தமிழ்நாடு சட்டமன்றத்தின்[2026] ‘திமுக’ கட்சித் தலைவராக, மு.க. ஸ்டாலினால்[கட்சி தேர்வு செய்தது என்பது பொய்யுரை] தேர்வு செய்யப்பட்ட அவரின் மகன் உதயநிதி எதிர்க்கட்சித் தலைவர் ஆகிறார்.
பொதுமக்கள் என்றில்லை, 'திமுக’ கட்சிக்காரர்களே தங்களுக்குள் கேட்டுக்கொள்ளும் கேள்வி.....
“ஸ்டாலின் நடத்திய குடும்ப அரசியல்தான் ‘திமுக’ தோற்றதற்கான மிக முக்கியக் காரணம்[விளைந்த நன்மைகளுக்கிடையே] ஆகும். எதிர்க்கட்சி நிலைக்குத் தள்ளப்பட்ட பிறகும், செய்த தவற்றையே அவர் மீண்டும் செய்தது ஏன்?” என்பதுதான்.
இதை மறுக்கும் விதமாக, ‘துணை முதலமைச்சராகப் பணியாற்றிய அனுபவம். 2.சட்டமன்றத்தில் கடந்த 5 ஆண்டுகளாக அவரது செயல்பாடுகள். 3.திமுக இளைஞரணிச் செயலாளராகத் தொண்டர்களிடையே இருக்கும் செல்வாக்கு. 4.செய்தியாளர் சந்திப்புகளை எளிதாக ஹேண்டில் செய்யும் பக்குவம்.....’ ஆகியவை உதயநிதி ஸ்டாலினுக்குக் கைவந்துள்ளதால் எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்குப் பொருத்தமாக இருப்பார் என திமுக தலைமை கருதுவதாகச் சொல்லப்படுகிறது*
கட்சியில் அனுபவம் வாய்ந்தவர்களுக்கோ, ஆக்கபூர்வமாகச் செயல்படும் வேறு இளைஞர்களுக்கோ வாய்ப்புத் தராமல், தன் மகனுக்கே முக்கியத்துவம்[உதவி முதல்வர்+] தந்துகொண்டிருக்கும் நிலையில், வேறு எவரும் தம் தகுதியை/திறமையை வெளிப்படுத்துவது சாத்தியமே இல்லை என்பது கருத்தில் கொள்ளத்தக்கது. இத்தனைத் தகுதிகளை உதயநிதி பெற்றிருந்தும் ‘திமுக’ தோல்வியைத் தழுவியதும் கவனிக்கத்தக்கது.
இந்த உண்மையை அறியாதவரல்ல ஸ்டாலின்.
அறிந்திருந்தும் தன் மகனையே எதிர்க்கட்சித் தலைவராக்கியிருக்கிறார்.
முன்னோடி அரசியல்வாதியான அவர் இது போன்ற விசயங்களில் நன்கு சிந்தித்துச் செயல்படுவது வரவேற்கத்தக்கதாக அமையும்.
*https://tamil.oneindia.com/news/chennai/why-did-dmk-hand-over-the-opposition-leader-post-to-udhayanidhi-stalin-798473.html#google_vignette].