திங்கள், 11 மே, 2026

மனித நாகரிகத்தின் உச்சம் தொட்ட மரியாதைக்குரிய முதல்வர் விஜய்!!!

னக்கு ஆதரவளித்த அத்தனைக் கட்சித் தலைவர்களுக்கும் தவறாமல் நன்றி தெரிவித்த முதல்வர் விஜய் கட்சிப் பாகுபாடின்றி, தமிழ்நாட்டின் முன்னோடி அரசியல் தலைவர்களான முன்னாள் முதல்வர் ஸ்டாலின், வைகோ போன்றவர்களை[ஏற்கனவே தி.க. தலைவர் வீரமணியிடம் வாழ்த்துப் பெற்றார்; ‘பாமக’ அன்புமணியையும் சந்திக்கவுள்ளார்]த் தேடிச் சென்று வாழ்த்துப்பெறுவது அவருக்குள்ள உயர் பண்பின் அடையாளமாகும்.

தமிழ்நாட்டின் முதல்வராக அடுத்தடுத்துச் சாதனைகள் நிகழ்த்துகிறாரோ அல்லவோ[நிகழ்த்திட நம் மனப்பூர்வமான வாழ்த்துகள்], இந்த அரிய செயல் மூலம் அரசியல்வாதிகள் அத்தனைப்பேருக்கும் மனிதப் பண்பைக் கற்றுக்கொடுத்துள்ளார் அவர்;  வரலாற்றில் நிரந்தரமானதொரு இடத்தைப் பெற்றிருக்கிறார்.

சாமானியர்களான நாமும் அவரின் முதல்வர் பணி சிறக்க மனதார வாழ்த்துவோம்.