எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

திங்கள், 25 டிசம்பர், 2023

‘அவர்கள்’ஐ அல்லா தண்டிப்பாரா?! ‘இவர்கள்’ஐ மன்னிப்பாரா?!

ப்படித் தலைப்புக் கொடுத்ததற்காக இஸ்லாம் நண்பர்களும் அன்பர்களும் சினம்கொள்ள வேண்டாம்.

பொறுமையுடன் பதிவை வாசியுங்கள். 

செப்டம்பர் 2021இல், அமெரிக்க&நேட்டோ துருப்புக்கள் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறிய ஒரு மாதத்திற்குப் பிறகு, பெண்கள் ஆறாம் வகுப்பிற்கு மேல் படிப்பது தடைசெய்யப்பட்டுள்ளதாகத் தலிபான்கள் அறிவித்தார்கள்.

அவர்கள் டிசம்பர் 2022இல் பல்கலைக்கழகங்களுக்கு இந்தக் கல்வித் தடையை நீட்டித்தனர். 

தலிபான்கள் உலகளாவிய கண்டனங்களையும் எச்சரிக்கைகளையும் மீறி, இவற்றைச் செய்திருக்கிறார்கள்

கடந்த வாரம், ஐ.நா. சிறப்புத் தூதர் ‘ரோசா ஒடுன்பயேவா’, ஆப்கானியப் பெண்களின் பரிதாப நிலை குறித்துப் பெரிதும் கவலை தெரிவித்துள்ளார்.

13 வயதான ‘செதாயேஷ் சாஹிப்சாதா’ என்னும் பெயருடைய சிறுமி, இனி பள்ளிக்குச் செல்ல முடியாது என்பதால் தன் எதிர்காலம் குறித்து மிகவும் கவலைப்பட்டாள்.

"என்னால் சொந்தக் காலில் நிற்க முடியாது" என்றாள் ஒருத்தி.

“நான் ஆசிரியராக விரும்பினேன். அது வெறும் கனவானது” என்று கவலைப்பட்டாள் இன்னொரு பெண்.

தலிபான்கள் இளம் பெண்களுக்குச் செய்யும் அநீதியை உலக அளவில், மதம் இனம் ஆகியவை கடந்து ஏராளமானோர் கண்டித்திருக்கிறார்கள்.

“உலகின் இரண்டாவது பெரிய மதம் இஸ்லாம். அந்த மதத்தில் இந்த அநீதியை எதிர்த்துக் குரல் கொடுக்கும் துணிவு அம்மதம் சார்ந்தவர்களுக்கு இல்லாமல்போனது ஏன்?” என்று எவரொருவரும் கவலைப்படுவது நியாயமானதே.

அந்தக் கவலையைச் சற்றே குறைக்கும் வகையில் இஸ்லாமியர் ஒருவர் ஆப்கானிஸ்தான் பெண்களுக்காகக் குரல் கொடுத்திருக்கிறார்.

அவர் பெயர் முஹம்மது சலீம் பைகிர்; சமூக இயல் ஆய்வாளர்.

“வெளியே செல்லவிடாமலும், வேலைக்குச் செல்ல அனுமதிக்காமலும் பெண்களைத் தடுத்து வைத்துள்ளார்கள்; வீடுகளில் அடைத்து வைத்துள்ளார்கள். சிறுமிகளை[அனைத்து வயதுப் பெண்கள் உட்பட]க் கல்வி கற்கவிடாமல் விலக்குவது போன்ற செயல்கள் ஆப்கானிஸ்தானுக்குப் பேரழிவை ஏற்படுத்தும்” என்று அவர் தலிபான்களை எச்சரித்துள்ளார். "படிக்காதவர்கள் ஒருபோதும் சுதந்திரமாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ முடியாது” என்றும் அவர் கூறியுள்ளார் 

நம்மை வியப்புக்குள்ளாக்கும் அரியதொரு கேள்வி என்னவென்றால்.....

கண்கள் தவிர ஒட்டுமொத்த உடம்பையும் ஆடையால் மறைப்பது சரியோ தவறோ, முழு உடம்பையும் மறைத்தவாறு கல்வி நிலையம் சென்று அறிவை வளர்த்து, ஆண்களுக்கு நிகராக இஸ்லாம் பெண்கள் வாழ நினைப்பதில் ஏது தவறு?

தவறில்லை என்னும்போது, ஆய்வாளர் முஹம்மது சலீம் பைகிர் அவர்களைப் போல உலகிலுள்ள இஸ்லாமியர் அனைவரும் ஆப்கானிஸ்தான் பெண்களுக்காகக் குரல் கொடுக்காமலிருப்பது ஏன்?

ஏன்? ஏன்? ஏன்?

“எல்லாம் அல்லா பார்த்துக்கொள்வார்” என்று நினைக்கிறார்களா?

அல்லா தலிபான்களைத் தண்டிப்பாரோ இல்லையோ, இப்படி நினைக்கும் இஸ்லாமியரை அவர் மன்னிக்கமாட்டார் என்றே சொல்லத் தோன்றுகிற்து!

***இதுபோன்றதொரு பதிவை நமக்குப் பதிலாக ஓர் இஸ்லாமிய அன்பர் எழுதியிருந்தால், அது உலக அளவில் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கும்.

வாழ்க பெண்ணினம்! வாழ்க இஸ்லாம் பெண்கள்!!

                                   *   *   *   *   *

Afghan schoolgirls are finishing sixth grade in tears. Under Taliban rule, their education is over (msn.com) [copy&paste]

https://www.msn.com/en-ca/news/world/afghan-schoolgirls-are-finishing-sixth-grade-in-tears-under-taliban-rule-their-education-is-over/ar-AA1lZR5X [‘கிளிக்’ செய்க]

வடக்கனின் கால் நக்கிப் பிழைப்பு நடத்தும் ‘காலைக்கதிர்’ நாளிதழ்!!!

ஆங்கிலத்தில் கல்வி கற்கும் பிள்ளைகள், ஆங்கிலத்தின் மூலம் ‘தகவல் & தொழில் நுட்பங்கள் கற்றுத் தேர்ந்து, தொழில் நுட்பத் துறையில் வேலை கிடைத்து, கை நிறையச் சம்பாதிக்கிறார்கள். இந்தியில் கற்பதால், அம்மொழி மூலம் அதைக் கற்று, அது சார்ந்த தொழிலகங்களில் வேலை பெறுவது சாத்தியம் இல்லாமல்போகிறது.

வடவர்களில் பலரும், இந்தி படித்து நல்ல சம்பளத்தில் வேலை பெற இயலாமல், தமிழ்நாடு வந்து, வீடு கட்டுதல், கழிப்பறை கட்டுதல்[கழிப்பறையைச் சுத்தம் செய்கிறார்கள் என்று மாறன் பேசியதாகப் பொய்ச் செய்தி பரப்புகிறார்கள் ‘பாஜக’வினர்], வயல்களில் நாற்று நடுதல் போன்ற வேலைகளைச் செய்கிறார்கள்.

இந்திக்காரர்களின் வற்புறுத்தலால் இந்தி படிப்பவர்கள் இம்மாதிரியான வேலகளைத்தான் பெற முடியும்.....

தயாநிதிமாறன் பேசியது 100% மறுக்க இயலாத உண்மை என்னும் நிலையில்.....

மேற்கண்டவாறு செய்தி வெளியிட்டு, மாறனின் பேச்சு வட மாநிலங்களில் பெரு சர்ச்சையை உண்டுபண்ணியுள்ளதாகப் பொய்யுரைத்து, ஆங்கிலம் கற்பதை வரவேற்கும் தமிழ்நாட்டுத் தலைவர்கள் மீது காழ்ப்புணர்ச்சியைக் கக்கியிருக்கிறது வடவரின் கால்களை நக்கிப் பிழைக்கும் ‘காலைக்கதிர்’ என்னும் ‘அவாள்’ நாளிதழ்.

இந்தி பேசுபவர் அதிகமாக உள்ள பீகாரிலிருந்துதான்[அவர்களின் தாய்மொழியான ‘பீகாரி’ மொழி மீதான பற்று, பீகார் முதலமைச்சர் சதிஸ்குமார் போன்ற இனத் துரோகிகளின் உதவியுடன் மழுங்கடிக்கப்பட்டுள்ளது] மிக அதிக அளவில் வயிற்றுப் பிழைப்புக்காகத் தமிழ்நாடு வருகிறார்கள் என்பதும், இதன் மூலம் வெறித்தனமாய் இந்தியைப் பரப்ப முயலும் சதிஷ்குமார் அம்மாநிலத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்தவில்லை என்பதும் கவனத்தில் கொள்ளத்தக்கது.

தயாநிதியின் பேச்சால் வடமாநிலங்களில் சர்ச்சை உருவாகியிருக்கிறதோ இல்லையோ, வடவர்களைத் தூண்டிவிடுவதன் மூலம் தமிழையும் தமிழர்களின் மொழியுணர்வும் இனவுணர்வும் நசுக்கப்படுதல் வேண்டும் என்பது, தமிழால் வயிறு வளர்க்கும் ‘கழிசடை’ காலைக்கதிர்க்காரனின் நீண்ட நாள் கனவு.

தமிழ்நாட்டிலிருந்து வடக்கன்ஸ் வெளியேற்றப்பட வேண்டுமா, கூடாதா என்னும் விவாதம் அடங்கியிருக்கும் நிலையில், அவ்வப்போது தமிழர்க்கு எதிராக ‘விஷம்’ கக்கும் காலைக்கதிர்க்காரனை வெளியேற்றுவது குறித்துத் தமிழர்கள் விவாதித்து முடிவெடுக்க வேண்டியது உடனடித் தேவையாகும்.

*   *   *   *   *
***தமிழில் தொழில் கல்வி அளிக்கப்படுகிறதா என்பது தனி ஆய்வுக்குரியது.