திங்கள், 25 ஜனவரி, 2021

'இங்கே' கடவுள்களுக்கு அனுமதி இல்லை!!!

#'விதர்பா சாஹித்ய சங்' என்கிற அமைப்பு, மராத்தி எழுத்தாளர் யஸ்வந்த் மனோகருக்கு 'ஜீவன்வ்ரதி' என்கிற வாழ்நாள் சாதனையாளர் விருதை கடந்த ஜனவரி 14-ம் தேதி நாக்பூரில் நடக்கும் தங்களின் 98-ம் ஆண்டு விழாவில் வழங்கவிருந்தது.

ஒரு மாத காலத்துக்கு முன்பே எழுத்தாளர் மனோகருக்கு விருது கொடுப்பது தொடர்பான அழைப்பிதழ் கொடுக்கப்பட்டது. விழா மேடையில் சரஸ்வதியின் படம் வைக்கப்படும் என மனோகரிடம் அப்போது கூறப்படவில்லை என்று தெரிகிறது.

இந்த நிலையில், இந்த விருதுக்கு மறுப்பு தெரிவித்து விதர்பா சாஹித்ய சங்கத்துக்கு கடிதம் எழுதியுள்ள எழுத்தாளர் யஸ்வந்த் மனோகர், "பெண்கள் மற்றும் சூத்திரர்களுக்கு கல்வியும் அறிவும் மறுக்கப்பட்டு சுரண்டப்பட்டதன் அடையாளம் சரஸ்வதி. இலக்கிய நிகழ்ச்சிகளில் மதத்தை என்னால் அனுமதிக்க முடியாது. ஒரு எழுத்தாளராக என் பங்கையும், என் சிந்தனைகளையும் விதர்பா சாஹித்ய சங்கத்துக்குத் தெரியும். சரஸ்வதியின் உருவப்படம் மேடையில் இருக்கும் என என்னிடம் கூறப்பட்டது. என் மதிப்புகளை விட்டுக் கொடுத்துவிட்டு என்னால் இந்த விருதை ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே பணிவோடு இந்த விருதை மறுத்தேன்" என்று உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன#

*மனோகரைப் போல, விருதுக்கென, கொண்ட கொள்கையைக் கைவிடாத 'மனோதிடம்' நம் எழுத்தாளர்களுக்கு இருந்ததா? இருக்கிறதா?!

==================================================================================

https://www.bbc.com/tamil/india-55700477  -18 ஜனவரி 2021