அரசியல் நாகரிகம் என்னும் பெயரில், தேர்தலில் எதிர்த்துப் போட்டியிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் பலரையும், முதல்வர் விஜய் சந்தித்து வாழ்த்துப் பெறுவதோ, பொன்னாடை போர்த்து மலர்க்கொத்து கொடுத்து, அவரை அவர்கள் வரவேற்பதோ விரும்பத்தகாத ஒன்றல்ல; அது வரவேற்கத்தக்க அரசியல் நாகரிகமாகக் கருதப்படுகிறது.
ஆனால்,
ஆரத்தழுவுதல் அல்லது இறுக அணைத்தல் என்பது, அளப்பரிய அன்பைக் காட்சிப்படுத்தும் இரு நபர்களுக்கிடையேயானதொரு அபூர்வ நிகழ்வாகும்.
முரண்பட்ட கொள்கைகளைக் கொண்ட எதிரணித் தலைவர்கள், முதல்வரைக் கண்டவுடன் கட்டித்தழுவி வரவேற்பது தேவையா?
தேவைதான். அது உண்மையான அன்பின் வெளிப்பாடு என்றால்.....
இனி இம்மாதிரியான நிகழ்வுகளின்போது வரவேற்பவர்கள் வரவேற்கப்படுபவரை, கட்டியணைப்பதோடு ‘உச்சி முகர்ந்து கன்னங்களில் மாறி மாறி முத்தமும் கொடுத்தால், அதைக் காணும் மக்கள் மெய் சிலிர்த்துப் புளகாங்கிதப்பட்டு ஆனந்தக் கண்ணீர் சிந்துவார்கள்.
செய்வார்களா நம் அரசியல்வாதிகள்?
.jpg)
.jpg)