வியாழன், 6 ஜூலை, 2017

ஆதலினால் ‘காமம்’ செய்வீர்!

'வயிறு பசிச்சா சோறு.  உடம்பு பசிச்சா ஆண் பெண் புணர்ச்சி. உழைச்சி அலுத்துப் போனா உறக்கம்’   -இதுதான் மனிதனுக்கு [அனைத்து உயிர்களுக்கும் பொதுவானதும்கூட] இயற்கை வழங்கிய கொடை.

மேற்கண்ட மூன்று அடிப்படைத் தேவைகளோடு, ஆடம்பரம், பட்டம், பதவி, புகழ் என்று ஏராளமான தேவைகளை ஆறாவது அறிவு வாய்த்ததால் மனிதன் உருவாக்கிக் கொண்டான். இவை முற்றிலும் செயற்கையானவை.

இந்தத் தேவையற்ற ‘தேவை’களின் பட்டியலில் ‘காதல்’ என்ற ஒன்றும் இடம் பெற்றுள்ளது.

மனிதன் விலங்காக வாழ்ந்தவரை.................

காமம் கிளர்ந்தெழுந்த போதெல்லாம், ஆணும் பெண்ணும் தன்னிச்சையாய் உடலுறவு கொண்டு இன்பத்தில் திளைக்க முடிந்தது. மனிதர்களுக்கு ஆறாவது அறிவு வாய்த்த பிறகு, இது சாத்தியம் இல்லாமல் போனது. காரணம்.....

பெண்ணைத் தன் உடைமை ஆக்கிக் கொள்வதில் ஆண்களுக்கிடையே உண்டான மோதல்களைத் தவிர்ப்பதற்காக, நம் முன்னோர்கள் உருவாக்கிய கட்டுப்பாடுகளும் சட்டதிட்டங்களும். 

இவற்றோடு, தவிர்க்க முடியாத பொருளாதாரப் பிரச்சினைகளும் வேறு பல இடையூறுகளும் குறுக்கிடவே, ஆண் பெண் வேறுபாடின்றி, அனைத்து மக்களுமே ஆண்டுக் கணக்கில் செயற்கை உடலுறவு இன்பங்களை நாட வேண்டிய பரிதாப நிலை உருவானது!

இந்தச் செயற்கை உடலுறவிலும் முழு மன நிறைவு கிட்டாத நிலையில், ஒருவரோடு ஒருவர் பேசிக் களிப்பதிலும், பார்த்து இன்புறுவதிலும், உடலுறவு கொள்வதால் கிடைக்கும் சுகானுபவங்களைக் கற்பனை செய்து உருகுவதிலும் முழுத் திருப்தி பெறுவதற்கான முயற்சியில் இருபாலரும் ஈடுபட்டார்கள். இம்மாதிரிக் கற்பனைச் சுகங்களுக்குக் கவிதை, கதை, ஓவியம், சிற்பம் என்று பல்வேறு கலை வடிவங்கள் தரப்பட்டன.  

இம்மாதிரியான கற்பனைச் சுகங்களின் தொகுப்புக்குக் ‘காதல்’[இதுவும் காமத்தைக் குறித்த சொல்தான்] என்று புதுப்பெயர் சூட்டப்பட்டது[இது எப்போது நிகழ்ந்தது என்பது தனி ஆய்வுக்குரியது].

முற்றிலும் பொய்யான, கற்பனையான இந்தக் காதல், வாலிப உள்ளங்களைப் பாடாய்ப் படுத்தியது; படுத்துகிறது.

காதல் தோல்வியால், பலர் தம் அரிய உயிரை மாய்த்துக்கொள்ளும் அவலம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஆதலினால், இளசுகளுக்கு நாம் சொல்லும் புத்திமதி.....

‘காதல் செய்ய வேண்டாம். உரிய தருணத்தில், ‘காமக்கலை’யை நல்ல நூல்களின் வாயிலாக ஓரளவேனும் கற்றுக்கொள்ளுங்கள். பின்னர், இயன்றவரை மனப் பொருத்தமும் உடல் பொருத்தமும் அமைந்த துணையைத் தேடி இல்லற வாழ்வை மேற்கொள்ளுங்கள். ஒருவர் மீது ஒருவர் அன்பும் பாசமும் பொழிந்து, அவரவர் தேவையை உணர்ந்து அறிந்து ஆசைதீரக் காமசுகத்தை  அனுபவியுங்கள்’ என்பதே!
============================================================================================
நீண்டதொரு என் பதிவிலிருந்து பிய்த்தெடுத்துப் புதுப்பித்தது இப்பதிவு!



17 கருத்துகள்:

  1. நல்ல தெளிவான தீர்க்கமான அறிவுரை ஆனால் அதற்கும் காதல் செய்தாக வேண்டுமே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அறிவுரை மட்டுமே வழங்கியிருக்கிறேன். காதல் அனுபவம் எனக்கு இல்லை!

      நன்றி இமயவரம்பன்.

      நீக்கு
  2. காதலுக்குப் பின்னேதானே இது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முன்பா பின்பா தெரியவில்லை. இது போதும் என்பது என் கருத்து.

      நன்றி கில்லர்ஜி.

      நீக்கு
  3. ஆறறிவின் கண்டுபிடிப்பான காதலை அவ்வளவு சுலபமாக ஒதுக்கித் தள்ள முடியாதே :)

    பதிலளிநீக்கு
  4. பதில்கள்
    1. இன்றைய இளவட்டங்கள் ஏற்பார்களா?!

      நன்றி ஜெயக்குமார்.

      நீக்கு
  5. 58 வயதை கடந்து விட்டேனே.. கா. கலையை கற்க வயதில்லையே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதுக்கு ஏதுங்க வயசு? கத்துகிட்டா, காதல் கத்திரிக்காய்னு திரியற பசங்களை இழுத்து உட்காரவச்சி என்னை மாதிரி புத்திமதி சொல்லலாமே?

      நன்றி கணேசன்.

      நீக்கு
  6. அருமையான அறிவுரை ஐயா..! - காதல் என்பது, குறிப்பாக சினிமாவில் காண்பிக்கப்படும் காதல் - ஒரு வியாபாரமே..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காதலின் பெயரால் காமவெறியைத் தூண்டிக் காசு பண்ணுகிறார்கள்.

      நன்றி றஜீவன்.

      நீக்கு