“ஒரு பெண்ணைக் கண்டவுடன் அவளிடமுள்ள எந்த அம்சம் உங்களைக் கவர்கிறது?” என்ற கேள்வியுடன் இளைஞர்களிடையே ஒரு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. முடிவு.....?!
வெளியிட்டது: குமுதம்[28.02.91] வார இதழ்
பெண்ணின் கட்டுக்குலையாத கவர்ச்சியான உடலமைப்பே தங்களைக் கவர்வதாக, ஏறத்தாழ பாதிப்பேர் சொன்னார்கள். 47.1 சதவீதம்.
அழகிய முகமும் நிறமுமே தங்களைக் ஈர்ப்பதாகச் சொன்னவர்கள் 31.2 சதவீதம் பேர்.
பெண் உடுத்தும் ஆடையும் விதம் விதமான அணிகலன்களுமே தங்களை வசீகரிப்பதாகச் சொன்னவர்கள் 9.3 விழுக்காடு.
பெண்ணின் நீண்ட கரிய கூந்தலைக் கண்டவுடன் வீழ்ந்துவிடுவதாக அசடு வழிந்தவர்கள் 5.8 விழுக்காட்டினர்.
இதுதான் என்று குறிப்பிட்டுச் சொல்லாமல், பெண்ணிடமுள்ள அத்தனை அம்சங்களுமே தங்களுக்குப் பிடிப்பதாகச் சொன்னவர்கள் வெறும் 1.8 சதவீதம்தானாம்!
வாக்கெடுப்பு நடத்தியவர்களிடம், “உங்களுக்கு வேறு வேலை இல்லையா?” என்று எரிந்து விழுந்தவர்கள்[நம்ம கட்சி] 1.7 விழுக்காடு.
=============================================================================================
வாக்கெடுப்பு நடத்தியவர்கள்: ‘செவன்ட்டீன்’வெளியிட்டது: குமுதம்[28.02.91] வார இதழ்
குமுதத்துக்கு நன்றி சொல்பவர்: ‘பசி’பரமசிவம்

