“ஆங்கிலத்தில் கல்வி கற்கும் பிள்ளைகள், ஆங்கிலத்தின் மூலம் ‘தகவல் & தொழில் நுட்பங்கள் கற்றுத் தேர்ந்து, தொழில் நுட்பத் துறையில் வேலை கிடைத்து, கை நிறையச் சம்பாதிக்கிறார்கள். இந்தியில் கற்பதால், அம்மொழி மூலம் அதைக் கற்று, அது சார்ந்த தொழிலகங்களில் வேலை பெறுவது சாத்தியம் இல்லாமல்போகிறது.
வடவர்களில் பலரும், இந்தி படித்து நல்ல சம்பளத்தில் வேலை பெற இயலாமல், தமிழ்நாடு வந்து, வீடு கட்டுதல், கழிப்பறை கட்டுதல்[கழிப்பறையைச் சுத்தம் செய்கிறார்கள் என்று மாறன் பேசியதாகப் பொய்ச் செய்தி பரப்புகிறார்கள் ‘பாஜக’வினர்], வயல்களில் நாற்று நடுதல் போன்ற வேலைகளைச் செய்கிறார்கள்.
இந்திக்காரர்களின் வற்புறுத்தலால் இந்தி படிப்பவர்கள் இம்மாதிரியான வேலகளைத்தான் பெற முடியும்.....”
தயாநிதிமாறன் பேசியது 100% மறுக்க இயலாத உண்மை என்னும் நிலையில்.....
மேற்கண்டவாறு செய்தி வெளியிட்டு, மாறனின் பேச்சு வட மாநிலங்களில் பெரு சர்ச்சையை உண்டுபண்ணியுள்ளதாகப் பொய்யுரைத்து, ஆங்கிலம் கற்பதை வரவேற்கும் தமிழ்நாட்டுத் தலைவர்கள் மீது காழ்ப்புணர்ச்சியைக் கக்கியிருக்கிறது வடவரின் கால்களை நக்கிப் பிழைக்கும் ‘காலைக்கதிர்’ என்னும் ‘அவாள்’ நாளிதழ்.
இந்தி பேசுபவர் அதிகமாக உள்ள பீகாரிலிருந்துதான்[அவர்களின் தாய்மொழியான ‘பீகாரி’ மொழி மீதான பற்று, பீகார் முதலமைச்சர் சதிஸ்குமார் போன்ற இனத் துரோகிகளின் உதவியுடன் மழுங்கடிக்கப்பட்டுள்ளது] மிக அதிக அளவில் வயிற்றுப் பிழைப்புக்காகத் தமிழ்நாடு வருகிறார்கள் என்பதும், இதன் மூலம் வெறித்தனமாய் இந்தியைப் பரப்ப முயலும் சதிஷ்குமார் அம்மாநிலத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்தவில்லை என்பதும் கவனத்தில் கொள்ளத்தக்கது.
தயாநிதியின் பேச்சால் வடமாநிலங்களில் சர்ச்சை உருவாகியிருக்கிறதோ இல்லையோ, வடவர்களைத் தூண்டிவிடுவதன் மூலம் தமிழையும் தமிழர்களின் மொழியுணர்வும் இனவுணர்வும் நசுக்கப்படுதல் வேண்டும் என்பது, தமிழால் வயிறு வளர்க்கும் ‘கழிசடை’ காலைக்கதிர்க்காரனின் நீண்ட நாள் கனவு.
தமிழ்நாட்டிலிருந்து வடக்கன்ஸ் வெளியேற்றப்பட வேண்டுமா, கூடாதா என்னும் விவாதம் அடங்கியிருக்கும் நிலையில், அவ்வப்போது தமிழர்க்கு எதிராக ‘விஷம்’ கக்கும் காலைக்கதிர்க்காரனை வெளியேற்றுவது குறித்துத் தமிழர்கள் விவாதித்து முடிவெடுக்க வேண்டியது உடனடித் தேவையாகும்.