“..... 'தோற்கப்போகிறோம்' என்பது ஸ்டாலினுக்குத் தெரிந்துவிட்டது. எனவே, இப்படியான[திமுக ஆட்சியமைக்கும்] கருத்துக் கணிப்புகளைத் திட்டமிட்டு வெளியிடுவதன் பின்னணியில் சூழ்ச்சி இருப்பதற்கு வாய்ப்பு உண்டு.
அதாவது, திமுக வெல்லப்போகிறது என்ற மாயப் பிம்பத்தை உருவாக்கி, அதன் அடிப்படையில் வாக்கு எண்ணிக்கையில் தில்லுமுல்லு செய்வதற்கும், கலவரம் செய்து[தில்லுமுல்லு சாத்தியம் இல்லையென்றால்] தமிழகத்தில் குழப்பத்தை உருவாக்குவதற்கும் திமுக-வினர் முயற்சி செய்வார்கள்....."[https://tamil.abplive.com/news/tamil-nadu/eps-releases-statement-says-dmk-s-fraud-drama-will-not-work-out-and-admk-will-surely-win-258015#google_vignette] என்பது செய்தி.
வாக்கு இயந்திரங்களில் தில்லுமுல்லு செய்தேனும் ‘அதிமுக’ கூட்டணி வெல்ல வேண்டும் என்று தன் தலைவன் மோடியிடம் சொல்ல நினைத்தார்.
நேரில் சந்தித்து அவர் காலில் விழுந்துதான் சொல்ல வேண்டும். அப்படிச் சொன்னால்.....
“தமிழ்நாடு தேர்தலில் எங்கள் பாஜக வேட்பாளர்களில் ஒரே ஒருவர் வென்றாலும் அவருக்கு உங்கள் அமைச்சரவையில் இடம் தர வேண்டும்” என்பதாக நிபந்தனை விதிப்பார் மோடி என்பதால்.....
வாக்கு எண்ணிக்கையில் ‘திமுக’ தில்லுமுல்லு செய்யும் என்று சொல்லி, “ஓட்டுத் திருட்டில் கில்லாடியான நீங்கள் அதைச் செய்து[தேர்தல் ஆணையத்தைத் தன் வசம் வைத்துள்ள மோடிக்கு மட்டுமே அது சாத்தியம்] நம் கூட்டணியை வெற்றி பெறச் செய்யுங்கள் என்று மறைமுகமாக அறிவுறுத்தியிருக்கிறார் அதி புத்திசாலி எடப்பாடி.
தங்களுக்கான வெற்றிச் செய்தியைப் பேராவலுடன் எதிர்பார்க்கிறார் அவர்!
