உயிர்களுக்குப் புலன்கள் உள்ளன.
பக்கங்கள்https://kadavulinkadavul.blogspot.com/p/blog-page_1.html
- 'பசி'பரமசிவம்
- கடவுள் குறித்த ஆய்வுரைகளோ, மூடநம்பிக்கைச் சாடல்களோ, என் பதிவுகளின் உள்ளடக்கங்களின் தரம் எனக்கு வாய்த்துள்ள அறிவுக்கும் மனப் பக்குவத்துக்கும் ஏற்பவே அமையும். அவற்றை ஏற்பதும் மறுத்துப் புறக்கணிப்பதும், ஆறறிவும் ஆழ்ந்து சிந்திக்கும் திறனும் வாய்க்கப்பெற்ற உங்களின் விருப்பம் சார்ந்தது.
ஞாயிறு, 13 அக்டோபர், 2024
கடவுளின் மூளை!?!?!
மோடி வாயால் சுடும் வடைகளை இலவசமாய் வாரி வழங்கும் சி.பி.ராதாகிருஷ்ணன்!!!
பிரதமர் நரேந்திர மோடியின் 74ஆவது பிறந்த தினத்தை ஒட்டி, சென்னை தி.நகரில் உள்ள கிருஷ்ண ஞான சபாவில், 'நமோ' கல்வி & தொண்டு அறக்கட்டளை சார்பில், 1,000 மாணவர்களுக்குக் கல்வி உதவித்தொகை வழங்கவும், தமிழகத்தைச் சேர்ந்த 'பாராலிம்பிக்' வெற்றியாளர்களைப் பாராட்டவும் நேற்று விழா நடந்தது.
இதில் சி.பி.ராதாகிருஷ்ணன், “பிரதமர் மோடி, தமிழகத்திற்கு 11 மருத்துவக் கல்லுாரிகளைக் கொடுத்துள்ளார்[?]; தமிழின்[+தமிழ்நாடு] பெருமையைச் சென்ற இடங்களிலெல்லாம் பரப்புகிறார்” என்று பேசியிருக்கிறார்[https://www.dinamalar.com].
தமிழ் வளர்க்க ஒரு பைசா[கோடி கோடியாச் சமஸ்கிருதத்திற்கும் இந்திக்கும் செலவிடுவது போல்] செலவிட வேண்டாம்; வானளவாப் புகழ்ந்தாலே தமிழர்கள் மெய் சிலிர்ப்பார்கள். புகழ்பவர்களைப் போற்றுவார்கள்; தேர்தல் நேரத்தில் வாக்களிப்பார்கள் என்று நம்புகிறவர் மோடி.
தனக்குக் கவர்னர் பதவி கொடுத்த மோடியை வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் புகழ்ந்து போற்றுகிறார்.
சி.பி ராதாகிருஷ்ணனுக்கு இப்போதைய பதவிக்காலம் முடிந்ததும் அவர் மீண்டும் ஆளுநர் ஆக்கப்படுவார் என்பது 100% நிச்சயம்!