பொறுமையுடன் பதிவை வாசியுங்கள்.
செப்டம்பர் 2021இல், அமெரிக்க&நேட்டோ துருப்புக்கள் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறிய ஒரு மாதத்திற்குப் பிறகு, பெண்கள் ஆறாம் வகுப்பிற்கு மேல் படிப்பது தடைசெய்யப்பட்டுள்ளதாகத் தலிபான்கள் அறிவித்தார்கள்.
அவர்கள் டிசம்பர் 2022இல் பல்கலைக்கழகங்களுக்கு இந்தக் கல்வித் தடையை நீட்டித்தனர்.
தலிபான்கள் உலகளாவிய கண்டனங்களையும் எச்சரிக்கைகளையும் மீறி, இவற்றைச் செய்திருக்கிறார்கள்
கடந்த வாரம், ஐ.நா. சிறப்புத் தூதர் ‘ரோசா ஒடுன்பயேவா’, ஆப்கானியப் பெண்களின் பரிதாப நிலை குறித்துப் பெரிதும் கவலை தெரிவித்துள்ளார்.
13 வயதான ‘செதாயேஷ் சாஹிப்சாதா’ என்னும் பெயருடைய சிறுமி, இனி பள்ளிக்குச் செல்ல முடியாது என்பதால் தன் எதிர்காலம் குறித்து மிகவும் கவலைப்பட்டாள்.
"என்னால் சொந்தக் காலில் நிற்க முடியாது" என்றாள் ஒருத்தி.
“நான் ஆசிரியராக விரும்பினேன். அது வெறும் கனவானது” என்று கவலைப்பட்டாள் இன்னொரு பெண்.
தலிபான்கள் இளம் பெண்களுக்குச் செய்யும் அநீதியை உலக அளவில், மதம் இனம் ஆகியவை கடந்து ஏராளமானோர் கண்டித்திருக்கிறார்கள்.
“உலகின் இரண்டாவது பெரிய மதம் இஸ்லாம். அந்த மதத்தில் இந்த அநீதியை எதிர்த்துக் குரல் கொடுக்கும் துணிவு அம்மதம் சார்ந்தவர்களுக்கு இல்லாமல்போனது ஏன்?” என்று எவரொருவரும் கவலைப்படுவது நியாயமானதே.
அந்தக் கவலையைச் சற்றே குறைக்கும் வகையில் இஸ்லாமியர் ஒருவர் ஆப்கானிஸ்தான் பெண்களுக்காகக் குரல் கொடுத்திருக்கிறார்.
அவர் பெயர் முஹம்மது சலீம் பைகிர்; சமூக இயல் ஆய்வாளர்.
“வெளியே செல்லவிடாமலும், வேலைக்குச் செல்ல அனுமதிக்காமலும் பெண்களைத் தடுத்து வைத்துள்ளார்கள்; வீடுகளில் அடைத்து வைத்துள்ளார்கள். சிறுமிகளை[அனைத்து வயதுப் பெண்கள் உட்பட]க் கல்வி கற்கவிடாமல் விலக்குவது போன்ற செயல்கள் ஆப்கானிஸ்தானுக்குப் பேரழிவை ஏற்படுத்தும்” என்று அவர் தலிபான்களை எச்சரித்துள்ளார். "படிக்காதவர்கள் ஒருபோதும் சுதந்திரமாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ முடியாது” என்றும் அவர் கூறியுள்ளார்
நம்மை வியப்புக்குள்ளாக்கும் அரியதொரு கேள்வி என்னவென்றால்.....
கண்கள் தவிர ஒட்டுமொத்த உடம்பையும் ஆடையால் மறைப்பது சரியோ தவறோ, முழு உடம்பையும் மறைத்தவாறு கல்வி நிலையம் சென்று அறிவை வளர்த்து, ஆண்களுக்கு நிகராக இஸ்லாம் பெண்கள் வாழ நினைப்பதில் ஏது தவறு?
தவறில்லை என்னும்போது, ஆய்வாளர் முஹம்மது சலீம் பைகிர் அவர்களைப் போல உலகிலுள்ள இஸ்லாமியர் அனைவரும் ஆப்கானிஸ்தான் பெண்களுக்காகக் குரல் கொடுக்காமலிருப்பது ஏன்?
ஏன்? ஏன்? ஏன்?
“எல்லாம் அல்லா பார்த்துக்கொள்வார்” என்று நினைக்கிறார்களா?
அல்லா தலிபான்களைத் தண்டிப்பாரோ இல்லையோ, இப்படி நினைக்கும் இஸ்லாமியரை அவர் மன்னிக்கமாட்டார் என்றே சொல்லத் தோன்றுகிற்து!
***இதுபோன்றதொரு பதிவை நமக்குப் பதிலாக ஓர் இஸ்லாமிய அன்பர் எழுதியிருந்தால், அது உலக அளவில் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கும்.
வாழ்க பெண்ணினம்! வாழ்க இஸ்லாம் பெண்கள்!!
* * * * *
Afghan schoolgirls are finishing sixth grade in tears. Under Taliban rule, their education is over (msn.com) [copy&paste]
https://www.msn.com/en-ca/news/world/afghan-schoolgirls-are-finishing-sixth-grade-in-tears-under-taliban-rule-their-education-is-over/ar-AA1lZR5X [‘கிளிக்’ செய்க]