எனது படம்
கடவுள் குறித்த ஆய்வுரைகளோ, மூடநம்பிக்கைச் சாடல்களோ, என் பதிவுகளின் உள்ளடக்கங்களின் தரம் எனக்கு வாய்த்துள்ள அறிவுக்கும் மனப் பக்குவத்துக்கும் ஏற்பவே அமையும். அவற்றை ஏற்பதும் மறுத்துப் புறக்கணிப்பதும், ஆறறிவும் ஆழ்ந்து சிந்திக்கும் திறனும் வாய்க்கப்பெற்ற உங்களின் விருப்பம் சார்ந்தது.

வியாழன், 8 மே, 2025

‘இந். - பாக்.’ போர்> அனைத்துக் கட்சிக் கூட்டம்... அத்தனைப் பேர் மூளையும் சொத்தையா!?

ரு நாடு எதிரி நாட்டுடன் போர் நிகழ்த்துதல் போன்ற மிக நெருக்கடியான சூழ்நிலைகளில், கள நிலவரங்களை அறியச் செய்யவும், பாதுகாப்பு & மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்துக் கலந்தாலோசிக்கவும், நாட்டின் பிரதமர்[அதிபரோ குடியரசுத் தலைவரோ] அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டுவது வழக்கமான ஒன்றுதான்.

இந்த நடைமுறைக்கிணங்கவே, ‘இந்தியா - பாகிஸ்தான்’ போர் தொடங்கியுள்ள நிலையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் பிரதமர் மோடியின் உத்தரவுப்படி இன்று கூட்டப்பட்டது.

எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உட்படப் பலரும் கூட்டத்தில் கலந்துகொண்ட நிலையில்.....

இந்த நாட்டின் பிரதமரும் முப்படைகளையும் தன் முழுக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவருமான நரேந்திர மோடி கலந்துகொள்ளாதது[ஏற்கனவே நடைபெற்ற கூட்டத்திலும் கலந்துகொள்ளவில்லை] நம்மைப் பெருவியப்பில் ஆழ்த்துகிறது.

இதைத் தவிர்க்கும் அளவுக்கு இதைவிடவும் வேறு முக்கியப் பணி எதையும் அவர் மேற்கொண்டிருக்க வாய்ப்பே இல்லை.

அப்புறம் ஏன் அவர் கூட்டத்தைப் புறக்கணித்தார்?[காங்கிரஸ் கட்சித் தலைவர் ‘கார்கே’ உட்பட இதே கேள்வியைத்தான் உறுப்பினர்கள் பலரும் கேட்டிருக்கிறார்கள்].

மோடி கலந்துகொள்ளாததன் காரணங்களை அவர்கள் அறிந்திருப்பார்களோ அல்லவோ, நாம் அறிந்தவை:

1.போர் குறித்த முக்கியத் தகவல்களை[ரகசியத் தகவல்கள் நீங்கலாக] அனைத்துக் கட்சியினருக்கும் தெரிவிப்பதால் பயன் ஏதுமில்லை.

2.ஆலோசனைகள்[போர் நடத்தும் மோடிக்கு]  வழங்குவதற்கான அறிவு இவர்களில் எவருக்கும் இல்லை. அதாவது, அனைத்துக் கட்சி உறுப்பினர்களுமே[அமித்ஷா, ராஜ்நாத் சிங், ராகுல் காந்தி, கார்கே உட்பட] சொத்தை மூளையர்கள்.

3.கூட்டம் நடக்கும் கட்டடத்தின் மீது நம் எதிரி பாகிஸ்தான்காரன் அணுகுண்டு போடக்கூடும் என்னும் அச்சம்[ஹி... ஹி... ஹி!!!]


'பாக்.’கைது செய்த ‘பி.கே.சிங்’கைக் காப்பாற்றுபவர் கடவுளா, மோடியா?!

பாகிஸ்தான் ஆதரவு பெற்றவர்களும், பஹல்காம் தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகளைப் படுகொலை செய்தவர்களுமான தீவிரவாதிகள்  அதிரடித் தாக்குதல்[Operation Sindoor] மூலம் துவம்சம் செய்யப்பட்டார்கள்[பதிலடி கொடுத்திருப்பதாகப் பாகிஸ்தான் சொல்லிக்கொள்கிறது] என்பது யாவரும் அறிந்ததே.

இந்த வெற்றிக்கு மூலகாரணமான நம் பிரதமர் மோடியைப் போற்றிப் புகழ்ந்து கொண்டாடிக்கொண்டிருக்கிறோம்.

இந்தக் கொண்டாட்டச் சுகத்தைச் சீர்குலைக்கும் விதமாக.....

இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை வீரராக 17 ஆண்டுகள் பணியாற்றிய பி.கே.சிங் அவர்கள் பாகிஸ்தானியரால் கைது செய்யப்பட்ட அவல நிகழ்வு நினைவுக்கு வந்துதொலைக்கிறது.

அவரை மீட்டெடுப்பதில் நம் அரசு அதி தீவிரத் தொடர் முயற்சியில் ஈடுபடாதது ஏன் என்று புரியவில்லை.

நம் பிரதமர் இரவு பகலாய்ப் பாகிஸ்தானுடனான போர் குறித்த சிந்தனையிலேயே மூழ்கியிருப்பதும் ஒரு காரணமாக இருக்கலாம்.

இனியேனும் நேரம் ஒதுக்கி, பாகிஸ்தான் மீது இன்னொரு அதிரடித் தாக்குதல் நடத்தி, ‘பி.கே.சிங்’ அவர்களை அவர்களிடமிருந்து பாதுகாப்பாகப் பிரதமர் மீட்பார் என்பது உறுதி.

நம் பிரதமர் அவர்களை இங்கு அனுப்பிவைத்த[இதைச் சொன்ன நம் தலைவர் இது குறித்துப் பின்னர் மறுப்புத் தெரிவித்ததற்குத் தன்னடக்கம் காரணமாகும்] முழுமுதல் கடவுளையும் பிரார்த்திப்போம்.

***** இது ஒரு ‘நினைவூட்டல்’ பதிவு