சுவைப் பேச்சு! இது ‘கின்னஸ்’இல் இடம்பெறும்?!?!?

இந்தக் காணொலி 04.11.2025இல் வெளியானது. இது இன்று என் கண்ணில்பட்டது அடியேன் பெற்றப் பெரும் பேறு.

தமிழ்நாட்டுத் தமிழர்களின் தலைவர் நயினார் நாகேந்திரனாரின்[இப்போதெல்லாம் அவரின் பெயருக்கு அடைமொழியாகத் ‘தமிழன்’ இணைக்கப்படுகிறது] உரை, மோடிப் பெருமகனார்தான் உலகத் தமிழர்களின் ஒட்டுமொத்தத் தலைவர் என்பதை ஒட்டுமொத்த உலகமும் அறியச் செய்தது. 

இதைச் செவிமடுத்தபோது மெய் சிலிர்த்தேன்; இன்னமும் சிலிர்ப்பு அடங்கவில்லை என்பதால், உலகத் தமிழர் தலைவர் மோடிக்கும், அவரை மிகச் சரியாக அடையாளப்படுத்திய உள்நாட்டுத் தமிழர் தலைவர் நயினாருக்கும் புகழாரம் சூட்டுவது இயலாமல்போனது என்பதை மிக வருத்தத்துடன் தெரிவிக்கிறேன்.

வாழ்க உலகத் தமிழர் தலைவரும் உள்நாட்டுத் தமிழர் தலைவரும்!